அவருடைய வருகையின் அடையாளங்கள் THE SIGNS OF HIS COMING 62-04-07 Cleveland Tennessee U.S.A. 1. சகோ.லிட்டில்-ஃபீல்ட் உமக்கு நன்றி. நீங்கள் உட்காரலாம். எப்படியாவது இன்று இந்த இராபொழுதில் இந்த நேசமுள்ள சபைக்கு திரும்பி வருவது வீட்டிற்கு வருவதைப் போல் தோன்றுகிறது. (மேலும் சில நாட்களுக்கு முன்பாக கர்த்தருடைய வேலைக்கு இதை நான் அர்ப்பணித்ததை பெரிய சிலாக்கியமாக கருதுகிறேன்) என்னுடைய கிருபையுள்ள சகோ.லிட்டில்-ஃபீல்டுடன், மற்றும் அவருடைய மந்தையுடன் இங்கு இருப்பது; மேலும் டென்னஸ்ஸிற்கு அங்கே எப்பொழுதும் ஒரு அருமையான நல்ல வரவேற்புடைய கை குலுக்குதலுள்ள அருமையான பழைய கிளிவ்லேண்டுக்கு திரும்பி வந்தது பற்றி இன்றிரவு நிச்சயமாக நன்றாக உணர்கிறேன். நான் சிறிது காலத்திற்கு முன்பு சகோ.லிட்டில்-ஃபீல்டை அழைத்தேன் அல்லது தொடர்பு கொண்டேன். மேலும், அவர் "சகோ.பிரான்ஹாமே மீண்டும் வந்து எங்களைப் பார்ப்பதைக் குறித்து என்ன-?” என்று அவர் கேட்டார். நான், "எல்லாம் சரி சகோ.லிட்டில்-ஃபீல்ட், அதை செய்வதற்கு நான் மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது நான் போகிறேன், ஆனால் நான் ஏப்ரலில் திரும்ப வரும் போது நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்," என்று சொன்னேன். 2. நாங்கள் அரிசோனாவிலிருந்து வந்த பிறகு புளோரிடாவிற்குச் சென்று இப்பொழுது தான் திரும்பி வந்தோம். அந்த இரவில் நான் அவரை அழைத்தேன். அவரும் அவருடைய விலையேறப்பெற்ற சிறிய மனைவியும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள். ஆனால் ஊழியக்காரர்கள் போல, நான் எல்லா நேரங்களி லும் தயாராக இருக்கிறவன், "நல்லது, ஒரு ஊழியக்காரனை அழைப்பதற்கு நேரம் கடந்து போனதாக இருக்காது என்று நீங்கள் அறிவீர்கள்; அவர் எப்பொழுதும் எந்த நேரத்திலும் தயாராக இருப்பார்," என்று நான் நினைத்தேன். மேலும் அவர் அவ்விதமாகவே இருந்தார். அவருடைய மனைவி தொலை பேசியில் பதில் அளித்தார்கள், மேலும் அவர் கிட்டத்தட்ட கிரேக்க தேவனின் (Morpheus) கனவுகளின் கரங்களில் இருந்தார். (உங்களுக்கு தெரியும் உன்னதமான ஒருவருடைய தூக்கத்தை), ஆகவே அவர் இருந்தார். கர்த்தருக்குச் சித்தம் ஆனால், இந்த சனிக்கிழமை இரவு, மேலும் ஞாயிறு காலையிலும் நான் வருகிறேன் என்று அவரிடத்தில் சொன்னேன். நான் திரும்பி வந்தது. நிச்சயமாகவே ஒரு மிகப்பெரிய சிலாக்கியமாக இருக்கிறது. 3. இங்கே இந்த பட்டணத்தில் உள்ள சிட்டி வியூ தங்கும் விடுதி மற்றும் வெகி (lehi) தங்கும் விடுதியில் உள்ள அவர்கள் எங்களுக்கு காண்பித்த அந்த பணிவான உபசரிப்புகளுக்காக நான் என்னுடைய நன்றிகளை ஏறெடுக்கிறேன். அதோடு கூட எங்களுக்கு அறைகளையும் அர்பணித்தார்கள், எங்களுடன் இருந்த மக்களுக்கும் அறைகளைக் கொடுத்தார்கள். அவர்கள் அந்த அறைகளுக்குத் தேவையான பொருட்களையும் மற்றும் தள்ளுபடியையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் கிறிஸ்தவர்களை அந்த விதமாக உபசரிக்கிற இந்த இடம் வசிப்பதற்கு ஒரு அருமையான இடமாக உள்ளது. (அது சரியே) ஒரு நல்ல பழைய காலத்து பாணியில், தேவன் அனுப்பிய பெந்தெகொஸ்தே எழுப்புதலை தொடங்குவதற்கு ஒரு நல்ல இடமாக இருக்கிறது. அது அப்படியாக இல்லையா-? அல்லாமல் இங்கே வந்து இருந்து, பார்ப்பதற்கு இது தான் தேவனுடைய சபை, தலைமை இடமாக; சாலையின் கீழாக ஒரு சிறிய வழிகளுடன், வலது பக்கமாக ஒரு பெரிய முகாம்களை நான் கவனித்தேன். மேலும் இது ஒரு சிறந்த இடமாக இங்கே இருக்கிறது. அதனால் இது ஒரு நல்ல ஒரு எழுப்புதலுக்கான இடமாக இருக்கிறது. 4. மூன்று ஞாயிறுகளுக்கு முன்பாக, நான் என் வீட்டில் நான் படித்த காரியத்திலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டேன். அது இப்பொழுது இங்கே இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய சாதாரண ஞாயிறு காலை ஆராதனைகளில் ஒன்றில் நான் பிரசங்கித்தேன். (அது வெறும் 6 மணி நேரம் என்பது உங்களுக்குத் தெரியுமா-?) அது தான் இதுவாக இருந்தது; 6-மணி நேரம். அதை விசுவாசியுங்கள். அதனால்... என்னால் மூன்றிலிருந்து தொடங்க முடியவில்லை, உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நீங்கள் தயாரான பின்பு: ஓடுவதற்கு தயாராகும் போது, உங்களுக்குத் தெரியுமா உங்களால் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது. அங்கே சுவிசேஷத்தில் எந்த நடையும் இல்லை; உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு எந்த இடத்திலும் நிறுத்தும் இடம் கிடையாது. ஆகவே எங்களுக்கு ஒரு மகிமையான நேரம் உண்டாயிருந்தது. அதன் பிறகு. ஞாயிறு. கடந்த ஞாயிறு என்று நான் விசுவாசிக்கிறேன். எந்த நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும்; எந்த நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் குறித்தும் மறுபடியும் மூன்று மணி நேரம் வார்த்தையில் உபதேசத்தை கொண்டிருந்தோம். நாம் எங்கே இருக்கிறோம் என்றும்; திரும்பச் சென்று தீர்க்க தரிசனத்தைத் திரும்பக் கொண்டு வந்து, அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் இப்பொழுது இங்கே என்ன இருக்கிறது என்றும்; மேலும் எதிர்காலத்தில், "கர்த்தர் உரைக்கிறதாவது" என்ன என்பதையும்; வருகையையும் குறித்து வேதாகமம் என்ன பேசுகிறது என்பதைப் பார்ப்பது நமக்கு மகிமையான காரியமாய் இருக்கிறது. பாருங்கள் நாம் அது உண்மை என்று அறிந்திருக்கிறோம். அது ஒரு போதும் தோல்வி அடைய முடியாது. ஏனெனில் அது வார்த்தையில் இருக்கிறது. மேலும் வார்த்தையானது எப்பொழுதும் சரியாகவே இருக்கிறது. 5. இப்பொழுது நமக்கு ஒரு சில இரவுகள், எட்டு அல்லது பத்து இரவுகள்; இங்கே இந்த அழகான நாட்டிலே இங்கு சுற்றிலும் உள்ள சபைகளுக்கு அதை விளம்பரம் செய்து; எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்து ஐக்கியம் கொள்ளும் படியாய் நேரம் நமக்கு இருக்க விரும்புகிறேன். ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது. நான் கனடாவிற்கு தேசத்தின் உள்ளாக தொலைவில் உள்ள பகுதியிலுள்ள செவ்விந்தியர்களுக்காக (Red Indians) இப்பொழுதே போகிறேன். அது தேசத்திலுள்ள... மேலும் நான்... கடந்த இலையுதிர் காலத்தில் ஒரு சிறிய மிஷனரியுடன் அங்கே நான் இருந்த போது அதைக் கவனித்தேன்... அவர் ஒரு அருமையான குடும்பத்திலிருந்து வந்து இருந்தார்; ஆனால் அவருடைய கரங்களுக்குக் கீழாக மற்றும் சுற்றிலும் சிகப்பாக இருந்தது. நான் அவரிடத்தில் அது என்னவென்று கேட்டேன். அந்த இடத்தில் உள்ள ஈக்களும், மூட்டைப் பூச்சிகளும் அவரைக் கடித்ததினால் ஏற்பட்டதாம். அங்கே வெளியே அந்த செவ்விந்தியர்களுடன் இருப்பதற்கு நீங்கள் அவ்விதமாக அவர்களுடன் வசிக்க வேண்டும். 6. ஆப்பிரிக்காவில் நான் சாப்பிடும்பொழுது... இந்த உலகத்தில் அதை எப்படி செய்வது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது எல்லாவற்றிற்கும் தேவன் மாத்திரம் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் எப்படியும் அதைச் செய்து தான் ஆக வேண்டும். அதனால் மிஷனரியாகிய நீங்கள் அநேக மகிழ்ச்சியற்ற காரியங்களினூடாகச் செல்ல வேண்டியதாய் உள்ளது. ஆனால் நாம் கிறிஸ்துவுக்காக சிலரை சம்பாதிக்கும் படியாய் எல்லா காரியங்களுடனும் மக்களுடனும் நாம் எல்லாமுமாக இருந்தே ஆக வேண்டும். நான் எட்டி (Eddie) சகோதரனுக்கும் அந்த வழியில் செல்லும் அவருடைய பிள்ளைகளுக்காகவும் கூட நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மற்றும் சிறிய எட்டிபிஸ்கல் (Eddie Byscal) அவருடைய மனைவி அருமையான பெண்மணி அருமையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவளுடைய தகப்பனார் ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் சொந்தக்காரர், மேலும் அதற்கு தலைவராகவும் இருக்கிறார். எல்லாக் காரியங்களுக்கும் தங்களுடைய ஜீவியங்களை அந்த விதமாய் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். சகோ.லிட்டில்-ஃபீல்ட்டு அவர்களே நிச்சயமாக தேவன் தான் அதை எடுத்துச் செய்ய முடியும். அது உண்மையில் தியாகமாய் இருக்கிறது. 7. அங்கே கிட்டத்தட்ட எல்லோரும் கத்தோலிக்கர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள்; அவர்கள் தலைமையானவரை அவர்களோடு கொண்டு வந்து இருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அங்கே கீழே இறங்கி வந்து 4 அல்லது 5 இந்தியர்களோடு அவர்கள் மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்ததையும் அந்த மக்கள் யார் என்றும் சொல்லி அங்கேயே அவர்களை சுகப்படுத்தினார். அவர்கள் இப்பொழுது அந்த கடற்கரை பகுதியில் மேலும் கீழுமாகச் சென்று எரியச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் வர்த்தக ரீதியான மீனவர்கள். அவர்கள் தங்களுடைய படகுகளில் ஏறி வெளியே சென்று (படகுகளில் செல்லும் ஒரு வழி மாத்திரமே உண்டு) மிகத் தொலைவில் வான்கூவரைத் தாண்டி (Vancouver) விக்டோரியா மகாராணி தீவுக்கு அப்பால் செல்ல வேண்டும்; அங்கே அலாஸ்காவுக்கு நீங்கள் செல்ல அங்கு உள்ள கடற்கரை வழியாகவே செல்ல வேண்டும். அங்கே தான் நாங்கள் போய்க் கொண்டு இருக்கிறோம். அதன் பிறகு அலாஸ்கா நெடுஞ்சாலைக்கு அப்பால் உள்ள பரிசுத்த ஜான் கோட்டைக்குத் திரும்பி வந்து, பிறகு திரும்பி வர வேண்டும். 8. அதன், இங்கே மேலே உள்ள சதர்ன் பைன்ஸ் (souther pines)ஸுக்குக் கடந்து வந்து உங்களைச் சந்திக்க வேண்டும். அது 6, 7, 8 அல்லது 8, 9, ஜுன் 10 ஆக இருக்கிறது. அதன் பின் 11 மற்றும் 12-ல் சகோ.பிக்ஸ்பியுடனும்(Bigsby). கொலம்பியாவில் அவரை அநேகர் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று நான் நிச்சயத்திருக்கிறேன். அது சவுத் கரோலினா என்று நான் விசுவாசிக்கிறேன். அதன் பிறகு தாங்கள் அங்கிருந்து சௌத்கேட்டில் உள்ள கல்பேலஸ் (Cow Palace) செல்கிறோம். லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angless) அங்கே தாங்கள் ஒரு மிகப் பெரிய கூட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் அதனால் நாங்கள்... அதன் பிறகு அங்கிருந்து கலிபோர்னியா ஊடாகச் சென்று ஓரிகன், வாஷிங்டன் அதன் பிறகு ஆன்கரேஜ், அலாஸ்கா; அதன் பிறகு கர்த்தருக்குச் சித்தமானால் இந்த இலையுதிர் காலத்தில் திரும்பி வந்து, எங்கே தேவன் எங்களை வழிநடத்துவார் என்று பார்த்துக் கொண்டு இருப்போம். ஏதாகிலும் விசேஷித்த வழிநடத்துதல் இல்லை என்றால்; ஏதாகிலும் ஒரு வழி நடத்துதலை நாங்கள் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் நாங்கள் விதைகளை விதைத்துக் கொண்டு இருப்போம். அவ்வளவு தான். நீங்கள் எங்களுக்காக ஜெபிப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 9. இப்பொழுது உங்களுடைய மிகவும். அன்பான, பெருந்தன்மையுள்ள மேய்ப்பர்; இந்த வேளையிலே எனக்கு ஞாயிறு பாடப் பள்ளியை நடத்தும்படியான சிலாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த இரவு பொழுதில் வியாதியஸ்தருக்காக ஜெபத்தை ஏறெடுக்கும்படியாக ஒரு எண்ணத்தை அடித்தளமாகப் (Base) போடலாம் என்று எண்ணம் கொண்டிருந்தேன். மற்றும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கலாம் என்றும்; காலையிலே ஒரு ஞாயிறு பாடப் பள்ளியை கொண்டிருப்போம் என்றும் எண்ணினேன். ஒரு மனிதன் தன்னுடைய வாரக் கடைசி ஆராதனைகளில்; ஒரே வரிசையில் 2 முறை (Twice) தன்னுடைய பிரசங்க பீடத்தை அளிக்கிறாரோ; இப்பொழுது அது அருமையாயிருக்கிறது. "சகோ.லிட்டில்-ஃபீல்டு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்." அவர் ஒரு அருமையானவர், அருமையாண கிறிஸ்தவ சகோதரர். ஆகவே நாங்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். உங்களுக்கு இந்த காலை வேளையில் ஒரு கடமை இல்லாமல் இருப்பீர்கள் என்றால் எங்களுடன் வந்து கலந்து கொள்ளலாமே-! இந்த இரவுப்பொழுதில் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்க இருப்பது நலமாக இருக்கும் என்று எண்ணினேன். ஏனெனில் அங்கே இருக்கலாம். நம்முடைய சபை சிறியதாக இருக்கிறது. இப்பொழுது எல்லோ ரையும் ஒன்று சேர்க்க, சகோ.லிட்டில்-ஃபீல்டு மெய்யாகவே அருமையானவர். ஆகவே எல்லோரையும் கொண்டுவர ஒரு அரங்கத்தைப் பெற விரும்புகிறார். நான். "சகோ.லிட்டில்-ஃபீல்டே நான் அதிக நாட்கள் தங்க இயலாது வெறுமனே... உங்களுடைய சிறிய சபையிலேயே வைத்துக் கொள்ளலாம்," என்றேன். 10. சபையில் உள்ள ஒரு காரியமானது - அது புனிதமானதாக இருப்பதே. நான் ஒரு சபையை விரும்புகிறேன்.., நீங்களும் விரும்புகிறீர்கள் அல்லவா-? உங்களுக்குத் தெரியும் இந்த அரங்கங்களுக்குச் சென்று இருக்கிறீர்கள்... இப்பொழுது அதை நமக்குக் கொடுத்த தர்மகர்த்தாக்கள் மற்றும் அதைப் போன்றவர்கள் அருமையானவர்கள். அவர்களைப் பாராட்டுகிறோம். வெளியில் உள்ளவைகளில், உள்ளவற்றைப் பாருங்கள். அங்கே எல்லாவிதமான ஆபாசங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் எல்லாவிதமான உலகக் காரியங்களும் உள்ளதையும்; பிசாசின் ஆவிகள் தொற்றிக் கொண்டிருப்பதையும் காணலாம். இவைகள் யாவும் பிசாசுகளால் உள்ளே வருகின்றன. நீங்கள் சபைக்கு செல்லும் போது அங்கே பரிசுத்தாவியானவர் இருக்கிறார். ஆகவே பொது அரங்கங்களு க்கும் சபைக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியும். 11. இன்று அல்லது வேறொரு நாளில் நான் அரிசோனாவிற்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது சம்பவிக்கப் போகும் ஒன்றைக் கர்த்தர் எனக்குக் காண்பித்து, நான் எழுதி வைத்துள்ளதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். மேலும் அதை நான் மக்களிடத்தில் சொல்லவில்லை என்றால் அதை வழக்கமாக எழுதி வைத்துக் கொள்வேன். அவர் காண்பிக்கிற அந்த காரியங்கள் எல்லாவற்றையும் நான் சொல்ல முடியாது. ஆனால் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர்... இங்கே வேதாகமம் இருக்கிறது, இது அவர் தங்கியிருக்கிறதான வீடு, இங்கே மக்களாகிய உங்களுடன் வாசம் பண்ணுகிறார். மேலும் இது உண்மையாய் இருக்கிறது என்பதை அவர் அறிவார். 12. ஆறு வாரங்களுக்கு முன்பாக ஒரு காலை வேளையில் என்று அதைப் பற்றி யூகிக்கிறேன்... நான் சகோதரன் சாத்மனுடனும், (Sothman) சகோதரன் உட்டுடனும் அவர்கள் இருவரும் ஜெபர்ஸன்வில்லில் உள்ள கூடாரத்திற்கு, தர்மகர்த்தாக்கள் அவர்களுடன் அரிசோனா சாலையில் இருந்தேன் - நான் ஒரு வினோதமான ஒரு காரியத்தை, ஒரு தரிசனத்தில் பார்த்தேன். அங்கே இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நன்றாக (குத்துச் சண்டையிடும் போது அணியும் உடை) உடுத்தினவர்களாய் அந்த விதமாக இருந்தார்கள். மேலும் அவர்கள் இருவரும் ஒருவிதமான குத்துச் சண்டை போடுகிறவர்களாக இருந்தார்கள், அவர்கள் அவ்விதமான ஆடையுடன் இருந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையான குத்துச் சண்டையிடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் சண்டையிட விரும்பினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பகை உணர்வு கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்... அவர்கள் சண்டையிட தயாரானார்கள்... அது பார்ப்பதற்கு நியூயார்க்கில் (Newyork) உள்ளது போல இருந்தது. அங்கே அந்த அரங்கத்தை நோக்கி நானே வந்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அங்கே நான் அதிகமாக பிரசங்கித்து இருக்கிறேன். பார்ப்பதற்கு வட்ட வடிவமான இடமாக, அங்கே ஒரு சின்ன ஓட்டை (hole) போல இருந்தது. அவர்கள் உள்ளே சென்று சண்டையிடத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை கொன்று விட்டார். மேலும் பார்ப்பதற்கு ஈரமான அல்லது தண்ணீரைப் போல் ஏதோவென்றை நான் பார்த்தேன், அதன் பிறகு ஒரு செலாபான் (ஒளி ஊடுருவிச் செல்லும் காகிதம்) போன்று காணப்பட்ட ஒன்று ஒருவருடைய பாதங்களில் சுற்றப்பட்டிருந்தது. எல்லா காரியமும் உண்மையிலே அமைதியாக இருந்தது; மேலும் அங்கே சோகமாக இருந்தது. அவர் கொல்லப்பட்டார்... ஒரு சண்டையில் ஒருவர் மற்றவரைக் கொன்று போட்டார். நான் நினைத்தேன் நல்லது எனக்குச் சரியாக இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை, கர்த்தாவே-! நான் விரைவாக அதை இந்த விதமாக குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டேன். மேலும் நான்... அந்த நாளிலே என்ன நடந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் நியூயார்க்கில் இரண்டு வெல்டர் வெயிட் (Welter weight 141 முதல் 147 பவுண்டுகள் எடையுள்ள குத்து சண்டைவீரர்கள்) சண்டை இட்டதில், ஒருவர் மற்ற ஒருவரை கொன்று போட்டார். பாருங்கள்-! 13. அவர் (கர்த்தர்) உண்மையில் நல்லவராக இருக்கிறார். இந்த காரியங்கள் எல்லாவற்றையும் நாம் அறிந்து கொள்ளும்படியாய் அவர் நல்லவராய் இருக்கிறார் அல்லவா-? அது உண்மையில் சபையைச் சார்ந்ததாக காணப்பட வில்லை. அது காரணமாக இருக்கவில்லை. அதனால் அதை அப்படியே போக விட்டுவிட்டேன். சிறிது நேரத்திற்கு முன்பாக வரை ஒரு போதும் நான் அதை அறிந்து கொள்ளவில்லை. ஆம் ஐயா, நான் என்னுடைய சிறிய புத்தகத்தில் அதை எழுதி வைத்துக் கொண்டேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பாருங்கள். அது ஏதோ ஒன்று... அது என்னவாய் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. நான் அவைகள் கீழே இறங்கி வருவதைப் பார்த்தேன். உண்மையில் அவர்கள் அந்த ஓட்டை (hole) போன்ற அந்த இடத்துக்குப் போனது. அது குத்துச் சண்டைபோடும் வளையத்திற்குள் இருப்பதாகும். மேலும் அவர்கள் பகைமையில் சண்டை இடுவது போல சண்டையிட்டு ஒருவர் மற்றவரைக் கொன்று போட்டார். அதனால் வேறொரு சண்டையில் அந்த அவர்கள் இருவரும் அதே போன்று.... தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அவ்விதமாகும் போது அவர்களை அப்படியே விட்டு விலகுவதற்குரிய நேரம் அதுவே. மற்றுமொரு காயீன், ஆபேல் விவகாரத்தை போல; நீங்கள் பாருங்கள் சகோதரன் சகோதரனைக் கொன்று போட்டான். ஆனால் நாம் பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தில் வரும்படியாய் சகோதரர்களை திரும்ப மீட்டுக் கொண்டு வருகிற முயற்சியில் மகிழ்ச்சி அடைகிறோம். 14. இப்பொழுது அங்கே மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்களை நாம் நீண்ட நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. இங்கே சில வேத வாக்கியங்களை வைத்திருக்கிறேன். அதை நான் படிக்க விரும்புகிறேன். இங்கே சில குறிப்புகளையும், சிறிய கருத்துக்களையும் அதைப் போன்ற வேத வாக்கியங் களையும் எழுதி வைத்திருக்கிறேன். சிறிது நேரம் அவற்றிலிருந்து நான் பேச விரும்புகிறேன். மேலும் நம்மால் முடியும் என்றால் நாம் நம்முடைய தலைகளை முதலில் ஜெபத்திற்காக தாழ்த்துவோம். இப்பொழுது இங்கே இருக்கிறவர்கள், ஜெபத்தில் நினைவு கூற விரும்புகிறவர்கள். உங்கள் கரத்தை தேவனுக்கு முன்பாக உயர்த்தி இப்பொழுது கர்த்தாவே என்னை நினைவு கூறும் என்று சொல்லுங்கள். அவர் ஒவ்வொரு கரத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வாலிபமான பெண் பிள்ளைகளை, பையன்களை, மக்களை, வாலிப வாலிபமான மற்றும் வயதானவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் எல்லோரும் நித்தியத்தை எதிர் நோக்கி இருக்கிறோம் என்று அறிவோம். 15. எங்கள் பரலோகப் பிதாவே, மற்றுமொரு முறை இந்த இரவுப்பொழுதில் உம்முடைய கிருபாசனத்தை நாங்கள் அணுகுகிறோம். நாங்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களாய் உம்மிடத்தில் வருகிறோம். "நீங்கள் பிதாவிடத்தில் என் நாமத்தில் எதைக் கேட்டாலும் நான் அதைச் செய்வேன்," என்றீர். இப்பொழுது அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மை என்று அறிந்து இருக்கிறோம். அதனால் கிருபாசனத்தண்டையில் நாங்கள் வருகிறோம். அது இன்னுமாய் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டதாய்; "பிதாவே அவர்களை மன்னியும்", என்று கதறிக் கொண்டிருக்கிறது. பிதாவே உண்மையில் நாங்கள் இந்த இருண்ட உலகத்தில் நடப்பதாலும் அது அவ்விதமாக இருப்பதாலும் சில நேரங்களில் உண்மையாகவே தடுமாறுகிறோம். எங்களுக்கு இருக்கும் அந்த பரிசுத்தாவி, சுவிசேஷ ஒளி எங்களை வழி நடத்துகிறது. இல்லை என்றால் நாங்கள் தடுமாறி நம்பிக்கை அற்றவர்களாய், தேவன் இல்லாதவர்களாய், அந்த நித்தியமான இருளில் விழுகிறவர்களாக இருப்போம். ஆனால் அந்த கலியாண விருந்துக்கு வரும்படியாய் எங்களுக்கு அழைப்பைக் கொடுத்து எங்களுக்கு நீர் ஒரு வழியை உண்டாக்கினதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இரவில் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிற கூட்டத்தாரோடு கூடி வந்திருப்பது என்ன ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. கலியாண விருந்துக்காக அழைப்பு விடுத்து ஆடை அணிவித்து வர இருக்கும் கலியானத்திற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டவர் களாய் இருப்பது போன்று அது இருக்கிறது. இதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இந்த இரவில் இந்த தேசத்தில் அதிக தேவை இருக்கிறது. கர்த்தாவே, சபையில் ஒரு தேவை இருக்கிறது. இந்த விலையேறப்பெற்ற கரங்களையும் அதற்குப் பின்னால் இருக்கிறதான காரியங்களையும், இருதயத்தில் உள்ளவைகளையும் நீர் அறிந்திருக்கிறீர், தேவனே, தனிப்பட்ட ஒவ்வொருவருடைய இருதயத் தையும் நீர் கண்ணோக்கிப் பார்த்து அவர்களுடைய வேண்டுதல்களுக்கு பதில் அளிப்பீராக. அதுவே உம்மிடத்தில் என்னுடைய ஜெபமாய் இருக்கிறது. பிதாவே-! 16. இந்த சபைக்காகவும் அதினுடைய மகிமையான நிற்றலுக்காகவும்: இருளான நேரங்களிலும் கூட இந்த சபை ஒரு கலங்கரை விளக்காக (light house), ஒரு மலையின் மேலாக வைக்கப்பட்ட ஒரு வெளிச்சமாக: அதின் ஒளிக்கதிர்களால் பிரகாசித்து, தேசம் முழுவதும் உள்ள சோர்வுற்றவர்களும், பாவ வியாதியுள்ள மக்களும் உள்ளே வந்து எங்களுடன் சிறிது காலம் தங்கி ஒரு நல்ல தேசத்தில் சஞ்சரிக்கும்படியாய் இருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே. இந்த சபையினுடைய மேய்ப்பரை-! அருமையான எங்கள் சகோதரனை-! ஆசீர்வதியும் அவருடைய தர்மகர்த்தா குழுவிற்காகவும், டீகன் குழுவிற்காகவும், மேலும் ஒவ்வொரு அங்கத்தினருக்காகவும் இந்த மக்களோடு யாத்திரையில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த தேசத்தின் ஊடாக இருக்கிற மிகச் சிறந்த சபைகளுக்காகவும், தேவ சபைக்காகவும், சர்வதேச அளவில் அதினுடைய மகத்துவத்தில் நின்று கொண்டு இருக்கிறதான இரு சாரார்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, ஏதோ ஒரு நாளிலே நாங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஒன்றாக கூடி இருப்போம். ஒரே ஐக்கியமாய் சேர்ந்து கொள்ளும் காலம் வரும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இதை அருளும் கர்த்தாவே. இப்பொழுது இந்த முன் மாரியிலே விதைகளை விதையும், அப்பொழுது அது முதிர்ச்சி அடைந்த சுவிசேஷ விதைகளை பின்மாரி விழத் துவங்கும் போது கொண்டு வரும். இதை அருளும் கர்த்தாவே. எங்களை இந்த இரவுப்பொழுதில் ஆசீர்வதியும், உம்முடைய அற்ப பிரயோஜனம் உள்ள ஊழியக்காரனாக, எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிற இந்த வார்த்தைகளை ஒரு சில வினாடிகளுக்கு பேச முயற்சிப்பதை ஆசீர்வதியும், நீர் எங்களுக்கு ஒரு பொருத்தமான பொருளை இந்த பாடத்திற்கு கொடுப்பீராக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 17. இப்பொழுது இன்று இந்த இரவின் பொழுதிலே பேசும் போது. நாங்கள் ஜீவிக்கிறதான இந்த நாளுக்கான தெய்வீக சுகமளித்தலின் ஒளியை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு, இந்த நாளுக்கான சுவிசேஷத்தை நான் காட்ட முயற்சி செய்கிறேன், விடுதலையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது தான் என்றும் கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். எரேமியாவின் புத்தகத்தில் 10-ம் அதிகாரத்தில் 2-வது வசனத்தை வாசிப்போம். "புறஜாதிகளுடைய மார்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளால் கலங்காதிருங்கள்" "புறஜாதிகளுடைய (அஞ்ஞானிகள் உடைய) மார்கத்தைக் கற்றுக் கொள்ளாது இருங்கள்", இப்பொழுது, "வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் (அஞ்ஞானிகள்) கலங்குகிறார்களே என்று சொல்லி நீங்கள் அவைகளால் கலங்காதிருங்கள்", இப்பொழுது, ''அவருடைய வருகையின் அடையாளங்கள்," என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். 18. குறிப்பாக உங்களிடத்திலிருந்து... இங்கே கிளிவ்லேண்டு அதை சுற்றிலும் உள்ள தேவ சபை மக்களை நான் கவனித்தேன். (சாலையின் வழிநெடுக நான் பார்த்தவை அவர்களுடைய சபைகள் தான் என்று நினைக்கிறேன்) "ஆயத்தம் ஆகுங்கள் இயேசு கிறிஸ்து விரைவில் வருகிறார்," என்ற ஒரு கோஷம் போன்ற, அந்த வகையான கவர்ச்சியான வாசகங்கள் அவர்களிடத்தில் உள்ளது என்று நான் நினைக்கிற வேளையில் நான் இந்தப் பொருளை எண்ணினேன். நல்லது, இப்பொழுது தேவன், எல்லா காலங்களினூடாக எப்பொழுதும் முதலில்... அவர் எந்த காரியத்தைச் செய்யும் போதும், முதலில் மக்களை எச்சரிக்கிறார், அந்தக் காரியத்தை அணுகும் படியான காரியத்தையும் ஒரு அடையாளமாகக் கொடுக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இயற்கை அதை தானாகவே செய்கிறது. வசந்த காலம் வருவதற்கு முன்பாக வானில் வெப்பத்தை உண்டாக்குகிறது; குளிர்காலம் வருவதற்கு முன்பாக குளிர்ச்சி ஆக்குகிறது. ஓ, என்னே, நாம் இப்பொழுது எல்லா இயற்கையையும் சொல்லிக் கொண்டே போக முடியும்... ஆகவே இயற்கையை உண்டாக்கினவர் செய்ய வேண்டிய கடமைகளை அது செய்கிறது. ஏதோ ஒரு காரியம் அது நடக்கப் போகிறது என்கிற ஒரு அடையாளத்தை அல்லது ஒரு அதிசயத்தை உண்டாகச் செய்கிறது. அதனால் அவருடைய நியாயத்தீர்ப்புகள் நீதியாக்கும்படி செய்கிறது; ஏனெனில், நீங்கள் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டீர்கள். 19. இப்பொழுது ஒரு மனிதன் நிற்க வேண்டிய விளக்கின் முன் வந்து அது சிவப்பாக திரும்பினவுடன் அவன் ஒரு எச்சரிப்பை பெற்றுக் கொள்வான் என்றால், இப்பொழுது அவன் நன்றாக அறிந்திருக்கிறான். இப்பொழுது அங்கே நிறுத்தும் விளக்கு இல்லை என்றால் அதன் பிறகு அது அந்த பட்டணத்தின் தவறாகும்; அல்லது எப்பொழுதும் யாருக்கும் அந்த நிறுத்தும் அடையாளம் அங்கே இல்லை என்றால்-! அதை அங்கே நிச்சயமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் தேவன் எப்பொழுதும் ஏதோ ஒரு காரியம் நடப்பதற்கு முன்பாக ஒரு எச்சரிப்பின் அடையாளத்தைக் கொடுப்பார்-! பாருங்கள்-! அதை நான் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். நான் இதை கடந்த வருடத்தைக் காட்டிலும், கிறிஸ்துவின் அணுகுதலை, தேவனுடைய வருகையை... இப்பொழுது வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்... இந்த இரண்டில் ஒன்று சத்தியமாக இருக்க வேண்டும் அல்லது அது சத்தியமாக இருக்காது. வேதாகமம் சரியாக இருக்க வேண்டும் அல்லது அது சரியில்லாததாக இருக்கும். நீங்கள் அறிந்துள்ளபடி நான் வெறுமனே வேதாகமத்தை விசுவாசிக்கிறவன். 20. இப்பொழுது தேவன் ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டு இந்த உலகத்தை நியாயம் தீர்க்கவேண்டும். அவர் ஒரு சபையைக் கொண்டு அதை நியாயம் தீர்ப்பார் என்றால்; எந்த சபையை கொண்டு அவர் நியாயம் தீர்ப்பார்-? "நாங்கள் தான் அது," என்று கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள். "நாங்கள் தான் அது," என்று லூத்தரன்கள் சொல்கிறார்கள். "நாங்கள் தான் அது," என்று மெதொடிஸ்டுகள் சொல்கிறார்கள். "நாங்கள் தான் அது," என்று பாப்டிஸ்டுகள் சொல்கிறார்கள். "நாங்கள் தான் அது,” என்று பெந்தெகொஸ்தேயினர் சொல்கிறார்கள். மேலும் அங்கே 30 அல்லது 40 அல்லது 50 'நாங்கள் தான் அது,' என்கிற வேறுபாடுள்ள பலவகையான கிளைகள் இருக்கின்றன. அதனால் 'அது,' யாராய் இருக்கிறது-? இப்பொழுது அங்கே அநேக குழப்பங்கள் இருக்கிறது. இன்னும் கூட.. ஒரு மனிதன் எந்த ஒரு விசுவாசத்தையும் குழப்பத்தின் மேலாக ஆதாரப்படுத்த முடியாது. நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் அவள் ஒரு சீமாட்டியாக இருக்க போகிறாளா அல்லது இல்லையா என்று குழப்பம் உண்டானால், அவளை தனியே விட்டுவிடுவது, மனிதனைப் பற்றியும் அதே காரியம் தான். நீங்கள் விசுவாசம் கொள்ள ஏதோ ஒன்றை ஆதாரமாகப் பெற்றிருக்க வேண்டும். 21. நாட்களுக்கு முன்பாக அல்ல, ஒரு ஆசாரியனுடன் பேசிக் கொண்டு இருந்தேன், என்று அவர் சொன்னார், தான் அவரிடத்தில் அதைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தேன்... ஒரு ஸ்திரீ என்னுடைய சபைக்கு வந்து கொண்டிருந்தார்கள். நான் அவளுடைய மகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். அவள் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டாள். மேலும் அவள் ஒரு கத்தோலிக்காக மாற வேண்டும் என்று விரும்பினாள். அவள் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்று இருந்தான். அதனால் அவளுக்கு நீங்கள் ஞானஸ்நானம் கொடுத்தீர்களா-? என்று அவர் என்னிடத்தில் அதைக் குறித்துக் கேட்டார். "ஆம்", என்று நான் சொன்னேன். "நீங்கள் அவளுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்தீர்களா"-? என்று அவர் கேட்டார். நான் அவளுக்கு கிறிஸ்தவ ஞானஸ்நானத்தை கொடுத்தேன். பாருங்கள்: 'முழுக்கு ஞானஸ்நானத்தினால்,'' என்று நான் சொன்னேன். "கத்தோலிக்க சபை அதை வழக்கமாகச் செய்து கொண்டிருந்தது. உங்களுக்கு தெரியுமா-?" என்று அவர் சொன்னார். "எப்பொழுது-?" என்று நான் கேட்டேன். "நல்லது இயேசு கிறிஸ்துவும் மேலும் அப்போஸ்தலர்களும்," என்று அவர் சொன்னார். "அது கத்தோலிக்க சபை என்று நீங்கள் சொல்கிறீர்களா-?" என்று நான் கேட்டேன். "ஆம் ஐயா." என்று அவர் சொன்னார். "606 வருடங்களுக்கு முன்பாக கடைசி அப்போஸ்தலருடைய மரணத்திற்கு பிறகு கத்தோலிக்க சபை, எப்பொழுதாவது இருந்ததாக ஒரு வரலாற்றை எனக்கு காண்பியுங்கள்," என்று அவரிடத்தில் நான் கேட்டேன். "இங்கே, நிசாயா பிதாக்கள், நிசாயாவிற்கு முன்பாக, நிசாயாவிற்கு பின்பாக-? பெம்பெர்மனுடைய இரண்டு... பெம்பெர்மனுடைய "ஆதிகாலங்கள்," ஹிஸ்லோப்பின் (hylops) இரண்டு பாபிலோன்கள், "பாக்ஸிஸ் (foxes) இரத்த சாட்சிகளின் புத்தகம்" ஒ, பிராட்பென்மன் "ஆதிசபை," எல்லா புனித புத்தகங்கள் எனக்கு தெரிந்தவைகள் யாவும் இங்கே இருக்கிறது. எனக்கு ஒரு பக்கத்தை எப்பொழுதாவது காண்பியுங்கள்," என்றேன். பாருங்கள். 22. "நீங்கள் ஒரு வேதாகம நிலைப்பாட்டிலிருந்து விவாதம் செய்ய முயற்சிக்கிறீர்கள்", என்று அவர் சொன்னார். "எங்களுக்கு என்னவென்று அக்கரை இல்லை... அவ்வளவாய் என்ன அதில்; தேவன் தன்னுடைய சபையில் இருக்கிறார். நாங்கள் தான் சபை." என்று சொன்னார். "நீங்கள் பரிசுத்த சபையாக இருந்தால், வேதாகமம் சொல்வதுடன் நீங்கள் ஏன் தரித்திருக்கிறதில்லை-?. அவர்கள் தான் சபை ஒழுங்கை ஏற்படுத்தினார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், நீங்கள் அதை மாற்றுகிறீர்கள்..." என்று நான் சொன்னேன். "நாங்கள் சபையினுடைய ஒழுங்கை மாற்றுவதற்கு உரிமை பெற்றிருக்கிறோம். தேவன் எங்களுக்கு அந்த உரிமையை கொடுத்திருக்கிறார்," என்று அவர் சொன்னார். "அப்படி என்றால் அந்த அப்போஸ்தலர்கள், கத்தோலிக்கர்களாக இருந்தால்... அவர்கள் அப்படி இருந்ததாக சொல்கிறீர்கள். அவர்கள் அந்த ஒழுங்கை பெற்று இருந்து அதன்படி அவர்கள் செய்தார்கள். நீங்கள் திரும்ப அந்த ஒழுங்கை திருப்பிக் கொண்டு வருவது நன்றாக இருக்கும்," என்றேன். அது தான் சரி. "தேவன் தன்னுடைய சபையில் இருக்கிறார் திருவாளரே," என்று அவர் சொன்னார். "தேவன் தன்னுடைய வார்த்தையில் இருக்கிறார். அவர் தன்னுடைய வார்த்தையில் மட்டும் இல்லை, ஆனால் அவரே வார்த்தையாய் இருக்கிறார். சரியே, அவர் தான் வார்த்தை. தேவன் தான் வார்த்தை," என்று நான் சொன்னேன். 23. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி (பிரத்தியட்சமாகி) நமக்குள்ளே வாசம் பண்ணினார்". இப்பொழுது இங்கேயே நம்முடன் இருக்கிறார், தேவனுடைய வார்த்தையாய், உரைக்கப்பட்ட வித்தாய், ஏதேன் தோட்டத்திலிருந்தே அப்பொழுது "ஒவ்வொரு விதையும் அதினுடைய ஜாதியை முளைப்பிக்கக்கடவது," என்ற போது அது தான் சரி. ஏவாள் தாறு மாறான போது, பிசாசுடைய ஒரு பொய்க்கு செவி கொடுத்ததால், தன்னுடைய கர்ப்பத்தில் ஒரு தவறான வித்தை பெற்றுக் கொண்டாள். தன்னுடைய ஆத்துமாவில் ஒரு வார்த்தையை மாற்றிக் கூறினதை விசுவாசிக்கும்படியாய்... நீங்கள் தேவனுடைய எந்த ஒரு வார்த்தையையும் மாற்ற விரும்பக் கூடாது. வேதாகமம் என்ன சொல்கிறதோ அதையே சொல்லுங்கள். எந்த ஒரு தீர்க்க தரிசனத்திற்கும் தனிப்பட்ட வியாக்கியானம் இல்லை என்று வேதாகமம் சொல்கிறது. ஏன்-? தீர்க்கதரிசனம், தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரம் தான் கொடுக்கப்படுகிறது. மேலும் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகள் இடத்திற்கு மாத்திரமே வருகிறது. அது எப்படி இருந்ததோ அதே வழியாக அவர்கள் வியாக்கியானம் செய்தார்கள். அதனால், அங்கே அதனுடன் எந்த ஒரு வாக்கு வாதமும் கிடையாது. 24. அதன் பிறகு வெளிப்பாடு 21-ல் தேவன் சொன்னதை நாம் பார்க்கிறோம்... அல்லது 22-ல் அது இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஒருவன் இந்த தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் கூட்டினாலும் அல்லது எடுத்துப் போட்டாலும்..." அதனால் அது முற்றிலுமான தேவனுடைய வார்த்தையாகும் இந்த உலகம் இந்த வார்த்தையினால் நியாயம் தீர்க்கப்படப் போகிறது. அதனால் நாம் அதை புரட்டிப் போட விரும்பவில்லை. நாம் அதற்கு மேலான காரியத்தையோ, அல்லது அதற்கு குறைவான காரியத்தையோ நாம் சொல்ல விரும்பவில்லை. அது வெறுமனே எப்படி இருக்கிறதோ அதை அப்படியே சொல்ல வேண்டும். மேலும் அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும். அது அப்படியே சரியாக உற்பத்தி செய்வதை நான் கண்டு கொண்டேன். ஏனெனில் ஒவ்வொரு விதையும் அதினுடைய வகையைக் கொண்டு வர வேண்டும். இப்பொழுது ஏவாள்... அவள் அதை விசுவாசிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவள் ஞானத்தைத் தேடிக் கொண்டிருந்தாள். தேவனுடைய வார்த்தையின் மேலாக பிசாசானவன் எப்பொழுதும் இதனுடைய அர்த்தம் இது அல்லது அதனுடைய அர்த்தம் அது என்று தன்னுடைய சொந்த வியாக்கியானத்தை அல்லது ஒரு சிறிய ஞானத்தை வைக்க முயற்சிப்பான். தேவன் என்ன சொன்னாரோ அது சரியாக அதைச் செய்யும். அது தான் அதனுடைய அர்த்தம். மேலும் நாமும் அதையே அந்த விதமாகச் சொல்ல வேண்டும். அது தீர்மானம் செய்யும். அந்த வழியாகத் தான் நான் அதை விசுவாசிக்கிறேன். அது உண்மை என்று எனக்குத் தெரியும், ஏனெனில் அவர் அதை பிரத்தியட்சமாக்கி மேலும் அது உண்மையாய் இருக்கிறது என்று நிரூபிப்பார். பாருங்கள். 25. இப்பொழுது தேவனுடைய வார்த்தையில் ஒரு சிறிய புரட்டிக் கூறுதலினால் ஒவ்வொரு மரணமும், ஒவ்வொரு துயரமும், ஒவ்வொரு இருதய வலியும், எல்லா காரியங்களும் ஏற்படுகிறது. தேவனுடைய வார்த்தையை சிறிது புரட்டுவதால் நாம் அநேக தொல்லைகளுக்குள்ளாகப் போகிறோம் என்கிற போது அதனுடன் அவர்கள் ஏற்றுக் கொண்டு போகவில்லை என்றால்... அது நமக்கு 6000 வருடங்களாக இருதய வலிகளை விலையாகக் கொடுக்கிறது. மேலும் தேவனுடைய குமாரன் இந்த பூமிக்கு வந்து மரித்து, மனித குலத்தை மீட்டும் கூட ஒவ்வொரு போரும். ஒவ்வொரு இருதய வலியும், திருமணம் ஆகாத ஒவ்வொரு தாய்மார்களும், அந்த ஒரு நபர் (ஏவாள்) அவிசுவாசித்ததினால் இந்த உலகத்தில் ஒவ்வொரு காரியமும் தவறாகப் போய்விட்டது. 99.99 சதவீதம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து முடிவிலே ஒரு மிகச் சிறிய வார்த்தையை புரட்டினதால் இந்த எல்லா காரியங்களும் ஏற்பட்டது. அதன் பிறகு எந்த இடத்திலாவது ஒரு திருத்திக் கூறுதலோ... தேவனுடைய முழுமையான வார்த்தையை விட குறைவான ஏதாவது ஒரு காரியம் செய்து, நம்மால் திரும்பி வர முடியும் என்று நினைக்க வேண்டாம். அதை அப்படியே விசுவாசியுங்கள். அதன்படியே நில்லுங்கள். அது சொல்கிற விதமாகவே நாம் சொல்ல வேண்டும். 26. தேவன் தன்னுடைய அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அணுகுகிறார். "அஞ்ஞானிகளுடைய வழிகளில் சாராதிருங்கள்." இப்பொழுது அஞ்ஞானி உண்மையில் யார் என்றால், வியாக்கியானத்தின்படி அவிசுவாசி யாய் இருக்கிறது. பாருங்கள், அஞ்ஞானியின் வழியைக் கற்றுக் கொள்ளாது இருங்கள்," அவனிடத்திலிருந்து தூரமாய் இருங்கள். அதனுடன் எவ்விதத்திலும் ஐக்கியம் கொள்ள வேண்டாம், அவன் ஒரு அவிசுவாசி. அவன் ஒரு அவிசுவாசி என்று அடையாளம் குறிக்கப்பட்டிருக்கிறான். ஒளியும் இருளும் ஒரே நேரத்தில் உண்டாகுமோ-? சூரியன் ஒளிரும் போது இருளாய் இருக்க முடியுமா-? ஒரு போதும் இல்லை. எது அதிக வல்லமை உடையதாய் இருக்கிறது. இருள் சூரியனைத் தள்ளி வைக்க முடியுமா-? இல்லை ஐயா. சூரியன் இருளைத் தள்ளி வைக்கிறது. பாருங்கள், வெளிச்சம். அது சரியாகவும், தவறாகவும் இருக்கிறது. அதனால் தவறு ஒரு போதும் சத்தியத்திற்கு முன் ஜீவிக்காது. மேலும் ஒரு பொய் சத்தியத்திற்கு முன் ஜீவிக்காது. சத்தியம் எப்பொழுதும் அப்படியே இருக்கும். புரட்டினாலும் கூட ஒரு பொய் இன்னுமாய் ஒரு பொய்யாகவே இருக்கும். பாருங்கள், ஆகவே, வெறுமனே... அது சத்தியமாக இருக்கிறது. 27. அவிசுவாசியுடைய வழியைக் கற்றுக் கொள்ள வேண்டாம். இப்பொழுது அவன் ஒரு அவிசுவாசியாய் இருப்பான் என்றால், அவன் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினால் அவன் அப்படியே இருக்கட்டும், ஆனால் நீங்கள் ஒரு விசுவாசியாக இருங்கள். அஞ்ஞானிகள் என்றால் அவிசுவாசி. யாராகிலும் அது என்னவென்று விசுவாசிக்காமல் ஓ, "நான் தேவனை விசுவாசிக்கிறேன் என்று சொல்லலாம்", நீங்க தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லை என்றால், பிறகு நீங்கள் தேவனை விசுவாசிக்கவில்லை. அது சரியே-! ஒருவன் என்னை சிநேகிக்கிறேன் என்று சொல்லியும். என்னுடைய கற்பனைகளைக் கைக் கொள்ளாவிட்டால் அவன் பொய்யனாய் இருக்கிறான். அவனிடத்தில் சத்தியம் இல்லை. அதனால் நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும்போது அது நாம் தேவனை விசுவாசிப்பதை நிரூபிக்கிறது. நீங்கள் என்னை நேசிக்கிறேன் என்று சொல்லியும் நான் சொன்னதை செய்யவில்லை. என்றால், அல்லது நான் சொன்னதை காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நீங்கள் செய்யவில்லை என்றால், அப்படியே எனக்கும் கூட நான் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்லியும் நான் செய்யவில்லை. என்றால் ஏன். நீங்கள் பாருங்கள், நாம் அதைச் செய்யவில்லை என்று நிரூபணம் ஆகும் போது நாம் ஒருவருக்கு ஓருவர் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறோம். ஆகவே சிருஷ்டிப்பானது சிருஷ்டிகர் மேலாக நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும். அப்பொழுது அதன் ஊடாக ஒரு ஐக்கியம் ஏற்படுகிறது. 28. இப்பொழுது அது இதைப் போன்று உள்ளது. நீங்கள் ஒரு மின் கம்பியை (wire) எடுத்து அதை ஒரு மின் ஆக்கி (Dynamo) இயந்திரத்தில் இணைக்கிறீர்கள். அங்கே மின்சாரம் இருக்கும் அல்லது ஒரு மின் கம்பியை எடுத்து அதை ஒரு மின்னிணைப்பு குழியில் (socket) சொருகுங்கள். அங்கே மின்சாரம் இல்லை என்றால் பாருங்கள், அது வித்தியாசமாக இருக்கிறது, அது எவ்வளவு தான் அந்த மின்னிணைப்பு குழியில் உள்ளே இருந்தாலும் காரியமில்லை. அது ஒரு பயனற்ற கம்பியாக இருக்கிறது. அதில், அங்கே மின்சாரம் இல்லை என்றால், அது ஒரு பயனற்ற கம்பியாய் இருக்கிறது. நாம் ஏதோ ஒரு காரியத்துடன் நம்மை இணைக்க முயற்சி செய்து அதில் எந்த ஜீவனும் இல்லாமல் அல்லது எந்த ஒரு உண்மையும் அதில் இல்லாமல் இருந்தால், அது இன்னுமாக அதில் மின்னல் இல்லாத ஒரு செத்த இடியாக இருக்கும். அது சரியே. ஆனால் நாம் வார்த்தையுடன் இணைந்து இருக்க வேண்டியவர்களாய் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையுடன். அதுதான் தேவனுடைய சத்தியமாக இருக்கிறது. 29. அவர்களுடைய வழியை சார்ந்து கொள்ள வேண்டாம் என்று அவர் சொன்னார். அவர்களுடைய வழிகளை கற்றுக் கொள்ள வேண்டாம். அவர்கள் இடத்திலிருந்து தூரமாய் இருங்கள். அவர்களிடத்திலிருந்து தூரமாய் இருங்கள். கலங்குகிறது போல... அவர்கள் கலங்குகிறது போல நீங்கள் கலங்காதீர்கள். வார்த்தையின் அதைரியத்திலிருந்து தான் கலங்குகிற காரியம் வருகிறது. அது என்ன-? அவிசுவாசி அதைரியப்படுகிறான். எதைக் கொண்டு-? வானத்தின் அடையாளங்களைக் கொண்டு. அற்புதங்களையும் அடையாளங்களையும் மேலும் அதைப் போன்றவற்றை நீங்கள் பேசும் போது அது ஒரு அவிசுவாசியை கோபம் கொள்ளச் செய்கிறது. அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. நீங்கள் தெய்வீக சுகமளித்தலை குறித்து பேசுவீர்கள் என்றால், "ஓ, எங்கள் சபை அதை போதிப்பதில்லை. அதிலிருந்து நாங்கள் தூரமாகவே இருக்கிறோம்," பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் தான் இருந்தது", என்கிறார்கள். பாருங்கள், அவர்களுடைய வழிகளை கற்றுக் கொள்ளாதிருங்கள். அவைகளிலிருந்து தூரமாய் இருங்கள். வார்த்தையைக் கற்றுக் கொள்ளுங்கள், வார்த்தையோடு தரித்திருங்கள். வார்த்தை தான் சத்தியமாய் இருக்கிறது. இப்பொழுது அவர்களுடைய வழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டாம், ஏன் என்றால் அவர்கள் வானத்தின் அடையாளங்களாலே கலங்குகிறார்கள், அதைத் தான் வேதாகமத்தில் எரேமியாவின் 10-ம் அதிகாரத்தில் 2-ம் வசனம் சரியாகக் கூறுகிறது. "அவர்கள் அவைகளால் கலங்குகிறார்கள்". என்று அந்த வசனத்தின் கடைசி வார்த்தையில் சொல்லப்படுகிறது. அவர்கள் அவைகளால் அதைரியப்படுகிறார் கள். வெறுமனே அவர்கள்... அது, அவர்களை அதைரியப்படுத்துகிறது. 30. இப்பொழுது அது அவர்களை அதைரியப்படுத்தினால்... அவர்களை அடையாளங்கள் அதைரியப்படுத்தினாலும், கலங்க வைத்தாலும் விசுவாசியை அது உற்சாகப்படுத்துகிறது. அது சரியே-! என்ன... அது ஒருவரை அதைரியப் படுத்துகிறது. அது விசுவாசியை வேதாகம சத்தியத்திற்குள் உற்சாகப்படுத்து கிறது. ஏனென்றால்-? அவன் வார்த்தையை விசுவாசிக்கிறான். அடையாளங்கள்... நான் இந்த சந்ததியிலே அவருடைய தோன்றுதலின் அடையாளங்களைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுதும், அதன் பிறகும். இந்த சந்ததி தான் கர்த்தருடைய வருகையைப் பார்க்கப் போகிறது என்று வேத வாக்கியத்தில் காண்பிப்போம் என்றால், அதன் பிறகு என்ன-? "ஓ. நாம்... என்ன-? நீங்கள் சொல்வதைக் குறித்து நிச்சயமுடையவராய் இருக்கிறீரா-? என்று நீங்கள் சொல்லலாம். நல்லது, அடையாளங்கள் எதை சுட்டிக் காண்பிக்கிறது. நாம் எவ்வளவாய் நெருங்கி இருக்கிறோம் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம். நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அடையாளப் பலகை (sign post) சொல்லும் என்றால், இப்பொழுது ஒரு சில மைல்கள் தூரம் தான் உள்ளது. நீங்கள் தயாராக இருந்தால் நல்லது, ஏனென்றால் அது இன்னும் ஒரு சில மணி நேரங்கள் தூரமாக இருக்கலாம். பாருங்கள். ஆனால் இந்த காலத்திற்கு முன்பாக இப்பொழுது என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு அவர் சொல்லி இருக்கிறார். மேலும் அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம். 31. இப்பொழுது அவிசுவாசிக்கு, தேவனுடைய வானத்தின் அடையாளங்களால் அவன் கலங்குகிறான்... அது அவனை அதைரியப்படுத்துகிறது. அவன் அதைக் குறித்து சிந்திக்க அவனுக்கு விருப்பமில்லை. அவனுடைய சபையில் அவனுக்கு அதை போதிக்கவில்லை. அதை விசுவாசிக்கும்படியாய் அவனுடைய மக்களை விடவில்லை. பாருங்கள், அவன் கலங்குகிறான். அவனை சுற்றிலும் உள்ள அந்த காரியங்களை அவன் விரும்பவில்லை. அவன் அவனுடைய பிரசங்க பீடத்தில் ஒரு பிரசங்கியை அதை விசுவாசிக்கும்படி போதிப்பதற்கு அவன் அனுமதிக்கவில்லை. அது சரியே-! நான் ஒரு பெந்தெகொஸ்தே குழுவினரால் கடந்த வாரத்தில் மறுக்கப்பட்டேன், ஆயிரக்கணக்கான கடிதங்களும், மற்றெல்லா காரியங்களும் அங்கே குவிந்தன. ஏனென்றால் அவர்கள் கலங்கினார்கள். பாருங்கள் அது சரியே. பெந்தெகொஸ் தேயினர், பிரிஸ்பிடேரியன்கள் அல்ல, பெந்தெகொஸ்தேயினர் கலங்கினார்கள். அது அவர்களை வருத்தப்படுத்தினது. வானத்தின் அடையாளங்களும், அற்புத ங்களும் தோன்றினதைக் குறித்து கலங்கினார்கள். 32. ஆனால் விசுவாசிக்கு அது தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்ட வருகையின் அடையாளம் உண்மையென்று ஒரு நிரூபணமாய் இருக்கிறது. ஆமென். தேவனுடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது என்று அது நிரூபிக்கிறது. அது விசுவாசிக்கு அப்படியாய் இருக்கிறது ஆமென். அவிசுவாசி அவன் கவலை அடைகிறான். கலங்குகிறான், அதைரியப்படுகிறான், "ஓ, என்ன ஒரு வெளி வேஷம்," என்று அவன் சொல்லுவான். "நீங்கள் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை," பாருங்கள். அவன் அதனுடன் இப்பொழுது அதைரியப்படுகிறான். ஆனால் விசுவாசிக்கோ அது கன்மலையில் உள்ள தேனாக இருக்கிறது. அது ஒரு நிருபணமாக இருக்கிறது. 33. சில நாட்களுக்கு முன்பாக ஒரு சிறிய செய்தித்தாள் கட்டுரையை வாசித்துக் கொண்டு இருந்தேன். அதில் ஒரு மனிதன் சென்று... அவன் கறுப்பு நிற பறவைகளை விரும்புபவர். அவருக்கு ஸ்(ட்)ராபெர்ரி பழங்கள் முழுவதும் நிறைந்த விளை நிலம் இருந்தது. ஏனென்றால் கறுப்பு நிற பறவைகள் ஸ்(ட்)ராபெர்ரியை விரும்பும். ஒவ்வொரு வசந்த காலத்திலும் அங்கே வடக்கில் இருந்து பறவைகள் வருவதை அவன் பார்க்க விரும்பினான். மேலும் நம்முடைய தேசத்தின் வடக்கு பாகம் சிறந்த ஸ்(ட்)ராபெர்ரியைப் பெற்றிருக்கும். அதனால், அவன் அந்த இடத்தை விட்டு விட்டுப் போய் விட்டான். பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கே உள்ளே வந்து, அந்த ஸ்(ட்)ராபெர்ரிகளை எடுத்துக் கொள்ளும்படியாய், அவர்கள் பறவைகளை துரத்திவிட வேண்டும் என்று நினைத்தார்கள். ஏனென்றால் அந்த வயதான மனிதர் திரும்பிவரமாட்டார் என்று நினைத்தனர். அதனால் அவர்கள் ஒரு பெரிய சோளக்கொல்லை பொம்மையை அந்த வயல்வெளியில் வைத்தார்கள். மேலும் சாலையில் நடந்து செல்லும்போது அது மிக வியப்பாக இருந்தது... 34. அந்த கறுப்பு நிற பறவைகள் திரும்பி வந்தவுடன், ஒரு நல்ல ஸ்(ட்)ராபெர்ரி பழங்களை சாப்பிடும்படி நினைத்துக் கொண்டு அவைகளில் ஒரு சில பறவைகள் அங்கே ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன. கிரீச்சிட்டுக் கொண்டும், ஓடிக் கொண்டும் இங்கே சில தொலைபேசிக் கம்பியில் உட்கார்ந்தன. அவைகள் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன. சில பறவைகள் வேலிக் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன. அங்கே என்ன காரியம் இருந்தது-? அந்த எல்லா இரைச்சல்களும், மேலும் அவைகள் எதைக் குறித்து கிரீச்சிட்டுக் கொண்டிருக்கிறது... அங்கே ஏராளமான ஸ்(ட்)ராபெர்ரி பழங்கள் இருந்தது. ஏனென்றால் அது ஸ்(ட்)ராபெர்ரிக்காகவும் அங்கே ஒரு மிகப் பெரிய விளைச்சலுக்காகவும் அந்த பறவைகள் சப்தமிடவில்லை. ஆனால் அவைகள் அந்த சோளக் கொல்லை பொம்மைக்காக பயந்து கொண்டிருந்தது. அவ்வளவு தான் காரியம் அந்த விதமாகத்தான் மக்களிடையே இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறது என்று நான் நினைத்தேன். பிசாசானவன் அங்கே சில பழைய சோளக் கொல்லை பொம்மையை வைத்து மேலும் ஒவ்வொரு புறாவையும் அல்லது ஒவ்வொரு கழுகையும் தேசத்தின் தூரத்துக்கு அவனால் முடிந்த வரை துரத்திவிட பயமுறுத்துகிறான். நான் சொல்லலாம், ஆம் ஐயா, கூடுமானால் அவன் ஒவ்வொருவரையும் பயமுறுத்துவதற்காக அவன் சில பழைய சோளக் கொல்லை பொம்மையைச் செய்வான். நீங்கள் பாருங்கள். 35. ஆனால் எனக்கு ஆச்சரியமான காரியம் என்னவென்றால் அந்த சோளக் கொல்லை பொம்மையின் கையின் மேலாக சரியாக இரண்டு ஆரோக்கியமான பறவைகள் உட்கார்ந்து கொண்டு, இப்பொழுது ப்ளாக்பெர்ரி அல்லது ஸ்(ட்)ராபெர்ரி பழங்களைத் தின்று கொண்டிருந்தன. அது வரை எந்தப் பறவையும் அந்த பழங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை, பாருங்கள். "அது தான் சரி, என்று நான் நினைத்தேன். அந்த மீதம் உள்ளவர்களில் அங்கே அவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை", ஏன், அந்த பறவைகள் அந்த சோளக் கொல்லை பொம்மைக்கு ஒரு சிறு கவனத்தையும் கூட செலுத்தவில்லை. அவைகள் அங்கே உட்கார்ந்து கொண்டு அதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஏனென்றால் அது ஸ்(ட்)ராபெர்ரி பழங்களாய் இருந்தது. மேலும் அது அவைகளுக்காகவே அங்கே இருந்தது. தேவன் அந்த மனிதனை அல்லது அந்த ஸ்திரீயை ஆசீர்வதிப்பாராக. அவர்கள், ஒவ்வொரு அவிசுவாசிகள் - ஏதோ ஒன்று இது தான், அல்லது அது தான், என்று சுட்டிக் காண்பிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களான சோளக் கொல்லை பொம்மை மத்தியில் நடப்பார்கள். அந்த மீதம் உள்ள நிலத்தில் சரியாக செல்வார்கள். ஏனென்றால் அங்கே ஒரு சரியான ஏற்ற காலத்தில் ஒரு நல்ல விளைச்சல் (ஆமென்) இருக்கிறது. இப்பொழுது அந்த சரியான மீதம் உள்ள நிலத்தில் செல்லுங்கள். அங்கே சரியாக மேலும் அந்த சோளக் கொல்லை பொம்மைக்கு பயப்படாது. போகக் கூடிய பெரிய பறவைகளுக்கு ஆக்கினைத் தீர்ப்பு கிடையாது. 36. ஒரு நிரூபிக்கப்படுகிற தேவனுடைய வார்த்தை சத்தியமாக இருக்கிறது. தேவன் அவருடைய அடையாளங்களால் அவருடைய வார்த்தைக்கு சாட்சி கொடுக்கிறார். தேவனுடைய வார்த்தை ஒரு வித்தாய் இருக்கிறது. மேலும் அந்த வித்தானது அதினுடைய வகையை முளைப்பிக்க வேண்டும். (ஆதியாகமம்-1:11) ஒவ்வொரு விதையும் அதனுடைய வகையாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை விதைப்பவன் விதைக்கும் ஒரு வித்தாக இருக்கிறது என்று இயேசு சொன்னார். அதனால் வேதத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத் தத்தமும் அதனுடைய வகையை உற்பத்தி செய்ய வேண்டும். ஆமென். இப்பொழுது அதிலிருந்து நீங்கள் தூரமாக இருக்கப் போகிறீர்கள்-? இந்த நாளிலே பரிசுத்தாவி என்ற ஒரு காரியம் இல்லை என்றும் அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் தான் கொடுக்கப்பட்டது. என்றும் அவர்கள் சொல்லும் போது; பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு சொன்ன போது, அவர்கள் எல்லோரும் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொண்டார்கள்... இப்பொழுது அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஏசாயா சொன்னது போல, எல்லா தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள், பரிசுத்தாவி ஊற்றப்பட்டது. இப்பொழுது இங்கே ஒரு மனிதன் பரிசுத்தாவியின் ஊக்குவித்தலினால், "வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைக ளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது," - என்றான். இப்பொழுது நீங்கள் சோளக் கொல்லை பொம்மைகளுக்கு பயப்படுவீர்கள் என்றால், ஒரு போதும் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நீங்கள் பயப்படவில்லை என்றால், சோளக் கொல்லை பொம்மைக்குப் பின்புறம் சரியாக வாருங்கள். இது, அது என்று என்ன காரியத்தை செய்தாலும், அது உங்களையோ அல்லது தேவனுடைய வார்த்தையையோ ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே வார்த்தையில் தரித்திருங்கள். 37. இப்பொழுது அடையாளங்கள் தேவனுடைய சத்திய வார்த்தையின் நிரூபணமாக இருக்கிறது. தேவன் அதை எல்லாக் காலங்களிலும் சொல்லி இருக்கிறார். இப்பொழுது சில பேர் இந்த வேத வாக்கியங்களை எடுத்துக் கொள்ள விருப்பம் கொண்டால் எபிரேயர்.2:4-ல் அங்கே இருக்கிறது. தேவன் நிரூபித்ததை நீங்கள் அங்கு பாருங்கள். அவருடைய செய்தியாளர்களை நிரூபித்தார். "பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் கிறிஸ்து இயேசுவின் மூலமாய்," பாருங்கள். மேலும் அதைப் பார்க்கும் போது பிறகு... அவர்களால் வெகு காலத்திற்கு முன்பாக சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. மேலும் அற்புதங்களினாலும் அடையாளங்களி னாலும் அது நிரூபிக்கப்பட்டது. அதனால் நாம் எவ்வளவு அதிகமாக தேவனைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும், வகை வகையான அடையாளங்களுடன், அற்புதங்களுடன் மேலும் பரிசுத்தாவியின் வரங்களுடனும்-? ஓ, வகை வகையான அடையாளங்கள், இயேசு கிறிஸ்து யார் என்றும், எதற்காக அவர் இருந்தார் என்றும், மேலும் என்ன நோக்கத்திற்காக அவர் இங்கே இருந்தார் என்றும் இந்த பூமியில் இருந்த போது அந்த அடையாளங்கள் மூலமாகக் காண்பித்தார். 38. வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா, என்னை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் என்னுடைய நாளை அறிந்திருப்பீர்கள்,” என்று அவர் சொன்னதில் வியப்பு ஒன்றுமில்லை. அது தான் இந்த நாளுக்கான காரியமாய் இருக்கிறது. மக்கள் நினைவுபடுத்த... நாம் எந்த நாளில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம். என்பதை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்தக் காரியங்கள் இந்த ஒரு வழியில் தான் இருந்தாக வேண்டும். அங்கே எந்த காரியமும் ஒழுங்கில் இல்லாமல் இல்லை, எல்லாம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 39. வெகு காலத்திற்கு முன்பாக அல்ல, நான் ஒரு சிறு பொருளின் மேலாக பிரசங்கித்தேன், எபிரேயர்... என்னை மன்னிக்கவும், அது மத்தேயு.11:6 ஆக இருந்தது... நான் அதை மறைவான ரம்மியம் என்று அழைத்தேன் என்று விசுவாசிக்கிறேன். யோவானுடைய சீஷர்கள் இயேசுவிடத்தில் வந்த போது, இயேசுவானவர் பேசிக் கொண்டிருந்தார், உங்களுக்குத் தெரியும். அவர் சொன்னார்... அங்கே யோவானுக்கு சிறு வருத்தம் உண்டாயிருந்தது, ஏனெனில் அங்கே கிறிஸ்து வந்து கொண்டிருக்கிறார் என்று அவன் பிரசங்கித்திருந்தான். (இப்பொழுது பெந்தெகொஸ்தே சகோதரர்களுக்கு இது அருமையாயிருக்கும்) அங்கே கிறிஸ்துவின் வருகை ஒன்று இருந்தது. யோவான் அங்கு நின்று கொண்டு கோடாரியானது மரத்தின் வேரின் அடியின் கீழாக வைக்கப்பட்டு இருக்கிறது, பாம்புகள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத் தான் அவன் பிரசங்கித்துக் கொண்டு இருந்தான். அவன் வனாந்திரத்திலே இருந்தான், அவன் எந்த ஒரு வேத பாடசாலையின் அனுபவத்தையும் பெற்றுக் அதனால் அவனுக்கு தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால், வனாந்திரத்தில் கோடாரி மேலும் ஒரு கூட்ட பாம்புகள் இருந்தது. அது தான் அவனுடைய எல்லா காரியத்திற்கும் பொருளாக இருந்தது. பாருங்கள், அவன் வனாந்திரத்தில் என்ன பார்த்தானோ; மேலும் ஒரு பாம்பு அது ஓடும் போது அது துரிதமாக ஓடித்தான் ஆகவேண்டும் என்று அவன் அறிந்திருந்தான். 40. அதன் பிறகு, "விரியன் பாம்புக் குட்டிகளே. வருங்கோபத்துக்குத் தப்பிக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்"-? என்று அவன் பரிசேயர்கள் இடத்தில் சொன்னான். பாருங்கள். "அவர் தமது களத்தை விளக்கி தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். மேலும் இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது," என்று அங்கே அவன் நின்று கொண்டு சொன்னாள். ஓ, என்னே, என்னே மேசியாவின் வருகை, அதனால் அதன் பிறகு, அவர் அங்கே சென்ற போது, சிறிய உருவம் படைத்தவராய், சாந்த குணமுள்ளவராய், நற்குணம் உள்ள நபராய் தோள்கள் குறுகிப் போனவராய், "அவருக்கு அழகுமில்லை, நாம் விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்த வருமாய் இருந்தார்," என்று வேதாகமம் சொல்கிறது. யோவான் சிறையில் இருந்தபோது அவன் இந்த காரியங்கள் எல்லாவற்றையும் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆனால், நான் சரியான அடையாளத்தைக் கண்டேன் என்று நிச்சயத்திருக்கிறேன். இப்பொழுது அவர் வனாந்திரத்திலே என்னிடத்தில் சொன்னார், "யார் மேல் தேவ ஆவி இறங்கி தங்கியிருக்கிறதை நான் காண்கிறேனோ அவர் தான் பரிசுத்தாவியினாலும், அக்கினியினாலும், ஞானஸ்நானம் கொடுப்பவர்,'' என்று; நான் அந்த அடையாளத்தைக் கண்டேன். நான் அது தான் சத்தியம் என்று சாட்சி கொடுக்கிறேன். அவர் தான் தேவனுடைய குமாரன். ஆனால் அவர்... ஒரு நபர் இவ்விதமாய் நடந்து கொள்வது, அது ஒருவேளை தவறாக இருக்கக் கூடும். நான் அதைக் கண்டு பிடிப்பேன் என்றால் நலமாக இருக்கும்," என்று அவன் சொன்னான். அவன் அவனுடைய சில சீஷர்களை அனுப்பினான். 41. இப்பொழுது ஒரு நிமிஷம் பொறுங்கள். நீதியின் நிமித்தமாக சிறைச் சாலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாம் வேத பாட சாலையிலிருந்து பெற்ற ஒரு புத்தகத்தை நான் யோவானுக்கு அனுப்பப் போகிறேன் என்று இயேசு ஒரு போதும் சொல்லவில்லை. அவனுடைய தகப்பனார் செய்தது போல அவன் இன்னும் இரண்டு ஆண்டுகள் கல்லூரியில் பயின்றாக வேண்டும் என்று அவனிடத்தில் சொல்லுங்கள் என்றும் சொல்லவில்லை. அவன் ஒருபோதும் கல்லூரிக்குச் செல்லவில்லை. பள்ளிக் கூடத்திற்கு கூட அவன் செல்லவில்லை. இல்லை அவன் ஒரு போதும் செல்லவில்லை. அவனுடைய தகப்பனாரும் தாயாரும் அவன் சிறு பையனாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். அவன் 9-வயதிலேயே வளாத்திரத்திற்கு சென்று விட்டான். ஏனென்றால் தேவனிடத்திலிருந்து அவன் ஒரு செய்தியை கொண்டிருந்தான். மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாட்டினால் அல்ல. அது தேவனிடத்தில் இருந்து வரவேண்டும். அவனுடைய தகப்பனார் போன்று முட்டாள்தனமாக சுற்றிக் கொண்டிருக்கிற ஒரு சிறிய வேத பாடசாலையின் அனுபவத்துடன் இல்லாமல் (அவர் உண்மையில் ஒரு ஆசாரியனாக இருந்தார்) ஒரு அதி முக்கியமான நாளாக அவனுடைய நாள் இருந்தது. அவன் ஒரு போதும் அவனுடைய தகப்பனாருடைய பள்ளிக்குச் செல்லவில்லை. அவன் வனாந்திரத் திற்கு சென்று விட்டான். அதனால் அவன் தேவனிடத்திலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது. 42. தேவன் மிகச் சரியாக அவனிடத்தில் சொன்னார், "இப்பொழுது இது பிழையாக இருக்காது யோவானே நீ இந்த அடையாளத்திற்காக காத்திருக்க வேண்டும். நீ இந்த அடையாளம் அங்கு தோன்றுவதை காணும் போது, பரிசுத்த ஆவியானவர் ஒரு அக்கினி மேகம் விழுவதைப் போலவும், மேலும் ஒரு புறா சிறகை விரித்து கீழே இறங்குவதைப் போலவும் காணும்போது; அதுதான் அந்த ஒருவர்". "நான் அவரைக் கண்டேன் ஆனால் அவர் அந்த விதமாக நடந்து கொள்ள வில்லை. அதனால் சென்று அதைக் கண்டு பிடிப்பேன்", என்று யோவான் சொன்னான். ஆனால், "நான் உங்களுக்கு சொல்லுகிறேன். இப்பொழுது திரும்பிப் போக வேண்டாம். மேலும் ஒரு புத்தகத்தையோ அல்லது வேறு எதையோ எடுத்துக் கொள்ள வேண்டாம்", "இப்பொழுது ஆராதனை முடியும் வரை காத்திருங்கள். சாயங்கால ஆராதனை முடியும் வரைக்கும் காத்திருங்கள்", என்று இயேசு சொன்னார். அதன் பிறகு அவர்கள் திரும்பச் சென்ற போது, "நான் சரியான நேரத்தில் வந்திருக்கிறேன் என்று யோவானுக்கு காண்பியுங்கள்," (ஆமென்) நான் காலத்துக்குப் பின் இல்லை மேலும் எல்லா காரியங்களும் இப்பொழுது ஒழுங்கில் இருக்கிறது", என்று அவர் சொன்னார். ஆமென், பாருங்கள். அந்த வழியில் தான் நாமும் இன்றைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் நினைக்கிறோம். ஏதோ ஒரு காரியம் நடந்தது என்று, அது அப்படி இல்லை. அவர் சரியான நேரத்தில் தான் இருக்கிறார். (ஆமென்) "தாமதமாக இல்லை, ஒவ்வொரு காரியமும் இப்பொழுது மிகச் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது, சரியான நேரத்தில், "இப்பொழுது யோவானிடத்தில் சென்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று காண்பியுங்கள். மேலும் "என்னிடத்தில் இடறல் அடையாதவனாய் இருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்", என்று அவனிடத்தில் சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு அவன் சென்ற போது... 43. நான் அந்த கருத்தை நேசிக்கிறேன். பாருங்கள், யோவான் கருத்துகளில் குறைந்த ஒன்றைத் தான் இயேசுவுக்கு செலுத்தினான். "வருகிறவர் நீர்தானா-?", என்று அவரிடத்தில் கேட்டான். பாருங்கள், ஆனால் இயேசு அவனுடைய நிலைமையை அறிந்திருந்தார். அவன் எப்படி சிறைச்சாலையில் அங்கே இருந்து கொண்டு பாதிக்கப்பட்டான். மேலும், பெம்பர்டன் சொன்னது போல "அவருடைய கழுகு கண்கள் அங்கே படம் எடுத்தது" அங்கே அவன் படுத்துக் கொண்டு இருந்திருக்கலாம், அவனுடைய தீர்க்கதரிசன வரம் சரியாக வேலை செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். அங்கே சிறைச் சாலையில் படுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்ச நாளில் தன்னுடைய தலையை வெட்டியெடுக்கப் போகிறார்கள் என்று அறிந்தவனாய்... ஆனால் இயேசு சுற்றித் திரும்பி, யாருமே அவனுக்கு கொடுக்க முடியாத மிகச் சிறந்த பாராட்டை அவனுக்கு செலுத்தினார். எதைப் பார்க்கப் போனீர்கள்-? எதைப் பார்க்க வெளியே சென்றீர்கள்-? காற்றினால் அசையும் நாணலையோ-? யோவான் அப்படிப்பட்டவன் இல்லை. இல்லை, இல்லை; ஒரு டக்ஸிடோ (Tuxedo) கோட் சூட் அணிந்து அவனுடைய கழுத்துப்பட்டை திரும்பி இருக்கும் படியாக வேத பாடசாலையிலிருந்து வந்த ஒரு மனிதனைப் பார்க்கச் சென்றீர்களா-? உங்களுக்குத் தெரியுமா-? என்று அவர் கேட்டார். "அவர்கள் அந்த வகையான ஆடையை அணிந்து கொண்டு, குழந்தைகளை முத்தமிட்டு, மேலும் உங்களுக்கு தெரியுமா... இளவயதுள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, மரித்தவர்களை அடக்கம் செய்வார்கள்", என்று அவர் சொன்னார். அவர்கள் அரசர் மாளிகையில் சுற்றித் திரிந்து (மேலும் DD, Ph, LL, QU உங்களுக்குத் தெரியுமா, எல்லாவற்றுடன்) உங்களுக்குத் தெரியும். பாருங்கள். அதுதான் அந்த வகையான ஆட்கள். ஆனால் எதைப் பார்க்க நீங்கள் போனீர்கள்-? ஒரு தீர்க்கதரிசியையோ-? ஆம் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மை உள்ளவனையே", என்றார், ஆம், ஐயா. நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், இது தான் அவன் (மல்கியா 3)ல் சொல்லப்பட்டவன். இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகி றேன். அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான். அது தான் அவனாய் இருந்தது. இப்பொழுது பாருங்கள் அங்கே ஒரு அடையாளம் இருந்தது. அவன் அந்த அடையாளத்தை கவனித்திருந்தான். 44. இப்பொழுது, தேவன் எல்லா காலங்களிலும் மக்களுக்கு அடையாளங்களைக் கொடுத்தும் அதை சாட்சி கொடுத்தும் வந்தார். (நீங்கள் வேதவாக்கியங்களைக் குறித்துக் கொள்ள விரும்பினால். உபாகமம் 18:22 மற்றும் 13:1) தேவன் இஸ்ரவேலருக்கு ஒரு உறுதியான அடையாளத்தைக் கொடுத்தார். தேவன் தன்னுடைய வார்த்தையை தீர்க்கதரிசிகளைக் கொண்டு அனுப்பினார். அது சரியாக இல்லையா-? அதைத் தான் வேதாகமம் மிகச் சரியாக சொன்னது. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. இங்குதான் ஒரு தீர்க்கதரிசியின் சோதனை இருந்தது என்று அவர் சொன்னார். ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தார் என்றால், அது அப்படியே அவர் சொன்ன விதத்தில் நிகழ்ந்தது என்றால் அவருக்குச் செவி கொடுங்கள். ஆனால் அது அப்படி நிகழவில்லை என்றால் தேவன் பேசவில்லை, அதனால் அவனுக்கு பயப்பட வேண்டாம். அது சரியே. "உங்களுக்குள்ளே ஒரு ஆவிக்குரியவன் அல்லது ஒரு தீர்க்கதரிசி, இருந்தால் தேவனாகிய கர்த்தர் நானே அவனுக்கு தரிசனங்களில் வெளிப்படுத்தி அவனுடன் சொப்பனங்களில் பேசுவேன்”. நிச்சயமாக, தேவன் பொய் சொல்கிறவர் இல்லை. அவரால் பொய் சொல்ல முடியாது என்று உங்களுக்குத் தெரியும் அவரிடத்தில் பொய் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவரே எல்லா பரிசுத்தத்திற்கும் ஊற்றாய் இருக்கிறார், எல்லா சத்தியத்திற்கும் தேவனாய் இருக்கிறார். அதனால் தேவனிடத்திலிருந்து ஒரு பொய்யும் வரமுடியாது. அவர் பரிபூரணமாய் இருக்கிறார். பரிசுத்தமாய் இருக்கிறார். 45. அது தேவனுடைய வார்த்தையாய் இருக்குமானால், அது அவருடைய முன் கூட்டியே திட்டமிடப்பட்ட எண்ணங்களாய் இருக்கிறது. ஆமென். அதனால் தான் நாம் நித்திய ஜீவனை உடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நாம் தேவனால் உரைக்கப்பட்டு ஜீவித்துக் கொண்டிருக்கிறவர்களாய் இருக்கிறோம். ஒரு சபையில் சேர்ந்து கொண்டிருப்பதனால் அல்ல. ஆனால் வார்த்தையினால் பிறந்தவர்களாக இருக்கிறோம். தேவன் சொன்ன அந்த மூல வித்தாக இருக்கிறோம். "உண்டாகக்கடவது". என்றார். அங்கே உண்டானது. ஆமென். அந்த வழியில் தான் இன்று தேவன் தன்னுடைய பிள்ளைகளை அவர்களுடைய இருதயத்தின் கருப்பையில் தன்னுடைய வார்த்தையுடன் பிறக்கச் செய்கிறார். மேலும் அவருடைய வார்த்தையின் வேர்களைக் கொண்டு வளர்கிறது. எப்படி ஒரு மனித இருதயத்திற்குள் உள்ள ஒரு ஆவி அது தேவன் என்று சொல்லி, அவருடைய வார்த்தையை மறுதலிக்க முடியும்-? மெய்யாகவே தேவனுடைய வார்த்தை தாமே அந்த மனித இருதயத்திற்குள் இருந்தாக வேண்டும். ஆமென். அது அப்படி இல்லை என்றால் அது ஏதோ ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்கே பரிசுத்த ஆவி என்பது இல்லை. எல்லாம் சரியே. 46. இப்பொழுது தேவனுடைய தீர்க்கதரிசிகள் ஒவ்வொரு சந்ததியாருக்கும் அற்புதங்களையும் அடையாளங்களையும் கொடுத்தார்கள். தீர்க்கதரிசிகள் உண்மையான தீர்க்கதரிசிகள்; உண்மையான வார்த்தையுடன், உண்மையான வேதாகம அடையாளங்களைக் கொடுத்தார்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இங்கே நாம் உண்மைக்கும் தவறுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்க விரும்புகிறோம். ஏனெனில் நினைவு கொள்ளுங்கள், வேதாகமம் சொல்கிறது (மத்தேயு-24) இந்த நாளிலே அந்த இரண்டு ஆவிகள், அது இன்னும் சிறிது நேரத்தில் அதற்கு நாம் வருகிறோம். அவ்வளவாய் நெருக்கமாக இருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிப்பார்கள். நான் சந்தோஷப்படுகிறேன் அந்த வார்த்தைக்கு "கூடுமானால்" தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்; ஆனால் எவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ அவர்கள் தேவனால் முன் அறியப்பட்டு இருக்கிறார்கள். "எவர்களை முன் அறிந்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார் எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியும் இருக்கிறார்." அது ஒரு நிலைவரப்பட்ட உண்மையாயிருக்கிறது.ஆம் ஐயா, அதன் பிறகு நீங்கள் பாருங்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர் களையும் அது வஞ்சிக்கும், அது நிச்சயமாக பார்ப்பதற்கு சரியான காரியமாய் இருக்கிறது போல் உள்ளது. எல்லாம் சரி, இப்பொழுது உண்மையான தீர்க்கதரிசிகள், உண்மையான வார்த்தையைக் கொண்டு, உண்மையான அடையாளங்களைக் கொடுத்தார்கள். அது சரியாக உள்ளதா-? உண்மையான வார்த்தை. நான் இப்பொழுது ஒரு சிலரை அழைக்கப் போகிறேன். இப்பொழுது அவர்களில் ஒருவரை சரியாக இங்கே நாம் மேற்கொண்டு போவதற்கு முன்பாக எவ்வளவாக பொய்யான காரியம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது போல தோன்றுகிறது. (நான் அதிகமாக சத்தமிடுகிறேனா-? உங்களுக்கு அதிக சப்தமாக இருக்கிறதா-? பின்னால் இருக்கிறவர்கள் என்னை கேட்கிறீர்களா-? நல்லது) இப்பொழுது எப்படி உண்மையும் ஒரு பொய்யும் ஒன்று போல இருக்கிறது. சாத்தான் ஏவாளுக்கு சொன்ன காரியம் கிட்டத்தட்ட சரியான உண்மையாய் இருந்தது. 47. பாருங்கள். யோசபாத்தும் ஆகாபும் இருந்த நாட்களிலே ஆகாப் தனக்காக 400 இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளை பாதுகாத்து வைத்திருந்தான். இப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள். யூதர்களாக சத்தியத்தின் வழியில் தீர்க்கதரிசிகளாக வந்திருந்தனர். அவன் அந்த 400 தீர்க்கதரிசிகளையும் பள்ளிக்கு அனுப்பி மேலும் அவர்கனை பராமரித்து வந்தான். யோசபாத் வந்து ஆகாபோடு ஒரு ஒப்பந்தம் செய்தான். அவள் அதைச் செய்த போது, அவன் சொன்னான், "நாம் கிலேயாத்திலுள்ள ராமோத்திற்கு சென்று அந்த தேசத்தை எடுத்துக் கொள்ளலாமா-?" நல்லது, அவர்கள் தீர்க்கதரிசி களிடம் பேசினார்கள். நினைவில் கொள்ளுங்கள். அது பார்ப்பதற்கு எவ்வளவு சரியாக இருந்தது. "அங்கே போங்கள் கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்" என்று அவர்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஏன்-? அவர்கள் எங்கே அதை ஆதாரமாக கொண்டிருந்தார்கள். அந்த தேசம் அவர்களைச் சார்ந்தது என்ற சத்தியத்தின் மேலாக அந்த ஆதாரத்தைக் கொண்டிருந்தார்கள். யோசுவா அந்த தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்திருந்தான். கர்த்தர், ராமோத் கிலேயாத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்து இருந்தார். மேலும் எதிரியானவன் அந்த தேசத்திலிருந்து அவர்களை வெளியே தள்ளி, அவர்கள் அதை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இப்பொழுது கவனியுங்கள், என்னுடைய பெந்தெகொஸ்தே சகோதரரே, பாருங்கள். அது சரியாக இருக்கிறது. அந்த தேசம் உங்களுக்குரியதே-! ஆனால் அது எதிரியினால் எடுக்கப்பட்டு காரியங்கள் சரியாகும் வரை அவன் வசத்தில் இருக்கும். வார்த்தைக்கு திரும்பி வாருங்கள். நாம் எல்லோரும் வார்த்தையின் ஒழுங்கின் வரிசையின் வழியாக வந்தாக வேண்டும் அந்த வழியாகத்தான் தேவன் அதைச் செய்தார். தேவனுடைய வழியிலும் அவருடைய வார்த்தையின் வரிசையிலும் வரும் போது அது வேலை செய்தாக வேண்டும். 48. ஆனால், "நீர் அங்கே போம் கர்த்தர் உம்முடனே இருக்கிறார்," என்று இந்த தீர்க்கதரிசிகள் சொன்னார்கள், அவர்களில் ஒருவன் (நான் விசுவாசிக்கிறேன் சிதேக்கியா அங்கே இருந்தான்) இரண்டு கொம்புகளை உருவாக்கினான், அவன் சொன்னான், "நீர் இந்த இரண்டு கொம்புகளை எடுத்துச் சென்று எதிரியை முட்டித் தள்ளி தேசத்திலிருந்து அவர்களை வெளியேற்றுவீர்", என்றான். ஆனால் உங்களுக்கு தெரியுமா, ஒரு உண்மையான ஆவிக்குரிய மனிதனுக்கு, (இந்த முழு வீடும் இந்த இரவில் அப்பேற்பட்ட மக்களால் நிரம்பியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்) அது யோசபாத்துக்கு சரியானதாய் தோன்றவில்லை. ஏனென்றால் அவன் நல்ல மனிதனாக இருந்தான். 400 - ஏறக்குறைய இங்கு உட்கார்ந்து இருக்கிறவர்களில் இரண்டு மடங்கு இந்த இரவுப்பொழுதிலே அவர்கள் எல்லோரும் ஒருமனப்பட்டு தீர்க்கதரிசனம் சொன்னார்கள். "இப்பொழுது அவர்கள் அங்கே இருக்கிறார்கள். அங்கே இருப்பது அவர்கள் தான் அது தான் நம்முடைய அடையாளமாய் இருக்கிறது", என்று சொன்னான். மேலும் இந்த தீர்க்கதரிசி, "நான் உமக்கு ஒரு அடையாளத்தைச் செய்தேன்,' இரண்டு கொம்புகளை எடுத்துக் கொண்டு, "இவைகளை எடுத்துக் கொண்டு அவர்களை முட்டித் தள்ளி அவர்களை வெளியேற்றுவீர். அது கர்த்தர் உரைக்கிறதாவது", என்று சொன்னான். 49.ஆனால், "அங்கே ஏதோ ஒரு தவறு இருக்கிறது. என்னால் என்னுடைய விரலை அதின் மேல் போட முடியாது. ஆனால் அங்கே ஏதோ ஒரு காரியம் தவறாக இருக்கிறது. வேறே யாராகிலும் ஒருவர் உம்மிடத்தில் இல்லையா-? என்று யோசபாத் கேட்டான். "ஓ, ஆம், நாம் வேறொருவரை அழைக்கலாம். அவன் ஒரு பரிசுத்த உருளை இங்கே இருக்கிறான். மிகாயா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய மனிதன். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன் என்று அவன் சொன்னான். "ஏன்" என்று அவன் கேட்டான், "அவன் தொடர்ச்சியாக எனக்கு எதிராக தீங்கான காரியத்தையே தீர்க்கதரிசனமாக சொல்கிறான் என்று அவன் சொன்னான். ஓ, "ராஜாவே அப்படிச் சொல்ல வேண்டாம். ஆனால் அவன் சொல்வதையும் நாம் கேட்போம்," என்றான். அதனால் அவர்கள் தர்மகர்த்தாக்களையும், டீகன் குழுவினரையும் அங்கே அனுப்பி. "இப்பொழுது இங்கே பார் நீர் மாத்திரம் அவர்களுடன் ஒரே வரிசையில் இருப்பீர் என்றால் உனக்குத் தெரியுமா-? உன்னை நாங்கள் மாநில துணை ஆயராக அல்லது அதைப் போன்று நீ உருவாக்கப்படலாம். அவர்கள் சொன்ன அதே காரியத்தையே நீயும் சொல்ல வேண்டும் என்றனர். ஓ, உங்களால் அந்த விதமான தேவ மனிதனுடன் பேசுகிறதை கற்பனை செய்ய முடிகிறதா-? "கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன்", என்று மிகாயா சொன்னான். 50. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த வகை தான் அங்கே நிற்கும். ஆம் ஐயா. பாருங்கள். அவன் என்னவாய் இருந்தான். அவன் ஒரு அடையாளமாக இருந்தான். அவன் ஒரு சரியான அடையாளமாக இருந்தான். ஏதோ ஒரு காரியம் நடக்கப் போகிறது. கர்த்தர் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றப் போகிறார். ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு உண்மையான கர்த்தரின் தீர்க்கதரிசியாகிய எலியாவைக் கொண்டு ஆகாபுக்கும் யேசபேலுக்கும் அவர்களுடைய பொல்லாப்பான காரியங்களுக்காக என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொல்லியிருந்தார். மேலும் மனம் திருந்தாத அந்த பெல்லாப்பான காரியத்தை அவர் எப்படி ஆசீர்வதிக்க முடியும். ஒழுக்கக்கேட்டில் நின்று கொண்டிருக்கும் இன்றைய சபையில் தேவன் எப்படி இந்தக் காரியங்களைச் செய்ய முடியும்-? பலவிதமான வேறுபாடுகளுடன், சுயநலமான காரியங்களுடன், வார்த்தையை மறுதலித்துக் கொண்டும், தேவ பக்தியின் வேஷத்தை தரித்துக் கொண்டும்; மேலும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை மறுதலித்துக் கொண்டும் இருக்கும் போது; அவர் எப்படி ஒரு ஆசீர்வாதத்தை அதன் மேலாக வைக்க முடியும். அவரால் அதைச் செய்ய முடியாது. நாம் அசலான உண்மையான காரியத்திற்குத் திரும்பி வந்தே ஆக வேண்டும். மேலும், "இந்த இரவின் பொழுதை எனக்குத் தாருங்கள்," என்று அவன் சொன்னான், கர்த்தர் அவனுக்குத் தரிசனமானார்; மேலும் தீர்க்கதரிசனம் என்னவாக இருந்தது என்று உங்களுக்குத் தெரியும். அதனால் அது இப்பொழுது மிகச் சரியாக இருந்தது. ஒரு அடையாளம்-! 51. இப்பொழுது அங்கே உண்மையான தீர்க்கதரிசனங்கள் இருக்குமே ஆனால்... இப்பொழுது நாம் கற்றுக் கொள்கிறோம்... அதன் பிறகு மத்தேயு 24-ல் உள்ள வேதவாக்கியம் உண்மையும் தவறும் இரண்டும் அங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையான, தவறான காரியங்கள் இரண்டும் ஒவ்வொரு முறையும் அங்கே இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு அது தெரியும். ஒரு பொய்யானது என்ன-? அது சரியானது தாறுமாறாக்கப்பட்டது. அது உண்மையிலே ஒரு சத்தியமாக இருக்கிறது, யாரோ ஒருவர் அதை தவறாக மேற்கோள் செய்து அதைத் தவறாகும்படி செய்து விட்டார். ஒரு பொய்யான காரியம் என்றால் என்ன-? ஒரு சரியான காரியம் தாறுமாறாக்கப்பட்டது, பாருங்கள். பிசாசானவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. மேலும் ஒவ்வொரு காரியமும் தவறாக இருக்கிறது. பிசாசானவன் எதெல்லாம் சரியாக இருந்ததோ அதையெல்லாம் தவறாகும்படி செய்து விட்டான். அங்கே ஒரு உண்மையான தேவனுடைய வார்த்தை இருக்கிறது. அங்கே ஒரு பெயரளவிலான தேவனுடைய வார்த்தையும் இருக்கிறது. அது தவறாய் இருக்கிறது. அது சரியே-! அங்கே ஒரு உண்மையான தீர்க்கதரிசி இருப்பார் என்றால், மத்தேயு 24-ல் இயேசு சொன்னார், "கள்ளத் தீர்க்கதரிசியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்". அதனால் அங்கே உண்மையான தீர்க்கதரிசிகள் இருந்ததைப் போல கள்ளத் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள் 52. ஆனால் உண்மையான தீர்க்கதரிசியை நீங்கள் எப்படி கண்டு கொள்வீர்கள். அவர் எப்பொழுதும் வார்த்தையில் தரித்திருப்பார். அதையும் மிகாயா, மிகச் சரியாகச் செய்தான். அவன் தேவனுடைய வார்த்தையுடன் மிகச் சரியாக தரித்து இருந்தான். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது... அது தேவனுடைய வார்த்தை என்று அவன் அறிந்திருந்தான். அது தீர்க்கதரிசி இடத்தில் வருகிறது. இப்பொழுது நாம் பக்திபரவசப்படுகிறோம். பாருங்கள், தேவனுடைய வார்த்தையானது என்ன நடந்தாலும் அது நிற்கப் போகிறது. சபைகள் எழும்பலாம், விழுந்து போகலாம், மக்கள் எழும்பலாம். விழுந்து போகலாம், மற்ற எல்லா காரியமும் எழலாம் மேலும் விழுந்து போகலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை விழுந்துபோகாது. அது தேவனாக இருக்கிறது. அச்சிடப்பட்ட வடிவில் அது தேவனாக இருக்கிறது. அது சரியே-! நீங்கள், நித்திய ஜீவன் உடையவர்களாக இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு தொடக்கம் உள்ள காரியமும் ஒரு முடிவு உடையதாய் இருக்கிறது. உங்களுக்கு ஒரு துவக்கம் இருக்குமானால் உங்களுக்கு ஒரு முடிவும் இருக்கும். அதன் காரணத்தினால் தான் இந்த சரீரம் மரிக்க வேண்டியுள்ளது. அதற்கு ஒரு துவக்கம் இருந்தது. ஆனால் உங்களிலிருக்கும் ஆத்துமா... அது தேவனாக இருக்கும் பரிசுத்த ஆவியானவர்; உங்களுக்குள் அது என்னவாக இருக்கிறது-? அது தேவனுடைய முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்த எண்ணமாக இருக்கிறது. ஒரு வார்த்தை என்றால் என்ன-? அது எண்ணங்களின் வெளிப்படுத்தலாய் இருக்கிறது. பாருங்கள். மேலும் அங்கே ஒரு உலகம் இருப்பதற்கு முன்பாகவே தேவன் உங்களை தன்னுடைய சிந்தையில் கொண்டிருந்தார். ஆமென். ஒரு சபையை தன்னுடைய சிந்தையில் கொண்டிருந்தார். நிச்சயமாக, பாருங்கள். 53. அதன் பிறகு நீங்கள் மறுபடியும் பிறந்த போது, அவர் அவனுக்கு நித்திய ஜீவனை தருவேன் என்று இயேசு சொன்னார். கிரேக்க வார்த்தையில் "சோயி" (Zoe) என்பது தேவனுடைய சொந்த ஜீவனாக இருக்கிறது. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் அழிந்து போக முடியாது. "நான் அவர்களை கடைசி நாட்களில் மீண்டும் எழுப்புவேன்" அழிந்துபோக முடியாது. ஏனென்றால் அது நித்தியமாக இருக்கிறது. அது ஒரு போதும் துவங்கவே இல்லை. அது ஒரு போதும் துவங்கவே இல்லை. ஆதலால் அது ஒரு போதும் முடிவடைய முடியாது. இந்த உலகத்திற்கு உங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் தேவனுடைய வார்த்தையாக வெளிப்படுவதற்கு முன்பு அவருடைய சிந்தையில் இருந்தீர்கள். அதன் பிறகு வார்த்தையாக மாறின பின்பு அது மாமிசமாக மாறினது. அந்த காரணத்தினால் தான் இயேசு ஜெபிக்க வேண்டியதாயில்லை. நான் ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் நாம் ஒரு பாலுணர்ச்சி செய்கையின் மூலம் தாறுமாறாக்கப்பட்டோம். தகப்பனும் தாயும் ஒரு தாறுமாறாக்கப்பட்டதிலிருந்து நம்மை கொண்டு வந்தார்கள். நாம் தொடக்க நிலையில் உள்ளவர்களாக இல்லை. தேவன் ஆதியிலே ஒரு போதும் "ஸ்திரீயே நீ மனிதனைக் கொண்டுவரக்கடவாய்" என்று சொல்லவில்லை. அவர், மனிதனை தன்னுடைய வார்த்தையில் சிருஷ்டித்தார். அதனால் இயேசு வார்த்தையாக இருந்தார். மனிதன் அதனுடன் எதையும் செய்வதற்கு இல்லை. அப்படியே ஸ்திரீயும் செய்ய முடியாது, இல்லை ஐயா. 54. அவர், மரியாளின் மகரத்த சேர்க்கையாக இல்லை. அது உங்களை கத்தோலிக்க எண்ணத்திலிருந்து ஒரு பத்து லட்சம் மைல்களுக்கு அடித்து தள்ளி விடும். மரியாளுடன் எந்த காரியத்தையும் செய்வதற்கு இல்லை. மரியாள் ஒரு குஞ்சு பொறிக்கும் எந்திரமாக மட்டுமே இருந்தாள். அது தான் எல்லாம். அவர் ஒரு போதும் அவளை "தாயே," என்று அழைக்கவில்லை. அவர் அவளை "தாயே," என்று அழைத்ததாக ஒரு முறையாவது எனக்கு காண்பியுங்கள். அவர் சொன்னார். "ஸ்திரீயே," ஆமென். அப்படித் தான் அவள் இருந்தாள். ஒரு ஸ்திரீயாக; அப்படியாய் தேவன் உபயோகப்படுத்தினார். அது தான் சரி - பெண் கடவுளாக இல்லை. தேவனுடைய தாய் என்ன ஒரு அற்பமான காரியம் தேவனுடைய தாயா-? யார் கொடுக்க முடியும்... தேவன் ஒரு தாயை கொண்டிருக்கும் படியாய் யார் செய்தது-? அப்படி என்றால் தேவனுடைய தாய்க்கு யார் தாயாக இருந்தது-? ஓ, என்னே, நித்திய குமாரத்துவத்தை குறித்து பேசுகிறோம். குமாரனுக்கு ஒரு துவக்கம் இருக்கிறது. நித்தியத்தை துவக்க முடியாது. துவங்க முடியாது. அது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு நித்திய குமாரனாக எப்படி இருக்க முடியும்-? ஓ, என்னே, நான் ஒரு உபயோகமற்றவன் (dummy); மேலும், அதைக் காட்டிலும் நன்றாக அறிந்திருக்கிறேன். நிச்சயமாக. அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சாயலாக இருந்தார். ஏனென்றால் அவர் தேவனுடைய எண்ணத்தின் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தை யாக இருந்தார். தேவன் சொன்னார், "உண்டாகக்கடவது" அது அப்படியே ஆயிற்று. அவர் மரியாளின் மேலாக நிழலிட்டார். அவள் அவரைப்பராமரித்தாள். உண்மை, நிச்சயமாக. நீங்களும் இன்றிரவு அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் துதிகளினாலும், மகிமைப்படுத்துகிறதினாலும், தேவனுடன் உரையாடிக் கொண்டு அவருக்கு நீங்கள் ஊட்டி விடுகிறீர்கள். (அது சரி) 55. இப்பொழுது கவனியுங்கள். அவர் வார்த்தையாக இருந்தார். பாருங்கள் இப்பொழுது, இயேசு அவர் இதைச் சொன்னார். ஏனென்றால் அவர் வார்த்தையாக இருந்தார். ஆனால் நமக்கோ, நாம் தேவனுடைய வார்த்தையின் மூலமாக அணுக வேண்டும், பாருங்கள், வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறது. அவர்கள் வார்த்தையல்ல. பழைய ஏற்பாட்டில், இப்பொழுது எலியாவும், மோசேயும் மேலும் அந்த எல்லா மகத்தான தீர்க்கதரிசிகளும் அவர்கள் வார்த்தையாக இல்லை. அவர்கள் தாறுமாறாக்கப்பட்ட சரீரத்தில் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்தனர். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகள் இடத்தில் வருகிறது என்று வேதாகமம் சொல்கிறது. அவர்கள் வார்த்தையாக இல்லை. ஆனால் இயேசு வார்த்தையாக இருந்தார். ஆமென். ஓ, நான் இப்பொழுது அதை நேசிக்கிறேன். எல்லாம் சரி. 56. இப்பொழுது அவர் ஒரு போதும் அந்த வார்த்தையுடன் சரியாக தரித்து இருக்காமல் இருந்தது இல்லை ஏன்-? பிசாசானவன் ஏவாளுக்கு செய்தவிதமாக அதை தாறுமாறாக்க முயற்சிப்பான். ஏனெனில் "தம்முடைய தூதர்களுக்கு உம்மை குறித்து கட்டளையிடுவார். உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது", என்று பிசாசு சொன்னான். “உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே", என்று அவர் சொன்னார். "இப்படியும் எழுதியிருக்கிறதே" ஓ, அவனுக்கு அதை பின்னுக்குக் குத்தித் தள்ளினார். அதன் பிறகு அவர் சொன்னார், "மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, ஆனால் ஒவ்வொரு (ஒவ்வொரு இங்கே ஒரு சிறிய பாகம் என்றல்ல, அங்கே ஒரு சிறிய காரியமல்ல, அதை இரண்டும் ஒன்றாக கலந்து உலகத்தால் ஆன வேதக் கல்வியுடன் மனித சிந்தையுடைய மக்களுடன் அல்ல) தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் பிழைப்பான்,'', ஒவ்வொரு வார்த்தையினாலும், ஒவ்வொரு வார்த்தையையும். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினால் மனிதன் பிழைப்பான். அதனால் மாத்திரம் தான் அவன் ஜீவிக்க வேண்டும். இயேசு அப்படித் தான் சொன்னார், மேலும் அவர் வார்த்தையாக இருந்தார். 57. அதனால் இப்பொழுது, மிகாயா செய்தது போல, மோசேயைப் போல, அவர்கள் எல்லோரும் செய்தது போல, ஒரு உண்மையான வார்த்தையில் தரித்து இருப்பார்களென்றால், நீங்கள் அந்த வார்த்தை பிரத்தியட்சமாவதைப் பார்ப்பீர்கள். அதன் பிறகு ஒரு கள்ள தீர்க்கதரிசியாக ஒருவன் தேவனுடைய வார்த்தையின் அடையாளங்களைக் குறித்து உங்களை கலங்கச் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பான். அவன் ஒரு கள்ள தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இயேசு அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொன்னார். மேலும் அவர்கள் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் முட்டாள் ஆக்குவார்கள் அல்லது வஞ்சிப்பார்கள். பாருங்கள், அங்கே அவர்கள் நிச்சயமாக வருவார்கள் மேலும் ஒவ்வொரு காரியத்தையும் உரிமை கோருவார்கள். ஆனால் அவர்கள் வார்த்தையை விட்டு தூரப் போகும் போது, நீங்களும் கூட தூரச் சென்று விடுங்கள். அவர்களை விட்டு தூரச் செல்லுங்கள். வார்த்தையில் தரித்திருங்கள். 58. நாம் ஒரு கால கட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை லெந்து-நாட்கள் என்று அழைக்கப்போகிறார்கள். லெந்து-நாட்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படித் தான் அதை அழைக்கிறீர்கள். ஏதோ அந்த மாதிரி, அது சரியே. அவர்கள் அதை விரும்புவார்கள் என்றால் அந்த தொலைவிற்கு அவர்களுடன் நான் போவேன். ஆனால் உங்களுக்குத் தெரியுமா-? பிராடஸ்டெண்டுகள், கத்தோலிக்கர்கள், மற்றும் எல்லோரும் குடிக்கக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, மேலும் இது அதைச் செய்யக் கூடாது என்கிறார்கள்; அது பரவாயில்லை. அந்த இரண்டையும் செய்வதை நான் விசுவாசிக்க மாட்டேன். நிச்சயமாக, நான் விட்டுவிடுகிறேன். ஆனால் நாற்பது நாட்களுக்குப் பிறகு நீங்கள் என்னை விட்டு மறுபடியும் தூர சென்றுவிடுவீர்கள். நான் அந்த தூரம் வரைக்கும் நான் உங்களுடன் வருவேன். அதன் பிறகு நீங்கள் சேற்றுக்குள் என்னை திரும்ப இழுத்து விடுவீர்கள். எனக்கு திரும்பிப் போக விருப்பம் இருக்காது. இப்படியே போய்க் கொண்டிருக்கலாம். 40 நாட்களுக்கு அது நன்றாக இருந்தது என்றால், மேலும், மேலும் அதையே நாம் அப்படியே செய்து கொண்டிருக்கலாம். வார்த்தையுடன் தரித்திருங்கள்; நித்திய ஜீவனோடு தரித்திருங்கள். கிறிஸ்துவுடன் தரித்திருங்கள். அது 40 நாட்களுக்கு அருமை யாய் வேலை செய்யும் என்றால், அது மீதம் உள்ள உங்கள் ஜீவிய நாட்களுக்கும் வேலை செய்யும். நிச்சயமாக, ஏனென்றால் வார்த்தை நித்தியமாக இருக்கிறது. அது சரியே. 59. கள்ள தீர்க்கதரிசிகள், அல்லது அவிசுவாசிகளான அஞ்ஞானிகள் (நீங்கள் அதை இரண்டு பேரிலே ஒருவரை அப்படித் தான் அழைக்க வேண்டும் ஏன் என்றால் வார்த்தையை விசுவாசிக்காத யாரானாலும் அவர் ஒரு அஞ்ஞானியே - சரியே). மேலும் அவர்கள் கலங்கினார்கள், அவர்கள் வார்த்தையின் தவறான அர்த்தத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். வார்த்தை இந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் சொல்வார்கள். அது இப்பொழுது என்ன சொல்கிறதோ மிகச் சரியாக அதன் அர்த்தத்தை உடையதாக இருக்கிறது. அவர்கள் அது அப்போஸ்தலருக்கு உரியது என்று சொல்வார்கள், அது அவர்களுக்கு... நல்லது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எப்படி அவர்களால் பிரசங்கிக்க முடிந்தது. அதன் பிறகு-? பார்க்கிறீர்களா-? வார்த்தை சொல்கிறது அவர் நேற்றும் மாறாதவரே... நல்லது, அவர் மாறாதவர் என்னும் முறையில் இருக்கிறார். அவர் ஒவ்வொரு வழியிலும் மாறாதவராயிருக்கிறார், ஆம் ஐயா, நிச்சயமாக அவர் அப்படியே இருக்கிறார். ஆம் ஐயா. 60. கள்ளத் தீர்க்கதரிசிகள், அல்லது விசுவாசிக்காத அஞ்ஞானிகள். தவறான அடையாளங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்னவிதமாக ஒரு அடையாளத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்-? இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் எல்லோரும் அவ்விதமாகவே இ`ருப்பார்கள்... அவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல, அவர்கள் பக்தியுள்ளவர்கள். ஒரு கம்யூனிஸ்ட் ஒரு போதும் யாரையும் முட்டாள் ஆக்குவதில்லை. நிச்சயமாக, ஆனால் இந்த விதமானவர்கள் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கப் போகிறார்கள். பாருங்கள், அவன் என்ன சொல்லுவான்-? "வாருங்கள் மறுபடியும் பிறவுங்கள்," அப்படிச் சொல்லமாட்டான். ஆனால் "வந்து எங்களைச் சேர்ந்து கொள்ளுங்கள்," என்பான். அது தான் அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள், பாருங்கள், "வந்து மீண்டும் சேர்ந்து கொள்ளுங்கள்", கள்ள அடையாளங்களே. ஆனால் நீங்கள் வந்து சேர்ந்துக் கொள்ளுவதல்ல. ஆனால் மறுபடியும் பிறக்க வேண்டும். அந்த அடையாளங்களை எல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம், என்று மக்களுக்கு; அவர்கள், அதையும் கூட சொல்வார்கள். உண்மையில் அவர்கள் அவர்களுடன் சேர்ந்து கலங்குவார்கள். அவர்கள் அப்படி இருப்பார்கள் என்று அதைத் தான் வேதாகமம் சொல்கிறது. அவர்கள் வானத்தின் அடையாளங்களினாலும் தேவனுடைய அடையாளங்களினாலும் கலங்கிக் கொண்டிருப்பார்கள். 61. தேவன் அவருடைய வார்த்தையின் அடையாளங்களை பரத்திலிருந்து அனுப்புவார், மேலும் மக்கள்.... அஞ்ஞானிகள்.... "அவர்கள் கற்பிப்பதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்," என்று சொல்லுவார்கள். அவர்கள் கற்றுக் கொண்டதிலிருந்து தள்ளி இருங்கள். அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டாம். அவர்கள் வேத பாடசாலை முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அதைப் போன்ற எல்லா வகையான வழிகளையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவைகளில் இருந்து தூரமாக தரித்திருங்கள். நீங்கள் வார்த்தையுடன் சரியாகத் தரித்து இருங்கள். பாருங்கள். நீங்கள் சரியாக அவைகளிலிருந்து தூரமாக தரித்து இருங்கள். ஏனென்றால் அவர்கள் தவறான அடையாளங்களைக் கொண்டு இருப்பார்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும் என்று இயேசு மாற்கு 16-ம் அதிகாரத்தில் சொன்னார். ஆம் ஐயா, அது சரியே. அப்படி அவர்களுடைய அடையாளங்கள் தொடரவில்லை என்றால், "ஓ, அது இன்றைக்கு தேவை இல்லாதது," என்று அவன் சொல்லுவான், இப்பொழுது தூரமாக இருங்கள். அந்த விதமாக (ஓ. என்னே), இப்பொழுது தீக்காயம் பட்ட ஒரு குழந்தை அடுப்பை விட்டு விலகியிருப்பதைப் போல, அதிலிருந்து தூரமாக தள்ளியிருங்கள். இப்பொழுது அதைத் தூரமாகப் புறக்கணியுங்கள். பாருங்கள். தேவனால் அனுப்பப்பட்டு, அவர்கள் ஜீவிக்கிற இந்த நாளுக்குரிய வார்த்தையின் உண்மையான அடையாளமாக இருந்தாலும், 'இதை நம்ப வேண்டாம், அவர்களால் எப்படி அதைச் செய்ய முடியும்,' என்றும் அதிலிருந்து தூர விலகியிருங்கள் என்றும் அவர்கள் மக்களிடம் சொல்லுவார்கள். 62. இப்பொழுது கொஞ்ச நேரத்திற்கு முன்பாக நான் மிகாயாவை விவரித்தேன். இப்பொழுது சற்று பின்னாகச் செல்லுவோம்; கர்த்தருக்குச் சித்தமானால் நான் இன்னும் ஒரு சில நிமிடங்களில் தீர்க்கதரிசிகளில் அனேகரைப் பற்றி விவரிக்கப் போகிறேன். ஆனாலும் நான் இப்பொழுது மிகாயாவிற்கே திரும்பிச் செல்கிறேன். இப்பொழுது பாருங்கள். ஏன், அந்த பிரசங்கிமார்களால் அங்கே இருந்த தேவனுடைய வார்த்தை ஆகாபுவை சபித்ததையும், யேசபேலை சபித்ததையும் பார்க்க முடியவில்லை. ஏன் அந்த தேசத்தின் மேலிருந்த சாபத்தை அவர்களால் பார்க்க முடியவில்லை-? ஒரு சாபம் அதின் மேலாக இருக்கும் போது அவர் அதை எப்படி ஆசீர்வதிக்க முடியும்-? பாருங்கள். அதைச் செய்ய முடியாது. தேவன் அந்த விதமாக காரியங்களைச் செய்ய மாட்டார். பாருங்கள். இங்கே மிகாயா... அந்த மனிதன் அங்கே ஏவுதலினால் சரியாக வார்த்தையுடன் நின்று கொண்டிருந்தான். மிகச் சரியாக ஆகாபுடைய இரத்தத்தை நாய்கள் நக்கும் என்றும்; யேசபேலை தின்று விடும் என்றும் தேவனுடைய வார்த்தை சொன்னது. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை அதைச் சொன்னது. மேலும் அதுதான் தேவனுடைய வார்த்தையாக இருந்தது. ஏன் என்றால் அது தீர்க்கதரிசிக்கு அந்த வார்த்தை வந்தது. மேலும் ஆகாப் பார்க்கும் போது இங்கே இன்னொரு தீர்க்கதரிசியும் தேவனுடைய சரியான வார்த்தையின் வரிசையிலே தரித்திருப்பது போல் இருந்தது. அவர்கள் அவ்விதம் காண்பதற்கு ஏற்றாற் போல இருந்தது. பாருங்கள். மேலும் அவன் சுற்றிப் பார்த்து அந்த சிறிய மனிதனைச் சபித்தான், மேலும் அந்த பேராயர் நடந்து சென்று அவன் முகத்திலே அடித்தான். அந்த மனிதனோ தான் அதை மாய்மாலமாகச் செய்யவில்லை என்றும் அவன் சரியாக இருந்தான் என்றும் நம்பினான். 63. சகோ.பிரான்ஹாமே, உங்களால் எது சரி அல்லது எது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்-? என்பீர்களானால், அவர்களுக்கு வார்த்தையின் சோதனை யைக் கொடுங்கள். அவர்கள் சரியாக இருக்கிறார்களா அல்லது தவறாக இருக்கிறார்களா என்று, அது சொல்லும். சரியாக வார்த்தையில் தரித்திருங்கள். பாருங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள். வெறுமனே, வார்த்தையை அங்கே அனுப்புங்கள். அப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். "ஓ, நல்லது நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா... ஓ, அதன் பிறகு சரியாக அதை விட்டு தூரமாக இருங்கள், இப்பொழுது அந்த வார்த்தையுடன் சரியாகத் தரித்திருங்கள். அதனால் அவர்கள் மிகாயாவிற்கு வார்த்தையின் சோதனையை கொடுத்த் இருப்பார்கள் என்றால், அவன், அதனுடன் 100 சதவீதம் இருந்தான் என்பதை நிரூபித்திருப்பான். இப்பொழுது, "ஒரு நிமிடம் பொறுங்கள்", பாருங்கள், "தேவன் அதை எங்களுக்கு கொடுத்தார்," என்று அவர்கள் சொன்னார்கள். அது சரியே. தேவன் நமக்கு பரிசுத்த ஆவியை வாக்குத்தத்தமாகக் கொடுத்தார். உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு சொன்னான். வாக்குத்தத்தமானது ஒவ்வொரு சந்ததிக்கும் உரியது. அது நமக்கு உரியதாயிருக்கிறது. அது நம்மைத் தான் குறிக்கிறது. ஆனால் நிபந்தனைகளுக்கு உரியது; நீங்கள் வேறெந்த வழியிலும் அதைப் பெற முடியாது. நீங்கள் விதிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். அது மிகச் சரியாக இருக்கிறது. 64. அந்த தேசம் அவர்களைச் சார்ந்ததாய் இருந்தது. ஆனால் அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும். மேலும் கர்த்தருடைய அறிவுரைகள் ஆகாபுக்குக் கொடுக்கப்படவில்லை. அவன் சபிக்கப்பட்டிருந்தான், தேவன் எதையாகிலும் சபித்த் இருந்தால் அவர் அதனுடன் இருக்க மாட்டார். அதை விட்டு தூரமாக இருப்பார். ஆமென். (அது ஒரு நல்ல இரட்டை குழல் துப்பாக்கி போல் இல்லையா-?) ஆம், ஐயா. தேவன் அந்த காரியத்துடன் இருக்கவில்லை என்று நிரூபித்தார் என்றால் அதை விட்டு விலகி இருங்கள். அது தான் சரி. அது தொடக்கத்திலேயே நன்றாக இருக்கவில்லை. தேவன் அதை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து விட்டார். மேலும், நான் அதனுடன் இருக்க விரும்ப மாட்டேன் என்று நான் நிச்சயத்திருக்கிறேன். ஆம் ஐயா. எதையாகிலும் பெறுவதற்காக அந்த வழியில் செல்லுவது அதிக தொல்லையையே உண்டாக்கும். 65. இப்பொழுது அவன் சொன்னான்... இப்பொழுது நாம் தரித்திருக்க விரும்புவது... இது... இந்த நபர்கள் அந்த சிறிய பிரசங்கியை எடுத்து. "இவனை சிறைசாலையில் இருக்கிற உள் அறையில் வைத்து இங்கே இருக்கிற பெரிய மரத்தினால் செய்யப்பட்ட கழுத்து வளையங்களில் ஒன்றை அவன் மேல் வைத்து கடினமான இடத்தில் அவனை வையுங்கள். மேலும் நான் சமாதானத்துடன் திரும்பி வரும் வரைக்கும் இப்பொழுது சாதாரண அப்பத்தினாலும் தண்ணீரினாலும் அவனை போஷியுங்கள். அதன் பிறகு நான் இந்த இம்லாவின் மகனாகிய, இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கிறேன், என்று சொன்னான். அவனோ, "நீர் திரும்பி வருகிறது உண்டானால் கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை", என்றான். அவன் பின் வாங்கவில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தான். அவனுக்கு வந்த ஆவியும் அந்த தரிசனமும் மிகச் சரியாக தேவனுடைய வார்த்தையின் வரிசையுடன் இருந்தது. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். இப்பொழுது நான் எதைப் பெற்றிருக்கிறேன் என்பதைப் பார்க்கிறீர்களா-? உங்களுடைய தரிசனம் மிகச் சரியாக வார்த்தையின் வரிசையில் இல்லையென்றால் நீங்கள் அதை விட்டு விலகி இருப்பது நல்லது. நீங்கள் எந்த விதமான வாக்குத்தத்தத்தை உரிமை கொள்ள முயற்சி செய்தாலும் அதைப் பற்றி ஒன்றுமில்லை. நீங்கள் வார்த்தை உடன் ஒரே வரிசையில் திரும்பி வருவது நலமாக இருக்கும். அது தான் சரி. அது சரியாக சத்தியமாயிருக்கிறது. பாருங்கள். 66. இந்த உலகத்தில் உரைக்கப்பட்ட இந்த நாளுக்குரிய நிறைவேறுதலின் காலத்தில் நிகழ்கிற, தேவனுடைய மெய்யான அடையாளமாக இருந்தாலும் அவர்கள் அதை மறுதலித்து, "அதில் ஒன்றுமில்லை", என்று சொல்லுவார்கள். அது சரியே-! அதை விசுவாசிக்க மாட்டார்கள். ஓ. என்னே, அவருடைய உண்மையான தீர்க்கதரிசன வார்த்தையினால் அவர் நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பாக வேதாகம அடையாளங்களை எப்பொழுதும் தருகிறார். பாருங்கள். அவருடைய வார்த்தையினால் அவர் அதை முன்னதாகவே பேசுவார். அதன் பிறகு அந்த வார்த்தைக்கு அது கடந்து வரும். மேலும் இங்கே அந்த வார்த்தை எந்த வழியில் இருக்கிறதோ அதே வார்த்தையை அறிவிப்பதற்காக அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவர் வருவார். மேலும் அவர் ஒரு நியாயத் தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பாக அப்படிச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் எப்பொழுதும்... மேலும் யாராவது ஒருவர் வேதாகம சத்தியத்துடன் வருகிறார் என்றால் தேவன் அதை சாட்சி பகருகிறார். எபிரேயர்-2:4-ல் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. அற்புதங்களுடன், அடையாளங் களுடன் அதை சாட்சி பகருகிறார். தேவன் அற்புதங்களினாலும் அடையாளங் களினாலும் வார்த்தையை (மாற்கு-16) உறுதிப்படுத்துகிறார். என்ன பிரசங்கிக்கப் பட்டதோ தேவன் அதை உறுதிப்படுத்துகிறார். நிச்சயமாக, நீங்க ஒரு சிறிய தெய்வீக சுகமளித்தல் ஆராதனையைக் கொண்டு இருக்கலாம். அது சரியாக வேலை செய்யலாம். ஆனால் அந்த மற்ற காரியங்களைக் குறித்து என்ன-? பாருங்கள். நீங்கள் வார்த்தையை எடுத்துக் கொண்டு இப்பொழுது இங்கேயே அதைச் செய்ய வைக்க முடியும். அதன் பிறகு அதனுடைய மற்ற காரியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் அதனுடைய இடத்தில் அது வேலை செய்யும் சரியாக ஒவ்வொரு இடத்திலும். இப்பொழுது மிகச் சரியாக ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் வார்த்தையை வையுங்கள். அது சரியான விதமான வாய்காலில் இருக்கும் என்றால், அந்த வார்த்தை வேலை செய்யும். அதற்குப் பின்பாக விசுவாசம் இருந்து கொண்டு அதை நம்பச் செய்யும். அதன் பிறகு அது வளர்ந்தாக வேண்டும். 67.அங்கே யோசேப்பு 2800 வருடங்களுக்கு முன்பு எகிப்தின் களஞ்சியத்தில் வைத்திருந்த சில சூரியகாந்தி விதைகளை அல்லது கோதுமை விதைகள் என்று நான் நம்புகிறேன், அவைகனை எடுத்து நட்டதினால் அது ஒரு நல்ல கோதுமை விளைச்சலைத் தந்தது என்பதை ஒரு நாளில் நான் பார்த்தேன். அது எவ்வளவு பழையதாக இருந்தாலும் அதற்குள் இன்னும் ஜீவன் இருந்தது; ஏன் என்றால் அது உயிர்ப்பிக்கப்பட்ட விதையாக இருந்தது. வாக்குத்தத்தம் செய்யப்பட்டு எவ்வளவு காலம் கடந்தாலும் ஒன்றுமில்லை. அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் அது உண்டாகி இருக்கிறது. அந்த விதைக்கு தண்ணீர் இருக்க வேண்டும். ஆமென். அந்த விதை எதுவோ அதன் மகசூலை அது கொண்டு வரும். 68. நாம் ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொண்டோம். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது ஒரு ஸ்தாபன எழுப்புதலாய் இருக்கிறது. ஏன்-? ஏனென்றால் நாம் ஸ்தாபன விதைகளை விதைத்தோம். சரியாக பரிசுத்த ஆவியானது விழும் போது: இப்பொழுது மழையானது நீதியுள்ளது மேலும் அநீதியுள்ளது மேலும் பொழிவது போல... மழை பெய்து ஒரு களையை (Coclebur) வளரச் செய்கிறது. (குறிப்பு: coclebur கோதுமை கதிர் போன்ற தோற்றமுடைய ஒட்டுப்புல் கதிர் - தமிழாக்கியோன்) மேலும் கோதுமையையும் வளரச் செய்கிறது. அவைகள் இரண்டும் கூட இப்பொழுது மற்றதைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறன. ஆனால் அவைகளுடைய கனிகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாம் என்ன செய்ய முயற்சி செய்தோம்-? ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த ஸ்தாபனத்தில்; அந்த ஒன்றைத் தான் செய்கிறோம். இந்த ஸ்தாபனம் அந்த ஒன்றைக் காட்டிலும் அதிகம் செய்கிறது; நாம் ஒரு பில்லி கிராஹமைக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு ஒரு எழுப்புதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாப்டிஸ்டுகள் உங்களில் ஒருவரான இவர் மிகச் சிறந்த தேவனுடைய மனிதனும்கூட; ஆமாம். பெந்தெகொஸ்தேயினர் ஒரு எழுப்புதலைக் கொண்டு இருக்கிறார்கள். ஓரல் ராபர்ட்ஸ்; ஓ என்னே-! அவர்களில் அநேகர் மிகச் சிறந்த எழுப்புதல்களை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரிடம் எண்ணிக்கையில் அதிகம் இல்லை என்று கணக்கிட்டார்கள். அது இப்பொழுது என்னவாய் முடிந்து விட்டது. 69. உங்களுக்குத் தெரியுமா-? அங்கே ஒரு முன்மாரியும் மேலும் ஒரு பின்மாரியும் இருக்கும் என்று யோவேல் சொன்னது-? முன்மாரி (மு-ன்-மா-ரி) என்பது "மோரே," எபிரேய வார்த்தையில் அதின் அர்த்தம் என்னவென்றால் ஒரு விதைப்புக்கான மழை ஒரு விளைச்சலுக்காக விதைப்பது. அது தான் காரணம். நீங்கள் எதை அறுவடை செய்தீர்கள்-? ஓ, ஸ்தாபனம் கட்டி எழுப்பினதை, ஆனால் தேவன் எந்த இடத்தில் இருக்கிறார் நீங்கள் ஸ்தாபன விதைகளை விதைத்தீர்கள். பரிசுத்த ஆவி விழும்போது அது ஒரு ஸ்தாபன எழுப்புதலை உண்டாக்கியது. நமக்கு என்ன தேவையாய் இருக்கிறது, வார்த்தைக்குத் திரும்புதலே. தேவனுடைய உண்மையான வார்த்தைக்குத் திரும்பி வந்து, மணவாட்டியை கிறிஸ்துவிற்கும் வார்த்தைக்கும் கொண்டு வரவேண்டும். ஸ்தாபனத்தை விட்டு விடலாம்... அதெல்லாம் சரியே. அதற்கு எதிராக எதுவுமில்லை. ஆனால் ஒவ்வொருவருடைய... "இப்பொழுது ஒரு சில குத்துக்களைக் கொடுக்கலாம். உங்களுக்குத் தெரியுமா, ஏனென்றால் அவர்கள் செய்யவில்லை என்றால். மற்றவர்களிடம் வெளியே குத்து வாங்குவார்கள். குத்துக்களை வாங்குவதற்கு பதிலாக தேவன் இரக்கமாயிருப்பாராக. சத்தியத்தைச் சொல்லுங்கள் அல்லது வாயை மூடிக் கொள்ளுங்கள். ஆம் ஐயா, வெறுமனே எழுதப்பட்டுள்ள வழியில் இது தான் இவ்விதம் தான் என்று சொல்லுங்கள். அதை தேவன் உறுதிப் படுத்துகிறாரா-? என்று பாருங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கும்படி நான் சவால் இடுகிறேன். அது சத்தியம் என்பதை அறிந்திருக்கிறேன். பாருங்கள். ஆனால் நீங்கள் வார்த்தையில் அப்படியே தரித்திருந்து அதை விசுவாசிக்க வேண்டும். இந்த வழியாக இங்கே நழுவவோ, அந்த வழியே நழுவுவவோ செய்யக் கூடாது. மேலும், "நான் கொத்தி எடுத்து மேலும் முயற்சி செய்கிறேன்" என்றும் சொல்லக் கூடாது. நீங்கள் அதைச் செய்யக் கூடாது. இல்லை, இல்லை நீங்கள் முழு இருதயத்துடன் வந்தே ஆகவேண்டும். "தேவரீர் அது உம்முடைய வார்த்தை நான் அதை விசுவாசிக்கிறேன்", என்று கூற வேண்டும். தேவன் அதைச்செய்வார். அது சரியாக அதன் பிறகு வேலையைச் செய்யும். ஆம் ஐயா. 70. ஆம் ஐயா, அவர் எப்பொழுதுமே நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பாக வேதாகம வார்த்தையுடன் யாரோ ஒருவரை அனுப்புகிறார். அதை அனுப்புவ தற்கு முன்பாக வேதாகம அடையாளங்களைக் காண்பிக்கிறார். அவிசுவாசி ஒரு பத்து இலட்சம் மைல்களுக்கு அப்பால் அதைத் தவறவிடுகிறான். ஏன்-? அவன் அதனுடன் கலங்குகிறான். அதைரியப்படுகிறான்-? ஏன்-? ஏனென்றால் அவன் அதை விசுவாசிக்கவில்லை. ஆமென். ஆனால் அது எப்பொழுதுமே அதனுடைய அறுவடையை அதே விதமாக கொண்டு வருகிறது. பாருங்கள் அவிசுவாசிக்கு... "ஓ, அத்தகைய முட்டாள்தனம். அத்தகைய முட்டாள்தனம்... ஓ," என்று அவன் சொல்லுவான். என்னே, அங்கே அதினுடன் ஒன்றுமில்லை. ஏன் அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்றுவிட்டது என்று உங்களுக்குத் தெரியும். அத்தகைய ஒரு காரியம் அங்கே அதைப் போன்று கிடையாது, ஓ, என்னே, அது பயங்கரமாக இருக்கிறது. வெறுமனே ஒரு குப்பை குவியலாய்தான் இருக்கிறது. அங்கே அதுவாகத் தான் எல்லாம் இருக்கிறது", என்பார்கள். ஆனால் சரியாக அதே விதமாகத் தான் அவர்கள் சென்று கொண்டிருப்பார்கள். 71. நல்லது. மோவாப் அங்கே நின்று கொண்டு அவனுடைய சகோதரனாகிய இஸ்ரவேலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா-? அது என்னவாக இருந்தாலும், வேறொரு பாளையத்தில் இருந்த மோசே அங்கே பலி செலுத்தினது போன்றே இந்த கள்ளத் தீர்க்கதரிசியும் வேத சாஸ்திர நியமங்களுடன் அதே போன்று பலியைச் செலுத்தினான் என்று உங்களுக்குத் தெரியுமா-? அது சரியே-! இங்கே பிலேயாம் (பேராயர்-பிலேயாம்) வருகிறான். மகத்தானதாக, பெரியதாக ஸ்தாபிக்கப்பட்ட மோவாப் என்கிற தேசத்திலிருந்து வருகிறான். லோத்தின் மகள், அங்கிருந்து தான் அது வருகிறது. மற்றுறொரு தேவனுக்கு அல்ல. அதே தேவனுக்கு அங்கே வந்து மேலும் ஏழு பலிபீடங்களை வைத்தான். யேகோவா என்ன செய்யக்கோரு கிறாரோ, பரிபூரணமான எண்ணில், யேகோவா, ஏழு பலி-யாகங்கள், சுத்தமான பலிகள், இப்பொழுது மிகச் சரியாக யேகோவா என்ன சொன்னாரோ... அதைத்தான் மோசே இங்கே கொண்டிருந்தான், மிகச் சரியாக அதைத்தான் ஏழு ஆட்டுக்கடாக்கள், தேவனுடைய குமாரனின் வருகையைக் குறித்து பேசுகிற ஏழு ஆட்டுக்கடாக்கள். ஆம், ஐயா, ஆனால் ஓ, சகோதரனே, அவன் அந்த அடிக்கப்பட்ட கன்மலையை, அந்த வெண்கல சர்பத்தைப் பார்க்கத் தவறி விட்டான். அதைத் தான் அவன் பார்க்க தவறினான். மேலும் அது தான் இன்றைக்கும் அதேகாரியமாக இருக்கிறது. பரிசுத்தாவியானவர் வார்த்தையிலும் மற்றும் தேவனுடைய வாக்குத்தத்தத்திலும் அசைவாடுவதையும் அவர்கள் காணத் தவறினார்கள், அவர் வாக்குத்தத்தம் செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் கொண்டு வருவதை அவர்கள் காணத் தவறினார்கள். அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. அது தான் காரணமாயிருக்கிறது. 72. இப்பொழுது நாம் ஒரு சிறிது நேரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு சில நிமிடங்களை, நோவா, மற்றும் தேவனால் கொடுக்கப்பட்ட அவனுடைய அடையாளங்கள். அவன் தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு அடையாளத்தை கொண்டிருந்தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நிச்சயமாக, அவன் கொண்டிருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டிருந்தான். தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியாக தீர்க்கதரிசனம் உரைத்து, மேலும் அங்கே வானத்தில் ஒரு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்படியாய் மேகங்கள் மேலே வந்து மழை விழும்படியாக, அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்தான். அது வரைக்கும் அங்கே ஒரு போதும் மழை பெய்யவில்லை தேவனால் கொடுக்கப் பட்ட அவனுடைய அடையாளம். அவன் சரியாக பேழையின் வாசலில் நின்று கொண்டு 120 வருடங்கள் பிரசங்கித்தான். அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து அவனைக் கேலி செய்தார்கள். 73. உங்களுக்குத் தெரியுமா, இயேசு அதை குறிப்பிட்டிருந்தார். மத்தேயு 24-ம் அதிகாரத்தில் மறுபடியும் நோவாவின் நாட்களைக் குறித்து-? நோவாவின் நாட்களிலே நோவாவின் நாட்களில் நடந்தது போல,"... என்று அவர் சொன்னார். அவர்கள் புசித்தார்கள். குடித்தார்கள், பெண் கொண்டும், பெண் கொடுத்தும், அதே காரியத்தைத் தான் மத்தேயு 24-ல் இங்கே அவர் சொன்னார். அது மிகச் சரியாக இருக்கிறது. அவர்கள் அதே காரியத்தைத் தான் செய்தார்கள். மேலும் நீங்கள் கீழே கவனித்தீர்களா சரியாக அங்கே வானங்களிலே பயங்கரமான காட்சிகள் உண்டாயிருக்கும் என்றும் கூட அவர் கூறினார். வானங்களிலும், பூமியிலும் அடையாளங்கள் தோன்றும். இங்கே, எரேமியா என்ன சொன்னான்-? வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி நீங்கள் அவைகளால் கலங்காதிருங்கள், என்றானே-! இங்கே பாருங்கள், "வானத்தின் அடையாளத்தினாலா-?" என்றா சொல்லுகிறீர்கள். ஏன்-? அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள் பென்டகனும் கூட; வெகு நாட்களுக்கு முன்பாக அல்ல நீங்கள் அதைப் பார்த்தீர்கள். இங்கே, இந்த எல்லா பறக்கும் தட்டுகளும். காரியங்களும்; அவர்கள் இந்த எல்லா காரியங்களைக் குறித்தும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களால் இதுவரைக்கும் அது என்னவென்று வெளியே கொண்டு வரமுடியவில்லை. ஏறக்குறைய அது ஒரு காணக் கூடாத படையாக இருக்கிறது. மேலும் அங்கே கீழே இறங்கி வந்தது. இதுவரைக்கும் அது அறிவு சார்த்தது. இப்பொழுது நான், ஒரு பறக்கும் தட்டு மனிதன் அல்ல. அதைக் குறித்து எல்லாம் இங்கே முட்டாள்தனமாக சொல்லப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஒன்றுமே இல்லை. அவைகளை நீங்கள் நம்ப வேண்டாம். ஆனால் அவைகள் அடையாளங்களாக இருக்கிறது, மிகச் சரியாக அங்கே பெண்டகன் (அமெரிக்க இராணுவ தலைமை அலுவலகம்) மேல் ஏன் தோன்ற வேண்டும். அங்கே வாஷிங்டனின் மேல் ஏன் அவைகள் தோன்ற வேண்டும். அவைகளை அங்கே அவர்கள் எல்லா நேரத்திலும் பார்க்க முடிந்தது இது வரைக்கும் கூட. நாம் அதைப் பற்றி சிறிது நேரத்திற்கு பின் வருவோம், அவர் சொல்லவில்லையா, "நோவாவின் நாட்களிலே நடந்தது போல மனுஷ குமாரனுடைய வருகையின் நாட்களிலும் இப்படி நடக்கும்", என்று அது சரியாக இருக்கிறது. 74. மோசே- அவனுடைய அடையாளம் தேவனால் கொடுக்கப்பட்ட அடையாளம். வேதாகம் அடையாளம். மோசேவுடைய அடையாளம் வேதாகம் அடையாளமாக இருந்தது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? மோசே எப்படி தெரிந்து கொண்டான். அது தேவன் தான் என்று மோசே எப்படி தெரிந்து கொண்டான். அவன் தீர்க்கதரிசியாக பிறந்திருந்தபடியால்: அவனைக் குறித்த தேவனுடைய வார்த்தை என்னவென்றும்; அங்கே அவன் சென்று பார்த்தது என்னவென்றும் புரிந்து கொண்டிருந்தான். ஆகவே. இஸ்ரவேலை விடுவிக்கும்படி அங்கே சென்று, அது அதற்குரிய சரியான தருணமல்ல என்பதையும் கண்டு கொண்டான். மக்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஒரு தீர்க்கதரிசியால் ஒரு போதும் தனது செய்தியைக் கொடுக்க முடியாது. ஆகவே, தேவன் தனது தீர்க்கதரிசியை வனாந்திரத்திற்கு அழைத்தார். அவனை அங்கே கொண்டு போய் ஜனங்கள் ஆயத்தப்படும் வரை இன்னும் கொஞ்சம் நாட்கள் கஷ்டப்பட விட்டு விட்டார். மோசே ஆயத்தமாய் இருந்தான்; தேவன் ஆயத்தமாய் இருந்தார்; ஆனால் ஜனங்கள் ஆயத்தமாக இல்லை. அவர்கள் ஆயத்தமாக இல்லாததால் மேலும் கூடுதலாக நாற்பது ஆண்டுகள் அங்கே தங்க வேண்டியதாயிற்று. அது மிகவும் சரியானதே-! 75. ஆனால் மோசே இந்த எரிகிற முட்செடியைக் கண்டபோது, அவன் அதிகமாக அக்கினியைப் பார்த்தான் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் இந்த சப்தம் இந்த முட்புதரிலிருந்து வந்த போது, ஒருவேளை அவன் அதிகமான சப்தங்களை கேட்டிருக்கலாம். ஆனால் இந்த சப்தம் முட்புதரிலிருந்து வந்து போது அது என்ன சொன்னது என்று உங்களுக்குத் தெரியுமா-? அது அவனுக்கு வேதத்தை மேற்கோள் காட்டினது. மேலும் அது ஒரு வேதாகம அடையாளமாக இருந்தது. ஏனென்றால் தேவன் ஆபிரகாமிடத்தில் அவனுடைய மக்கள் ஒரு அந்திய தேசத்தில் 400 வருடங்களாக அந்நியர்களாக இருப்பார்கள் என்று சொல்லி இருந்தார். அதன் பிறகு அவர் ஒரு பலத்த கரத்தினாலும், வல்லமையினாலும் அந்த தேசத்திலிருந்து அவர்களை விடுவிப்பார் என்று அவர் சொன்னார். "நான் அதை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன், மோசே, நான் உன்னை அங்கே அனுப்புகிறேன் என்றார். (ஆமென்) வேத வாக்கியங்களைக் கொண்டு செய்யப் போகிறேன். நான் உனக்கு வேத வாக்கியங்களைக் கொடுக்கப் போகிறேன், இப்பொழுது உன்னுடைய கரத்தில் பெற்றிருக்கிற இந்த பழைய கோலை எடுத்துக் கொண்டு எவ்வளவு கடினமாக இருந்தாலும் சென்று எகிப்தை மேற் கொள்வாயாக. அவர் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றும்படியாய் அவர் அதைச் செய்யப் போகிறார். 76. அவர்கள் அங்கே என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா-? எகிப்தியர்கள், "மோசே, ஓ, தேவனுடைய மகத்தான தீர்க்கதரிசியே," அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தார்கள். மேலும் அவன் செய்த அடையாளங்களினால் அவர்கள் கலங்கினார்கள். அது சரியாக இருக்கிறதா-? ஏன் அவன் செய்கிற அடையாளங்களினால், இஸ்ரவேலர்களும் கூட அவனிடம் கலங்கினார்கள். "ஏன் எங்களை நீர் கடினமாக வேலை செய்ய வைக்கிறீர் ஏன், எங்களுடைய கரங்களைப் பாரும். நாங்கள் வைக்கோல்களைச் செய்ய வேண்டும். மேலும் அதைப் போன்று," மோசே மெய்யாகவே தேவனால் கொடுக்கப்பட்ட அடையாளங்களைச் செய்து கொண்டிருந்தான். மேலும் இன்னுமாய் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அது இப்பொழுதும் அவ்விதமாகவே இருக்கிறது. பாருங்கள். மோசே அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தான். எகிப்தை அதைரியப்படுத்தினான். தேவனுடைய அடையாளங்களினால் எகிப்தை அதைரியப்படுத்தினான். தீர்க்கதரிசனமாய் உரைத்த அடையாளங்களினால் அதைரியப்படுத்தினான். தேவன் வாக்குத்தத்தத்தின் தகப்பனாகிய ஆபிரகாமிடத்தில் சொல்லியிருந்தார் அவனுடைய வித்து, இஸ்ரவேல் ஒரு அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள் என்றும், அவர் தன்னுடைய பலத்த கரத்தைக் காண்பித்து அவர்களை விடுவிப்பார் என்றும் சொல்லி இருந்தார். மேலும் வேத வாக்கியங்களின்படியே இங்கே அந்த மனிதன் இருந்தான். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த அடையாளங்களுடன் இங்கே அந்த மனிதன் இருந்தான். அவர்கள் அதை நம்பவில்லை என்பதால் அவர்கள் அழிந்து போனார்கள். நிச்சயமாக. 77. நீங்கள் இன்னொரு தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலை நினைத்துப் பார்க்கிறீர்களா-? ஏன் எசேக்கியேல், அந்த மனிதனுக்கு, "நான் செய்யப் போகிறேன்," என்று தேவன் அவனிடத்தில் சொன்னார். இப்பொழுது நியாயத் தீர்ப்பு வருவதற்கு முன்பாக... தேவன் மோசேயை அனுப்பினார். நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பாக நோவாவை அனுப்பினார். அவர் நோவாவை அனுப்பி மேலும் எல்லா மக்களையும்... நான் சொல்வது மோசே, கொள்ளை நோயினால் பாதிக்கப்படாதவர்களாக அந்த மக்கள், அவனுடையவர்கள் அந்த தேசத்தில் இருந்தார்கள். மேலும் அவர், நோவாவை அனுப்பி எல்லா விசுவாசிகளையும் அந்த பேழைக்குள்ளாக எடுத்துக் கொண்டு, அவிசுவாசிகளை அதனால் அழித்துப் போட்டார். நோவாவினுடைய அடையாளத்தினால் (ஒரு பேழையை கட்டிக் கொண்டு, தயார் செய்து கொண்டு, என்ன நடக்கப் போகிறதோ அதை தீர்க்க தரிசனமாக உரைத்துக் கொண்டிருந்தான்) பேழைக்குள் சென்து எல்லாம் காக்கப் பட்டது. கோசேனுக்குள் சென்றவர்கள் எல்லோரும் காக்கப்பட்டார்கள். 78. இங்கே எசேக்கியேல் வருவதற்கு முன் தேவன் அவர்களை பாபிலோனுக்குக் கொண்டு சென்றார். "உன் இடது பக்கமாக 390 நாட்கள் படுத்திரு", என்று அவனிடம் அவர் சொன்னார். "நான் அந்த பாரத்தை உன் மீது வைக்கிறேன்", என்றார். இஸ்ரவேலில், எருசலேம் வாசல்கள் உள்ள இடத்தில் இந்த வயதான நரைத்த தலையை உடைய தீர்க்கதரிசி ஒரே பக்கமாக படுத்திருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா-? எல்லா மக்களும் வந்து, "அந்த பைத்தியகாரனைப் பாருங்கள் அங்கே படுத்துக் கொண்டிருக்கிறான்," என்று சொன்னார்கள். ஒரு பழைய கூழில் பயறு அது போன்ற விதைகளுடன் மேலும் அவைகள் பல வாரங்களாக புளித்ததாக இருந்தது. மேலும் அங்கே அவன் படுத்துக் கொண்டிருந்தான், அவனுடைய இடது பக்கத்தில் 390 நாட்களாக படுத்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு தேவன் சொன்னார், "மறுபடியும் திரும்பி உனது வலது பக்கத்தில் இன்னும் 40 நாட்கள் படுக்க வேண்டும்", என்றார். ஏன், அது ஒரு அவமானகரமான செயலாக இருந்தது. 79. ஓ. இஸ்ரவேலர்கள் உண்மையாகவே பகட்டாக இருந்தார்கள், என்று உங்களுக்குத் தெரியுமா. பையனே அவர்கள் மற்ற தேசத்தாரோடு ஒன்று சேர்ந்து தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்கள் தீர்க்கதரிசிகள் அதைப் போன்ற காரியங்களை தவிர்த்து விட விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வார்த்தை ஆனது தீர்க்கதரிசிகளிடம் வந்தது என்பதை மறந்து போனார்கள். அவர்கள் தங்களுடைய தேவர்களை உடையவர்களாக இருக்க விரும்பினார்கள். அவர்கள் தங்களுடைய வழியிலே... அதை விசுவாசிக்கும்படியாய் அதை விரும்பினார்கள். ஆனால் தேவனோ அவர்களுக்கு ஒரு அடையாளமாக ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். மேலும் அவன் அந்த அடையாளத்தைச் செய்தான். அவர்கள் அந்த அடையாளத்தை பொருட்படுத்தாமல் புறக்கணித்து, நியாயத்தீர்ப்புக்குள் சென்றார்கள். எவ்வளவு காலமாக.., 430 வருடங்களாக. அவர் அதை ஒரு நாளை ஒரு வருடமாக அவர்களுக்கு அனுமதித்தார். அவர்கள் அவனைப் பார்த்து சிரித்த போது, அவர்கள் சிரித்த ஒவ்வொரு நாளுக்கும் மற்றொரு வருடம் சிறை இருப்பில் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. இல்லை ஐயா, ஆனால் அவர் அவர்களை நியாயத் தீர்ப்புக்காக வெளியே பாபிலோனுக்கு கொண்டு சென்றார். ஓ, என்னே, 80. இப்பொழுது இன்னும் ஒருவரை நினைத்துப் பார்ப்போம். ஒரு வெப்பமான கோடைகாலத்தின் காலையில், சமாரியாவின் சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த, அவன் முகம் முழுவதும் சுருக்கங்களாக, அவனுடைய மிகச் சிறிய கண்கள் வானத்தை அண்னாத்து பார்த்துக் கொண்டு கையில் கோலை வைத்துக் கொண்டும் நிலத்தின் மேல் அவனுடைய வெறும் கால்களுடன் பழைய ஆட்டுத் தோல் துண்டு அவனை சுற்றிக் கொண்டிருக்க (பார்ப்பதற்கு ஒரு அடர்ந்த ரோமம் உள்ள புழு வெளியே வந்து கொண்டிருப்பதைப் போல), மேலும் அவனுடைய வழுக்கை தலை பளபளப்பாக இருந்தது. குச்சி அவனுடைய கையில், கோல்.... சகோதரனே, அவனுடைய நடை இப்பொழுது சமாரியா சாலையில், ஒரு வாலிப மனிதன் நடந்து வருவதைப் போல இருந்தது. அவன் ஆகாபுக்கு முன்பாக வந்த போது தடுமாறவில்லை. அவன் வெகு நாட்களாகவே அவர்களுடைய சபிக்கப்பட்ட வழியைக் குறித்து அவர்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை நாட்டின் முதல் பெண்மணியைப் போல் அவர்கள் இதைப் போன்ற நவீன தலை அலங்காரம் (வாட்டர் ஹெட்" பாணி தலைமுடியை) (water head hair cut) அவர்களுடைய காலத்தில் உடையவர்களாய் இருந்தார்கள். உங்களுக்குத் தெரியுமா-? அவன், போதுமான யேசபேலையும், மேலும் அவளுடைய எல்லா நடத்தைகளையும் அவன் அவர்கள் மேல் சுமத்தி கண்டித்தான். அவன் தேவனுடைய தீர்க்கதரிசி தான் என்பதை காண்பிப்பதற்காக தேவன் அவனை நிரூபித்தார். ஆம் ஐயா, ஆனால் அவர்கள் அந்த முதல் பெண்மணியைப் போல இருக்க விரும்பினார்கள். உங்களுக்குத் தெரியுமா, அதுவே பலமுறை அடிக்கடி திரும்ப நடந்து கொண்டிருந்தது. 81. இந்த தேசம் ஒரு முழுமையான அளவு இஸ்ரவேலைப் போல இருக்கிறது. தேவன் அவர்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுத்தார். அவர்கள் அங்கே வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டனர். மேலும் அவர்கள் சாலமோனைப் பெற்றிருந்தார்கள். தாவீதைப் பெற்றிருந்தார்கள், அருமையான ராஜாக்களைப் பெற்றிருந்தார்கள். மேலும் ஒரு ஆகாப் இங்கே வந்தான். ஒரு தெளிவற்றவனாய் - (யேசபேலுடைய பொம்மலாட்ட பொம்மை யாக) அவள் இராஜ்ஜியத்தினுடைய கழுத்தாக, அவனுக்கு வழிகாட்டிக் கொண்டு இருந்தாள். நாமும் அதே காரியத்தைத் தான் செய்தோம். இங்கே வந்து இஸ்ரவேலரை ஒடவிட்டோம் அல்லது செவ்விந்தியர்களை வெளியே அனுப்பினோம். வெளியே தள்ளி அவர்களை மரண பரியந்தம் பசியால் தவிக்க விட்டோம். (அது சரி) அவர்களுடைய தேசத்தை எடுத்துக் கொண்டோம். நாம் ஒரு வாஷிங்டன், மேலும் ஒரு லிங்கனைப் பெற்றிருந்தோம். ஆனால் இப்பொழுது நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் இப்பொழுது அங்கே பழமையான யேசபேல் அமைப்புடன் அதற்கு பின்பாக ஏதோ ஒரு காரியத்தைப் பெற்றிருக்கிறோம். மிகச் சரியாக அவர்கள் பெற்றிருந்ததைப் போல. தேவன் நம்மிடத்தில் அனுப்புவார்... அவர் கடைசி நாட்களில் வாக்குத்தத்தம் செய்தது போல. மல்கியா 4-ன் படி ஒருவரையும் விட்டு வைக்காத அவர், ஒருவரை எழுப்புவார். (அது சரி) அது சரியாக இருக்கிறது. மேலும் அவனுடைய எல்லா அற்புதங்களையும் அவன் செய்து முடித்து... சகோதரனே, அவன் அடையாளங்களையும் "கர்த்தர் உரைக்கிறதாவது," என்பதைப் பெற்றிருந்தான் என்று நான் சொல்கிறேன். தலைநகரத்திற்குச் சரியாக நடந்து சென்று, 'என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்", என்றான். காலை உதைத்து வந்த வழியே திரும்பிச்சென்று விட்டான். ஏன்-? அவனிடம் "கர்த்தர் உரைக்கிறதாவது, என்பது இருந்தது.'' அது ஒரு அடையாளமாகும். அந்த தேசத்தில் வறட்சி ஏற்பட்டு மரணம் நேரிட்டது. 82. இந்த முறை நான் நினைக்கிறேன், யேசபேலின் சில பிள்ளைகளுக்கு அது ஒரு ஆவிக்குரிய மரணமாக இருக்கப்போகிறது. ஆம் ஐயா. ஆம் ஐயா ஆவிக்குரிய மரணம். காய்ந்து போனது. என்னால் ஒரு சில காரியங்களைச் சொல்ல முடியும், ஆனால் அதை தனியே விட்டுவிடுவது நல்லது. ஏனென்றால் அங்கே ஒரு ஒலிநாடாவில் இது பதிவு செய்யப்படுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது ஓ, என்னே, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் அந்த நாள்-! ஆம் ஐயா. தேவனால் கொடுக்கப்பட்ட அவனுடைய ஊழியத்திற்கு பிறகு தேவனுடைய உண்மையான வார்த்தையும் உண்மையான அடையாளங்களும் மேலும் அற்புதங்களும் புறக்கணிக்கப்பட்டது. அந்த மனிதனால் என்ன செய்ய முடியும்-? அவர்களைக் கடிந்து கொண்டு கூக்குரலிட்டான். யேசபேல் அவனை வெறுத்தாள். மேலும் அவளுடைய எல்லா முதல் தரமான நவீன சீமாட்டிகளும் அவனை வெறுத்தார்கள். அவர்கள் அவனை விரும்பவில்லை. நிச்சயமாக இல்லை. அவன் ஒரு பயங்கரமான ஆள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அவன் மேய்ப்பனாக இருந்தான். ஆம், அவ்விதமே-! ஓ. ஆம். எலியா தான் மேய்ப்பர். ஓ, அவள், அவனை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவன் தேவனால் அனுப்பப்ட்ட மேய்ப்பனாக இருந்தான். அவன் அவளுக்கு, தேவனுடைய மேய்ப்பனாக இருந்தான். அவன் அவளை விட்டு வைக்கவில்லை. அவன் வார்த்தையைப் பொழிந்தருளினான். அவர்கள் அவனை நிராகரித்தார்கள். மேலும் அவன் ஒரு முட்டாள் என்று நினைத்தார்கள். அவனை தூர விலக்கினார்கள். ஒரு ஸ்தாபனமும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அவனை எட்டி உதைத்துத் தள்ளினார்கள். அது வார்த்தையை நிறுத்த முடியவில்லை. சரியாக அதே விதமாகச் சென்றது. அதனால் அவன், ஆகாபுக்காக, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதைப் பெறும் வரைக்கும் அங்கே காத்திருந்தான். மேலும் அவன் வந்து அதை அவனிடத்தில் கூறினான். மேலும் அவன் அதைச் செய்த போது பஞ்சம் அந்த தேசத்தைத் தாக்கினது. அது சரியே, மேலும் என்ன நடந்தது என்று நீங்கள் அறிவீர்கள். நிச்சயமாக வறட்சி வருவதற்கு முன்பாக அது எலியாவாக இருந்தது. 83. அந்த அவனுடைய பாணியில் இவ்னொருவரை நாள் பார்க்க விரும்புகிறேன். அவனுடைய வகையாய் இருந்த ஒருவர், அல்லது அவனுக்கு ஒரு எதிர் வகையானவர். யோவான் வந்து கடைசி தீர்க்கதரிசியின் செய்தியை நிறைவேற்றினபோது மல்கியா... உங்களுக்குத் தெரியும், யோவான் ஒரு வினோதமாகப் பிறந்த பையனாக இருந்தான். உங்களுக்கு அது தெரியும். அவனுடைய தாயாருக்கு காரிபியேல் தோன்றி, அவன் என்ன செய்வான் என்று அவனிடத்தில் கூறினாள். மேலும் அவன் பெரியவனாயிருப்பான் என்றும் மேலும் பிள்ளைகளை அவர்களுடைய பிதாக்களுடைய விசுவாசத்திற்கு அழைப்பான், என்றும் மேலும் அதைப் போன்று அவன் என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்பதையும் சொன்னாள். மல்கியா 3-ன்படி "என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்" அவனுடைய தகப்பனாருடன்... அவன் தன் தகப்பனுடைய பள்ளிக்கு, அங்கே போவதற்குப் பதிலாக, அவன் வனாந்திரத் திற்குச் சென்று ஆயத்தமானான். அவனைப் பாருங்கள். மிகச் சரியாக எலியாவைப் போல, அவன் எலியாவைப் போல காடுகளில் வசித்தான். அவன் நடத்தை கெட்ட ஸ்திரீகளை வெறுத்தான். வெறுமனே எலியாவைப் போல், அவன் வயதான ஏரோதுக்குச் சொன்னான், "நீ அவளை, அவனுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவியை வைத்துக் கொண்டு இருப்பது சட்டபூர்வமானது அல்ல", என்றான். அதற்கு, அவனுடைய தலையை விலையாகக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவன் தொடர்ந்து அப்படியே சென்று கொண்டிருந்தான், நிச்சயமாக. அவன் ஒரு அடையாளமாக இருந்தான். அவன் என்ன சொல்லிக் கொண்டிருந்தான்-? மனந்திரும்புதலுக்கென்று ஜலத்தினாலே ஞானஸ்நானம் "நான் கொடுக்கிறேன். ஒருவர் வருகிறார்; உங்கள் நடுவே நிற்கிறார். நான் அவரை அறியாதிருந்தேன். நான் இன்னும் அந்த அடையாளத்தைக் காணவில்லை. ஆனால் அவர் உங்கள் நடுவில் இருக்கிறார்". அவன், அந்த மணிவேளை மிக நெருங்கி இருக்கிறது என்றும் அது சரியாக இப்பொழுது அவர் பூமியில் இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து இருந்தான். "நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்", ஆனால் அவர் தான் அந்த ஒருவர் அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர், பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக் கூடை அவர் கையிலிருக்கிறது. அவர் இந்த நாட்களில் ஒன்றில் வருவார்" ஆம், 84. ஒரு நாள் இயேசு நடந்து வந்து கொண்டிருந்தார். யோவான் அவரை நோக்கிப் பார்த்து, சொன்னான், "அங்கே, அது அவர் தான்; உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" இயேசு அவர் இந்த பூமியிலே வந்த போது அவர் என்ன செய்வார் என்று வார்த்தை சொன்னதோ அதை மிகச் சரியாகச் செய்தார். ஒரு அடையாளத்துக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேசத்தை விட்டு விலகியிருந்த அல்லது அகற்றப்பட்ட இஸ்ரவேலர்கள் இப்பொழுது திரும்பி வந்து கொண்டிருக்கும் போது; அவர்கள் எல்லோரும் ஒன்றாக மனந்திரும்பக் கூடும்; அப்படியான மக்களே அவர்கள், அது அவ்விதமான தேசம் தான்; தேவன் இஸ்ரவேலருடன் ஒரு தேசமாக இடைபடுகிறார், ஆனால் புறஜாதியாராகிய மணவாட்டியில் தனி நபராக இடைபடுகிறார்; இப்பொழுது, அவர்கள் தங்களின் சொந்த தேசத்திற்கு திரும்பி வந்து கொண்டிருப்பது ஒரு பெரிய அடையாளமே. நாம் அதற்குள்ளாக இப்பொழுது ஒரு சில நிமிடங்களில் போக இருக்கிறோம் என்று நம்புகிறேன். எனக்கு இன்னும் 5 அல்லது 10 நிமிடங்கள் விடப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும் நாம் ஜெபவரிசையை அமைக்கலாம், நாம் இங்கே அதைச் செய்யத் துவங்கும் போது நான் இன்றிரவு விரும்புவதைச் சொல்லலாம். என்று இருக்கிறேன். பாருங்கள் இது ஒரு மிகப் பெரிய அஸ்திபாரமாக இருக்கிறது, ஆனால் அது நிலைத்திருக்கும். 85. இயேசு வார்த்தையின் சாட்சியாக இருந்தார். அவர் மேசியாவாக அபிஷேகம் செய்யப்பட்டவராக இருந்தார். "கிறிஸ்து," என்றால்... மேசியா, அனுப்பப்பட்ட ஒருவர்; அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்; தேவனுடைய வார்த்தையினா லும், ஆவியினாலும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர். அவர் வார்த்தையாக இருந்தார். அவர், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக இருந்தார். ஆமென். மிகச் சரியாக இங்கே உபாகமத்தில் மோசே, அவர் என்ன செய்வார் என்று சொன்னாரோ அதை அவர் சாட்சி பகர்த்தார். "உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார்," என்று அவன் சொன்னான். "அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்", என்றான், சீமோன் பேதுரு இதை அறிந்திருந்தான். அவனுடைய சகோதரன் அந்திரேயா முழு இரவும் இயேசுவுடன் தங்கியிருந்தான் என்பதை அவன் கேள்விப்பட்ட போது... உங்களுக்குத் தெரியுமா, அவருடன் முழு இரவும் தங்கியிருப்பது, அதைச் செய்வது நல்லதாக இருக்கிறது. ஹு...ஹா. ஒரு சிலருக்கு ஐந்து நிமிடங்கள் அவருடன் தங்கியிருக்க முடியாமலிருக்கலாம். ஆனால் அந்திரேயா முழு இரவும் அவருடன் தங்கினான். அதன் பிறகு உண்மையிலே அவனுடைய சகோதரனிடம் சொல்லியிருக்கக் கூடும். "இப்பொழுது நாம் மறுபடியும் அங்கு சென்று அதை சோதித்துப் பார்க்கலாமே-! என்று. இல்லை. நாம் இன்று இரவு பார்ப்போமே. இல்லை அவன், "என்னுடன் வந்து நான் யாரை கண்டு கொண்டேன் என்று பார்", என்று சொன்னான். அவரைக் கண்டு பிடித்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவருடன் முழு இரவும் தங்கியிருந்தான். அவருடன் முழு இரவும் தங்கியிருந்த பின் யாக்கோபு அவனுடைய சகோதரனைச் சென்று சந்திக்க முடிந்தது. இன்றைக்கு தொல்லை என்ன என்றால் உங்களால் போதுமான நேரம் தங்கியிருக்க முடியவில்லை என்பதே. உங்களுடைய வயதான தாய்மார்களும் தகப்பன்களும் பெந்தெகொஸ்தேவில் இருந்த போது முழு இரவும் பகலும் ஜெபித்தார்கள். இன்றைக்கு நாம், "அம்மாவை அப்பாவை மற்றும் சகோதர சகோதரியை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென் என்று சொல்லி நாம் ஜெபத்தை விட்டு இறங்கிவிடுகிறோம். எனக்கு அவ்வளவாக தூக்கம் வருகிறது எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்று சொல்லுகிறோம். நான் வீட்டிற்குச் சென்று புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பார்க்க வேண்டும்". என்கிறோம். பாருங்கள். புதன் கிழமை இரவு ஜெபக் கூட்டத்துக்கு வருவதற்குப் பதிலாக அல்லது அதைப் போன்றதற்கு பதிலாக, "நாம் சுசியை நேசிக்கிறோம்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை சிறிது நேரம் கழித்து ஒளிபரப்புச் செய்யப் போகிறார்கள் என்றும்; ஒரு தாறுமாறாக்கப்பட்ட பிசாசுடைய ஏதோ ஒரு காரியத்தை உங்கள் ஆத்துமாவிற்கு அப்படிப்பட்டதை புகட்டுவித்துப் பிறகு ஆவியை ஊற்றும் படியாய் தேவனை அழைப்பீர்கள்... அவன் எதைப் பெற (hatch) முடியும்-? ஒரு பெரிய ஸ்தாபன கூட்டத்தையே. அது தான் எல்லாம். அந்த வகையான வித்துக்களையே விதைத்தான். "நல்லது ஓ, நான் தேவனை சாருவதற்குப் பதிலாக நான் இதைச் சேர்ந்தவன்..." என்கிறீர்கள். (அது சரி, ஆம் ஐயா) இப்பொழுது மற்ற காரியங்கள் அதினோடு போகும்படி விடுங்கள். அது சரியே. 86. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது இயேசு சாட்சி உடையவராய் இருந்தார் என்பதைக் கண்டோம். சீமோன் அதை அறிய நேர்ந்த போது, என் தகப்பனார் என்னிடம் கூறியதை நான் அறிவேன், அவர் வரும் போது அங்கே, அந்த நாளிலே அதிகமான குழப்பம் இருக்கும் என்பதை நான் அறிவேன் என்றான். என்னால் அந்த வயதான சீமோன் சொல்வதை வெறுமெனே கேட்க முடிகிறது... அவனுடைய தகப்பனார் அவனுடைய மகனுக்குச் சொன்னார், "மகனே பார். நான் மேசியாவைப் பார்ப்பேன் என்று நம்பினேன், ஆனால் இப்பொழுது நான் மிகவும் வயது சென்றவனாகி விட்டேன் என்று யூகிக்கிறேன், என்னால் அவரைப் பார்க்க முடியாது, ஆனால் இப்பொழுது கவனி, உனக்குத் தெரிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது அங்கே ஏராளமான போலிகள் எழும்பப் போகிறது. ஆனால் நீ அந்த மேசியாவைத் தெரிந்து கொள்வாய்; அவர் வரும்போது-! மகனே... நான் உனக்கு எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தேன். அங்கே அக்கரையிலே உன்னுடைய தராசுகள் எப்படி உத்தமமாக இருக்க வேண்டும் என்று உனக்குக் கற்றுக் கொடுத்தேன். உன்னுடைய வார்த்தையை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும் என்று உனக்கு கற்றுக் கொடுத்தேன். அது தான் உன்னை ஒரு நேர்மையுள்ள மனிதனாக செய்தது. அது தான் உன்னை ஒரு உத்தமமான மனிதனாகச் செய்தது என்றான். "மகனே உத்தமமாய் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த வகையான போதனையை உன்னால் எடுத்துக்கொள்ள முடியுமானால்; மேலும் உன்னுடைய தகப்பனாருடைய வார்த்தையை உத்தமமாய் எடுத்துக்கொண்டு; அதன் பிறகு நீ உத்தமமாய் இருந்து, தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்வாயாக. ஆமென். இந்த மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று தேவன் சொன்னார். ஒரு வேத சாஸ்திரியாக இருக்க மாட்டார். ஒரு தீர்க்கதரிசியை உங்கள் தேவனாகிய கர்த்தர் எழும்பப் பண்ணுவார். 87. சீமோன் இந்த காரியத்தை தன்னுடைய சிந்தையில் வைத்திருந்தான். ஒரு நாள் அந்திரேயா வந்து அவன் அவரிடத்தில் முழு இரவும் தங்கியிருந்ததைப் பற்றியும்; அவன் எப்படி உறுதியாய் நம்பினான் என்பதைப் பற்றியும் அவன் இடத்தில் சொன்னான். மேலும் சீமோன் யாரைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்தானோ அவரைப் பார்க்க இறங்கிச் சென்றான். கடற்கரையில் அந்த நாளிலே இந்த மரத்துண்டிலே (Chunk) உட்கார்ந்து அவரைக் கவனித்துக் கொண்டு இருந்தான்... ஆனால் அவர் அந்த வயதான சீமோனை, அவர் கண்ட உடனேயே, “உன்னுடைய பெயர் சீமோன் நீ யோனாவின் மகன்", என்று சொன்னார். அது சரியாக இருந்தது. அது சரியாக இருந்தது ஏன்-? அது ஒரு வேத வாக்கிய அடையாளமாக இருந்ததை அவன் அறிந்து கொண்டான். அது மேசியாவாக இருந்தது, பிலிப்பு நாத்தான்வேலைச் சென்று சந்தித்த போது... மேலும் நாத்தான்வேல் திரும்பி வந்து இப்பொழுது ஒரு நிமிடம் பொறு நான். அதைக் குறித்து கேள்விப்பட்டு இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக உண்மையோ அல்லது பொய்யோ என்று நான் வியப்படைகிறேன். என்றான். அவன், "எனக்குத் தெரியாது. நீ அங்கே போகும் வரைக்கும் காத்திரு. நீயே அதைக் கண்டு கொள்வாய்," என்றான். ஒரு சிறிது நேரம் தரித்து இருந்து கூட்டத்தைக் கவனியுங்கள். மேலும் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பாருங்கள். இங்கே பிலிப்புவும், அந்திரேயாவும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து நடந்து வந்தார்கள். இயேசு அங்கு நின்று கொண்டிருந்து அவர்களைப் பார்த்தார், "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். அவன் சொன்னான், "ரபி..." அந்த காரியம் சரியாக அவனை நிலைகுலையச் செய்தது. அவன், "ரபீ நீர் எப்படி என்னை அறிவீர்-?" என்றான். "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்பாக நீ அந்த மரத்திற்குக் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்", என்று அவர் சொன்னார். அது என்னவாக இருந்தது-? ஒரு வேத வாக்கிய அடையாளம். மேசியா, அது சரியே. 88. அந்த சமாரியப் பெண் அவள் அந்த கிணற்றினருகே இருந்தபோது அவர் "ஸ்திரீயே தாகத்துக்குத் தா", என்றார். அவள், "இது வழக்கத்திற்கு மாறானது. இங்கே பிரிவினையை நாம் உடையவர்களாய் இருக்கிறோம். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் நம்மிடத்தில் எந்த ஒரு பரிவர்த்தனையும் இல்லை. நான் ஒரு ஸ்திரீயாக இருக்கிறேன், நீர் ஒரு மனிதனாக இருக்கிறீர். நீர் எப்படி இப்படிப்பட்ட ஒரு காரியத்தை வந்து சொல்லலாம்"-? என்றாள். "ஆனால் நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருந்தாய் ஆனால் நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய்", என்று அவர் சொன்னார். அவள், "ஏன்-? எங்களுக்குத் தெரியும்-! இந்த மலையிலே நாங்கள் தொழுது கொண்டு வந்தோம். மேலும் நீங்கள் யூதனாய் (அதைப் போன்று) இருப்பதால், எருசலேமிலே என்கிறீர்கள்", என்றாள். உரையாடல் போய்க் கொண்டே இருந்தது. இயேசு அவளுடைய ஆவியைப் பிடித்தார். அவர், 'நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு இங்கே வா", என்றார். ஓ, என்னே-! "எனக்கு எந்த புருஷனும் இல்லை", என்று அவள் சொன்னாள். அவர், "நீ உண்மையாய்ச் சொன்னாய்; உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்-! இப்பொழுது உனக்கிருக்கிற ஆறாவது ஒருவனும் உனக்கு புருஷன் அல்ல", என்றார். அது சரியே. அவள் என்ன சொன்னாள்-? "ஐயா ஒரு நிமிடம் பொறுங்கள்," வெறுமனே ஒரு நிமிடம். "நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். அது தான் கர்த்தருடைய வார்த்தையாக இருக்கிறது. "இப்பொழுது நாம் மேசியா வருவார் என்று எதிர்பார்த்து ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிவோம். மேலும் இந்த விதமான காரியங்களை நமக்குக் காண்பிப்பார் என்று அறிவோம்". என்றாள் "நானே அவர்", என்று இயேசு சொன்னார். சகோதரனே, இனி மேலும் யாக்கோபுடைய கிணறு சுவையாக இருக்கவில்லை. சரியாக உடனடியாக அவள் பட்டணத்திற்குள் சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள், அவர் மேசியா தானே-?" என்றாள். ஒரு வேத வாக்கிய அடையாளம் அது. அவர் மேசியாவாக இருந்தார். மிகச்சரி. ஆம் ஐயா, ஆமாம். 89. அவர்கள் அதைப் புறக்கணித்தார்கள். மக்கள்... அவர்கள் அவரை அழைத்தார்கள்-? பெயல்செபூல், ஒரு குறி சொல்பவர், ஒரு பிசாசு, என்றார்கள். என்ன நடந்தது-? அவர்களுடைய சொத்த இரத்தத்தில் மிகவும் கடினப்பட்டு நடந்து சென்றார்கள். சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ் (Josephus) அவருடைய எழுத்துக்களில், மகத்தான ரோம படைத்தலைவனான தீத்து ராயனால் எருசலேம் முற்றிகை இடப்பட்டது என்பதை நமக்கு சொல்கிறார். அவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட வருடங்களில், அவர்கள் மரங்களின் பட்டையைத் தின்றார்கள் என்றும், ஒருவருக்கொருவர் பிள்ளைகளைக் கொன்று அதைத் தின்றார்கள் என்றும் விவரிக்கிறார். அது என்னவாக இருந்தது-? அவர்கள் அவர்களுடைய அடையாளத்தைக் காணத் தவறினர்கள். இயேசு என்ன சொன்னார்-? அவர், "நீங்கள் மாயமாலக்காரர்கள். இந்த எல்லா விதமான ஆசாரியர் உடைகளை மேலே போட்டுக் கொண்டு உங்களுக்கு பின்னாக டாக்டர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு (இந்த எல்லா மிகப் பெரிய போப் ஜான், மற்றும் எல்லா காரியங்களும் இந்த எல்லா பட்டங்களையும் மற்றவைகளையும்) தெருக்களில் நடந்து சென்று முதன்மையான இடங்களையும், (மிகச் சிறந்த இடங்களுக்குப் போவதற்கு) பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள், மற்றும் அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொள்கிறீர்கள்", அவர், "நீங்கள் அதிக ஆக்கினையைப் பெறுவீர்கள்", என்றார். நீங்கள் வானத்தை அன்னாந்து பார்க்கிறீர்கள், "தேவனுடைய வார்த்தையைச் செய்வதைக் காட்டிலும்; விஞ்ஞானத்தைக் குறித்து அதிகமாய் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்", என்றார். அது அவர்களை அடித்துத் தள்ளியது. 90. நீங்கள் வானத்தைப் பார்த்து; என்னுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதைப் பார்க்கிலும், வானிலை தீர்க்கதரிசிகளுக்கு அதிகமாக செவி கொடுக்கிறீர்கள்; ஏன்-? வானம் மந்தாரமும் மற்றும் செவ்வானமாகவும் மற்றும் அதைப் போன்றும் இருந்தால்; அது நாளைய கால நிலையில் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்கிறீர்கள். மேலும் சூரியன் தெளிவாக இருந்தால் அதினால் வெளி வாங்கும் என்கிறீர்கள். அவர், "வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே-! காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா-? நீங்கள் என்னை அறிந்தீர்கள் என்றால், என்னுடைய நாளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்", என்றார். அங்கே தான் அடையாளங்கள் இருக்கிறது. மேசியா ஓ, அவர்கள் எவ்வளவாய் பரிதாபத்துக்கு உரிய விதமாய் தவறவிட்டார்கள். (நாம் அப்படியே இங்கேயே ஒரு நீண்ட நேரமாய் தரித்திருக்க முடியும். ஆனால் நம்மால் இப்பொழுது முடியாது, நாம் துரிதமாய்ச் செல்ல வேண்டும்). 91. கவனியுங்கள், அதன் பிறகு அவருடைய வருகைக்கு முன்பாக என்ன சம்பவிக்கும் என்று இயேசுவின் மூலமாய் வாக்குத்தத்தம் வந்தது. இப்பொழுது அதை ஒரு நிமிடம் நாம் கவனிப்போம். இப்பொழுது ஒரு சில நிமிடங்களுக்கு கொஞ்சம் பார்ப்போம். நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா-? நீங்கள் அப்படி இருப்பீர்கள் என்றால், ஏன்...பாருங்கள் எல்லாம் சரி. இப்பொழுது வெறுமனே இதை ஒரு சில நிமிடங்களுக்கு கவனிப்போம். இப்பொழுது மிகக் கூர்ந்து கவனியுங்கள், அதைப் பின்பாக வைத்து விட்டு இப்பொழுது நாம் எல்லா அடையாளங்களையும் பார்க்கலாம். நாம் அதன் மேலாக மணிக்கணக்கில், வாரங்களாக, மாதங்களாக, தரித்திருக்க முடியும். ஆனாலும் அந்த ஒரு பொருளை விட்டு வெளியே வர முடியாது. அதன் பேரிலேயே சில நிமிடங்கள் தரித்திருக்கலாம். 92. இப்பொழுது, இயேசுவிடம் கேட்கப்பட்டது, "ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போவது எப்பொழுது-? இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்-? உலகத்தின் முடிவு வருவதற்கான அடையாளம் என்ன-? அது எப்பொழுது சம்பவிக்கும்-?' என்றனர். மேலும் அவர்களுக்கு அவர் சொல்லத் துவங்கினார். இந்த சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்திலும், இராஜ்ஜியத்திலும் எனக்கு ஒரு சாட்சியாக பிரசங்கிக்கப்படும். உங்களுக்கு என்னவென்று தெரியுமா-? இப்பொழுது அவர் ஒரு போதும் சொல்லவில்லை... அவர் சொன்னது, "இந்த சுவிசேஷம்" இப்பொழுது போய் வார்த்தையை போதியுங்கள் என்று சொல்லவில்லை. சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்றார். அங்கே அநேக வித்தியாசங்கள் இருக்கிறது. ''சுவிசேஷம் என்பது தேவனுடைய வல்லமையாகவும், மேலும் வார்த்தையைச் செய்து காண்பிப்பதாகவும் இருக்கிறது.'' பாருங்கள். வல்லமையும், வார்த்தையை செய்து காண்பிப்பதுமாக உள்ளது. உங்களுக்கு நினைவிருக்கும். அந்த நதியின் மேல் அந்த தூதன் இறங்கி வந்து போது (நீங்கள் அந்தப் படத்தை வைத்திருக்கிறீர்கள் மேலும் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியும்) அதைப் பற்றி இங்கே அது சொல்லப்பட்டது... 1933-ல் நான் என்னுடைய முதல் குழுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது அந்த செய்தி உலகம் முழுவதும் பரவினது. மேலும் ஒவ்வொரு தேசத்திலும் ஒரு எழுப்புதலை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். எல்லா இடத்திலும் அதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பாருங்கள். நிச்சயமாக. தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வெளியே இழுப்பது-! அது சரியே. "இந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும்". 93. அதன்பிறகு வெளிப்படுத்தின விஷேசம்-3:1-3-ல் கடைசி நாட்களில் மூன்று சபைக் காலங்கள் அங்கே இருக்கப் போகிறது என்று நாம் கண்டு கொள்கிறோம். அது உங்களுக்குத் தெரியுமா-? அது சரி. அதை நாம் பெற்றுக் கொண்டோம். நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் அந்த அடிப்படைத் தத்துவங்கள் மூலமாய் வந்தார்களா-? நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் (லூத்தர், வெல்லி, மேலும் பெந்தெகொஸ்தேபினர்) மூன்று செய்தியாளர்கள் கடைசி நாட்களிலே... கண்டு பிடிப்போம்... அதன் பிறகு கடைசி நாட்களிலே அவருடைய சொந்த வருகையை நாம் பார்க்கிறோம், நாம் அதை மறுபடியும் கண்டு பிடிக்கலாம். அதன் பிறகு இப்பொழுது அவருடைய வருகையை பார்க்கிறோம்... மழை; பரிசுததாவி; கடைசி நாட்களில் ஊற்றப்பட்டது. அது ஊற்றப்பட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? யார் மேலாக-? யாரோ ஒருவர் விதைத்த விதைகள்; அவருடைய பிற்கால மகசூலைக் கொண்டு வரும்படியாய் ஊற்றப்பட்டது. "கடைசி நாட்களிலே...", என்று யோவேல் சொன்னதை நீங்கள் அறிவீர்கள். 94. இப்பொழுது பாருங்கள். இங்கே இன்னொரு காரியம்; குறித்து நான் பேச விரும்புகிறேன். "நீங்கள் வெறுமனே வெஸ்லியுடன் தொடங்கினீர்கள்", என்று நீங்கள் சொல்லுவீர்கள். நீங்கள் எப்பொழுதாவது அதை நினைத்துப் பார்த்தது உண்டா-? நான் வெறுமனே ஏழு சபைக்காலங்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன். நான் ஏன் வெஸ்லியுடன் துவங்கினேன் என்று நீங்கள் எப்பொழுதாவது கவனித்தீர்களா-? ஏனென்றால் அங்கே தான் அது துவங்கினது - வெஸ்லியின்: சீர்திருத்தத்திற்குப் பிறகு, பரிசுத்த மார்டின் குறித்து என்ன-? மேலும் பரிசுத்த ஐரேனியஸ், அங்கே பின்பாக அவர்கள் எல்லோரும் அந்த ரோம கத்தோலிக்க சபையை அந்த நாளிலே எதிர்த்து நின்றார்கள்; அவர்கள் கோட்பாட்டை துவங்காமல் இருந்து வார்த்தையுடன் தரித்திருந்தனர்; அதை துவங்கினது எது-? அவர்களுக்கு என்ன நேர்ந்தது-? 95. அதைக் குறித்து யோவேல் உங்களுக்குச் சொல்லவில்லையா-? பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது. முசுக்கட்டை பூச்சிவிட்டதை வெட்டுக்கிளி தின்றது, பாருங்கள். மேலும் அந்த அதே பூச்சி, பச்சைப் புழுவிலிருந்து, முசுக்கட்டைபூச்சிக்கு, வெட்டுக் கிளிக்கு மேலும் அதைப் போன்று அதே பூச்சி தான் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது. மேலும் அது தான் கத்தோலிக்கமாக இருக்கிறது. அது என்ன செய்தது-? வார்த்தையைத் தின்று விட்டது. ஆனால், தான் திரும்ப அளிப்பேன் என்று அவர் சொன்னார், "நான் திரும்ப அளிப்பேன்" என்று கர்த்தர் சொன்னார். எப்படியாய் அது இருக்கிறது-? சரியாக துல்லியமாக அடிக்கட்டை வரைக்கும் சென்றது. அது சரி. வேதாகமம் போதித்த எல்லா காரியங்களையும் கத்தோலிக்க சபையானது தின்று போட்டது. சரி. அவர்களுடைய சொந்த சமய ரோம கொள்கைகளை (DOGMA) அதிலிருந்து அவர்கள் ஏற்படுத்தினார்கள் அவர்களுடைய இராபோஜனத்தையும் கூட, அவர்களுடைய தவறான பரிசுத்தாவி, தவறான ஞானஸ்நானம், எல்லா மற்ற காரியங்களும். நீங்கள் ஒரு போதும், ஒரு போதும். ஒரு போதும் அந்த அடிக்கட்டையிலிருந்து வரும் அந்த ஜீவன் திரும்பி வரும் வரை திரும்ப முடியாது. மேலும் அது தான் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. மனிதர்கள்... சுதந்திரமாக இருப்பதற்கு. அவர்கள் ஸ்தாபனங்களில் அவர்களைக் கட்டி வைத்து மேலும் எரித்தார்கள். அவர்களைக் கொலை செய்தார்கள். சிங்கங்களுக்கு இரையாக்கினார்கள். மேலும் அவர்கள் அதில் சேரவில்லை என்றால் அனைத்தையும் செய்தார்கள். அது மிகச் சரியாக இருக்கிறது. 96. ஆனால் அந்த அடிமரம் மீண்டுமாக வளரும் என்று அவர் சொன்னார். அது முன்புக்காக தள்ளிக் கொண்டு வரும். முதலில் என்ன காரியம் வந்தது-? ஒரு மரமாக இருந்தது. அடுத்து என்ன காரியம் வந்தது-? இலைகள் அடுத்து என்ன காரியம் வந்தது-? பூக்கள். அடுத்து என்ன காரியம் வந்தது-? கனிகள். லூத்தர்... வெஸ்லி... இலைகள், பெந்தெகொஸ்தே, மலர்கள். இப்பொழுது நாம் கனிகளை நோக்கி சரியாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். சபையானது குறுகிக் கொண்டே வருகிறது. ஆமென். கர்த்தர் உரைக்கிறதாவது, "நான் திரும்ப அளிப்பேன்", "நான் என்ன செய்வேன்-? நான் அவளை அந்த மூல நிலைக்கு திரும்பக் கொண்டு வருவேன் நான் அவளை மூல உபதேசத்திற்கு திரும்பக் கொண்டு வருவேன். நான், அவனை மூல வார்த்தைக்கு திரும்பக் கொண்டு வருவேன். நான் ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் துண்டுகளாக உடைப்பேன். நான் அவளை என்னுடைய வார்த்தைக்குத் திரும்பக் கொண்டு வருவேன். எப்படி-? (நான் வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது நிறுத்து பையனே) நான் அவளை திரும்பக் கொண்டு வருவேன். 97. முதல் ஸ்தாபனம் என்னவாக இருந்தது-? கத்தோலிக்கச் சபை. மிகவும் சரியே. மிகவும் சரி. அல்லது வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 17-ல் அழைக்கப்படுவது போல "ஒரு மகாவேசி". அது தான் ஒரு... என்ன ஒரு... ஓ, அந்த வகையான ஒரு ஸ்திரீயாக இருக்கிறாள்-? அது ஒரு ஸ்திரீ தன்னுடைய கணவனுக்கு உண்மையற்றவளாக இருக்கிறான். பாருங்கள், அந்த ஒரு சபை தான் வார்த்தைக்கு உண்மையற்றதாக இருக்கிறது. மேலும் அவள் வேசிகளுக்கு தாயாக இருக்கிறாள். ஒரு வேசி என்னவாக இருக்கிறாள்-? அதே காரியம் தான். நாம் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம். இப்பொழுது.. இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேலாக பாருங்கள் எல்லாம் சரி. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அவள் வேசிகளுக்கு தாயாக இருக்கிறாள். அதே காரியமாகத் தான் அவள் இருந்தாள் ஸ்தாபித்துக் கொண்டு, வேதாகமத்தில் இருக்கிறதான உபதேசங் களை அப்பாலே எடுத்து விட்டு, அவளுடைய சொந்த சுயமானதை கற்பித்துக் கொண்டு உபதேசங்களை... தேவனுடைய கட்டளைகளை... போதிப்பதற்குப் பதிலாக பாரம்பரியங்களினாலே தேவனுடைய கட்டளைகளை அவமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இயேசுவும் அதே காரியத்தைத் தான் கண்டுபிடித்தார். பானையானது, கொதிகலனை (Kettle) கறுப்பு என்று அழைக்க முடியாது. அதுசரி. அவை எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆம் ஐயா. 98. நீங்கள் வார்த்தையிலிருந்து தூர விலகிச் செல்லும் போது, நீங்கள் தேவனை விட்டு தூரப் போகிறீர்கள். நீங்கள் கொள்கையிலிருந்து விலகிப் போகிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியானவரை விட்டு தூரப் போகிறீர்கள். நீங்கள் எல்லாவற்றில் இருந்தும் விலகிச் செல்கிறீர்கள். பிசாசானவன் உங்களுக்கு ஏதாவது தவறான ஒன்றை கொடுப்பான். ஆனால் அது ஒரு போதும் சாட்சி பகராது. அது சத்தியமாக இருக்கும் வரை... சரியாக அதே மேசியாவிடத்திற்கு திரும்பி வாருங்கள். அது தான் தேவனுடைய ஆவியாக இருக்கிறது. நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள், திராட்சை செடியில் இருக்கும் அதே ஜீவனானது கொடியிலும் இருக்கும். மேலும் கொடிகள் திராட்சை செடியின் கனிகளை உடையதாயிருக்கும். பரிசுத்த யோவான்-15. எல்லாம் சரியே. 99. அவர்கள் என்ன செய்தார்கள். இப்பொழுது அவர்கள் எல்லோரும், உங்களுக்குத் தெரியுமா-? இயேசு சொன்னார், கடைசி நாட்களிலே அவர் கட்டுவார்... முதலில் அவர் எல்லாவற்றையும் கட்டுவார். எதை-? களைகளை, அது சரியா-? பையனே, அவர்கள் நிச்சயமாக இப்பொழுது கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உலக சபையின் ஆலோசனை சங்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது, ஒவ்வொருவரையும்; பெந்தெகொஸ்தேயினர் மேலும் எல்லோரையும். அவர்கள் எல்லோரும் சுட்டெரிக்கப்படுவதற்காக கட்டப்படு கிறார்கள். அது மிகச்சரியாக இருக்கிறது. ஹீ ஹீ... கோதுமையிலிருந்து அவர்கள் பிரித்தெடுக்கப்படுகிறார்கள். அதற்காக கர்த்தருக்கு வஸ்தோத்திரம். அது சரி. எல்லோரும் வெளியே பிரித்தெடுக்கப்படுகிறார்கள் - அவிசுவாசிகள்; அவர்களுடைய வழிகளில் நடவாதீர்கள். அவர்கள் உடையதை கற்றுக் கொள்ளுதலுக்குப் போகாதீர்கள், வார்த்தைக்கு வாருங்கள். அது சரி. தேவனுடைய அடையாளங்களுக்கு கலங்க வேண்டாம். உண்மையான பரலோக அடையாளங்களுக்கு; அது... பரலோகத்தின் அடையாளங்கள். சபையினுடைய அடையாளங்களுக்கு அல்ல. பரலோகத்தின் அடையாளங்கள், தேவனால் அனுப்பப்பட்ட அடையாளங்கள். அதனுடன் கலங்க வேண்டாம். அதனுடன் தரித்து இருங்கள். பாருங்கள். எல்லாம் சரியே. 100. சபைகளின் ஆலோசனை சங்கம் அவர்களை ஒன்று சேர்க்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள்-? வெளிப்படுத்தல்-13-யை நிறைவேற்றுகிறார்கள். "அவர்கள் அந்த மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள்,'' சொரூபம் என்றால் என்ன-? நமக்குத் தெரியும் யார் அந்த சொரூபம், அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்பம் ஸ்திரீக்கு முன்பாக நின்றது. உலகத்தை இருப்பு கோலால் அரசாளும் அந்த ஆண் பிள்ளை அது கிறிஸ்துவானவர். மேலும் அவர் வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தேவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்தார். வலுசர்பமானது அந்த ஸ்திரீக்கு முன்பாக நின்றது. அது தான் அந்த தொடக்கத்திலிருந்து இருந்த அதே பழைய மிருகம் - ரோம். அவள் என்ன செய்தாள், மக்களை ஒன்று சேர்த்து ஸ்தாபித்தாள். மேலும் அவர்கள், ஒரு சொருபத்தை உண்டாக்கினார்கள். போப் ஜான், எல்லா சபைகளும் வந்து ஒன்று சேர்ந்து, கம்யூனிசத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் தேவன்... வேதாகமத்தை அறிந்திருக்கிற யாராகிலும், அது அவளை அதனுடன் கொல்வதற்காக் தேவன் கம்யூனிசத்தை ஸ்தாபித்தார் என்று அறிந்திருக்கிறீர்கள், எரிப்பதற்கு... வேசியை வெறுத்து, மேலும் அவளுடைய பிள்ளைகளை ஒரு அக்கினி படுக்கையில் தள்ளி எரிக்க. அவர், அந்த ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை உபயோகித்தது போல அவர் அதை உபயோகப்படுத்துகிறார். 101. மேலும் பிராடஸ்டன்ட் சபைகள் அவர்களாகவே ஒன்று சேர்ந்து கொள்வார்கள், மேலும் ஒரு சபைகளுடைய ஆலோசனை சங்கத்தை ஏற்படுத்து வார்கள். ஏனெனில் அவர்கள் வார்த்தையை அறியாததினால். பெந்தெகொஸ் தேவினரும் சரியாக அவர்களுடன் இருப்பார்கள். அது சரியாக இருக்கிறது. வார்த்தை அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறது. தேவன் இந்தக் காரியத்தை வெடிக்கச் செய்யும்படி யாரோ ஒருவரை அனுப்புவார். மக்களை எச்சரிக்கிறார், நாம் சரியாக அந்த மணி வேளையில் இருக்கிறோம். சரியாக இங்கே இப்பொழுது இருக்கிறோம். அங்கே தான் அந்த நாள் இருக்கிறது. இங்கே பாருங்கள். மேலும் அடையாளங்களைப் பாருங்கள். என்னே. அவைகள் எல்லாம் நம் மேலாக இருக்கிறது. சுற்றிலும் எல்லா இடத்திலும் காரியம் என்னவாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர் களா-? ஏன் சபை எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லவில்லை-? இவ்விதமாக இருக்கும் வரை சபை செல்லாது. அது அப்படி இருக்காது. அது சரி. அந்த விதமான ஒன்றைக் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஞாபகம் கொள்ளுங்கள். ஆதாமுடைய மணவாட்டி தவறான வித்துடன் கண்டு பிடிக்கப் பட்டாள். அது மிகச் சரியாக இருக்கிறது. யேகோவாவுடைய மணவாட்டியும் அதே வழியில் கண்டு பிடிக்கப்பட்டாள். சரி. அவர் அவளை விவாகரத்து செய்து அவளைத் தள்ளிப் போட்டார். அது சரியா-? அது தேவன். கிறிஸ்துவினுடைய மணவாட்டியும் அதே காரியமாகத் தான் இருக்கிறாள். அவன் உலக ஸ்தாபனத்துடைய வித்துடன் அவள் கண்டு பிடிக்கப்பட்டாள். மேலும் சுவிசேஷத்துடன் அல்ல, தேவபக்தியின் வேஷத்தை தரித்துக் கொண்டு பரிசுத்தாவி மற்றும் வார்த்தையின் வல்லமையை மறுதலிக்கி றாள். அங்கே தான் கடைசி நாளுடைய அடையாளம் இருக்கிறது. தேவன் அவளை விவாகரத்துச் செய்து மேலும் அவருடைய மணவாட்டியை எடுத்து எந்தவொரு விஷயத்திலும் உறுதியாக இங்கே இருக்கும்படி செய்கிறார். "நோவாவின் நாட்களில் நடந்தது போல", "மனுஷகுமாரன் வருகையிலும் அப்படியே நடக்கும்”, என்று அவர் சொன்னார். 102.கவனியுங்கள், மிருகத்திற்கு ஒரு சொரூபம் அமைக்கப்பட்டது.. நாம் இதை எல்லாவற்றையும் பார்த்தோம். மெய்யாகவே ஒரு கத்தோலிக்க அதிபர்... அது கென்னடி இல்லை எனக்கு தெரிந்த மட்டில் அவர் என்னைப் போல ஒரு மனிதன் ஆவர். அல்லது மற்றவரைப் போல ஒருவர். அது அப்படி இல்லை. அது ''ஆகாப்,''பாக இல்லை. ஆகாப் ஒரு அருமையான நல்ல மனிதன். அது அவனுக்குப் பின்பாக இருந்த யேசபேல் அது தான் அவனுக்கு பின்பாக இருந்தது. அந்த காரியம் தான் பிரச்சனையை உருவாக்கினது. மேலும் அது கென்னடி கிடையாது, அது அந்த யேசபேல் சபை அவனுக்கு பின்னாடி இருந்தது, அது தான் அதைச் செய்தது. நிச்சயமாக, அது சரியாக இருக்கிறது. ஏன், காரியம் சரியாக உங்களுக்கு முன்பாக இருக்கிறதே. உங்களால் அதைப் பார்க்க முடியவில்லையா... ஒவ்வொரு காரியத்தையும் உங்களால் பார்க்க முடிகிறதா...-? அத்தி மரம் துளிர்விடுகிறதைப் பார்க்கிறீர்களா-? "ஒரு உவமையை கற்றுக் கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னார். எப்பொழுது நீங்கள் அத்தி மரத்தையும் மற்ற எல்லா மரத்தையும் பார்க்கும் பொழுது", இப்பொழுது பாருங்கள், யூதர்கள் ஒரு எழுப்புதலை பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் ஏற்கனவே ஒரு தேசமாக மாறிவிட்டார்கள். அதுசரியா-? 2800 வருடங்களில் முதல் முறையாக சொந்தப் பணம், சொந்தக் கொடி, எல்லாமும் பெற்றிருக்கிறார்கள். பாருங்கள். அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்கள். அத்தி மரம் அது தன்னுடைய துளிரை விட்டது. 103. மேலும் மற்ற மரங்கள், பாப்டிஸ்டுகள், *ஒரு பத்து லட்சம் அதிகமாக 44-ல்" ஒரு பில்லிகிரஹாம் வெறுமனே பக்கம் பக்கமாக வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தார். நீங்கள் எல்லோரும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். வந்து சேர்ந்து கொள்ளுங்கள், வந்து சேர்த்து கொள்ளுங்கள்: பெந்தெகொஸ்தேயினர் வேறொரு காரியத்துடன்; ஒருத்துவக்காரர்கள், இருத்துவக்காரர்கள், மூன்றுத்துவக்காரர்கள். அசெம்பிளிஸ், ஒவ்வொருவரும்; வந்து சேர்ந்து கொள்ளுங்கள், வந்து சேர்ந்து கொள்ளுங்கள், வந்து சேர்ந்து கொள்ளுங்கள், என்றனர். ஓ, தேவனே, தேவன் வாக்குத்தத்தம் செய்த அந்த காரியங்கள் எங்கே-? அது எங்கே-? கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கும் என்று தேவன் சொன்ன வேதாகம வார்த்தைகள் அவைகள் எங்கே இருக்கிறது-? அவைகள் எங்கே இருக்கிறது-? ஆனால் நாம் ஒரு கூட்ட குளிர்ந்து போன சம்பிரதாயமான ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கிறோமே தவிர; எதையும் பெற்றுக் கொள்ள வில்லை. அவர்களில் ஒவ்வொருவரிடத்தும் ஆயிரக்கணக்கானவர்களை எழுப்புதல், கொண்டு வருகிறதே-! ஆனால் பரிசுத்தத்திலே நின்று கொண்டு இருக்கிறதான அந்த கிறிஸ்துவின் மணவாட்டி எங்கே இருக்கிறாள்-? நம் உடைய எல்லா எஸ்திரீகளும் தலைமுடி குட்டையாக வெட்டி இருக்கிறார்கள். மேலும் எல்லாவிதமான ஆடைகளையும் அணிகிறார்கள். மேலும் பிரசங்கிமார் கள் அதைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லுகிறதில்லை. மேலும் சம்பிரதாயமாகவும் பொறுப்பில்லாமலும் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் சுவிசேஷம் ஒரு சாப்பாடு சீட்டாக மாறி விட்டது. அது மீதம் உள்ள இந்த சமுதாய சுவிசேஷ பிரசங்கிமார்களுடன் இருப்பது போல இருக்கிறது. 104. நமக்கு என்ன தேவையென்றால் ஒரு தேவ மனிதன் தேவனுடைய வார்த்தையில் நின்று எதையும் பொருட்படுத்தாமல் பிரசங்கிக்க வேண்டும். மேலும் தேவனுடைய வேதாகமத்தில் உள்ள அற்புதங்களுடனும், அடையாளங் களுடனும், அவர் அங்கே நிற்க வேண்டும். அது மிகச் சரியாக இருக்கிறது. ஆமென். மிகச் சரியே. ஒரு முதுகெலும்பையுடையவராக இருப்பதற்கு பதிலாக பறவையின் மார்பெலும்பு கொண்டவராய், கறுப்பை கறுப்பு என்றும் வெள்ளையை வெள்ளை என்றும் அழைப்பதற்கு பயந்து கொண்டு இருக்கிறார் கள். அது ஒரு வெட்கமான காரியமாக இருக்கிறது. நவீனமாக, சுதந்திரமாக இருப்பது; ஓ என்னே, அதன் பிறகு... என்னே நான் வாயை மூடிக் கொள்வது நல்லது. கவனியுங்கள், நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். சகோதரனே அடையாளங்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிறது. கவலை கொள்ள வேண்டாம் சிறு மணவாட்டியே. தேவன் வந்து கொண்டிருக்கிறார். கவலை கொள்ள வேண்டாம். எல்லாம் சரியான நேரத்தில் இருக்கிறது. இது இந்த விதமாக நடந்தே ஆக வேண்டும். வார்த்தை அப்படியாய் சொல்கிறது. செவி கொடுங்கள். கவனியுங்கள். 105. இப்பொழுது இயேசு இந்த பொல்லாத விபச்சார சந்ததியாருக்கு வாக்குத் தத்தம் செய்தார். மத்தேயு-12:24... அது இந்த பொல்லாத விபச்சார சந்ததியார் ஒரு அடையாளத்தை பெற்றுக் கொள்வார்கள் என்று இயேசு வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் அவரிடத்தில் வந்து. "போதகரே-! நாங்கள் உம்மிடத்தில் ஒரு அடையாளத்தை எதிர்பார்க்கிறோம்," என்று கேட்டார்கள். (சரியாக அவர் வியாதி யஸ்தர்களை சுகப்படுத்தி, மேலும் அவர் செய்ய வேண்டிய காரியங்களை அவர் செய்த போது) "உம்மிடத்திலிருந்து ஒரு அடையாளத்தை காண விரும்புகிறோம் என்றார்கள். அவர் இந்த பொல்லாத விபச்சார சந்ததியார் அடையாளத்தை தேடுகிறார்கள். அங்கே வேறே அடையாளம் இந்த பொல்லாத விபச்சார சந்ததியாருக்கு கொடுக்கப்படுவதில்லை", என்றார். எந்த காலத்திலும் இருந்ததை காட்டிலும் மிகப் பெரிய அந்த ஒழுக்கக் கேடான அசைவு இருக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்-? அவிசுவாசமே துன்மார்க்கமாக இருக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்-? நாம் எப்பொழுதும் பெற்றிருந்ததைவிட அதிகமான அவிசுவாசம், மற்றும் விபச்சாரம், ஓரினப் புணர்ச்சிகாரர்கள், மற்ற எல்லா காரியங்களும்-? அது சரியாக இருக்கிறதா-? தாறுமாறானவைகள். நான் அதைச் சொல்லியே ஆகவேண்டும். நம்முடைய பெந்தெகொஸ்தே பெண்கள் சிறிய, பழைய, பார்ப்பதற்கு அசிங்கமான உடைகளில் அவர்களாகவே தோல் தெரிய அணிந்து கொண்டு தெருக்களில் ஒழுக்கக் கேடாக நடந்து செல்கிறார்கள்... அந்த மனிதர்கள் உங்களை பார்த்ததற்காக-? நீங்கள் விபச்சாரம் செய்ததற்காக பதில் சொல்ல வேண்டியவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா-? மேலும் உங்கள் பிள்ளைகளு க்கும் அந்த விதமாக அணிவிக்கிறீர்கள்-? காரியம் என்னவாக இருக்கிறது. 106. ஏன் நீண்ட காலத்திற்கு முன்பாக அல்ல, ஒருவர் என்னிடம், "மக்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கிறார்களே,''. என்றார். "நான் தீர்க்கதரிசி இல்லை", என்று நான் சொன்னேன். "நல்லது, மக்கள் அந்தவிதமாக உம்மை அழைக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு நீர் மகத்தான காரியங்களை போதிக்கக் கூடாது-? ஸ்திரீகள் தலைமுடியை குட்டையாக வைத்துக் கொள்வது, மேலும் அவர்களுடைய வழிகளில் உடைகளை அணிந்து கொள்வது மேலும் ஒப்பனை செய்து கொள்வது (make up) மேலும் பொருட்களை அவர்கள் உபயோகிக்கும் வழியை, மேலும் அதைப் போன்ற காரியங்களைக் குறித்து பேசுவதைக் காட்டிலும் எப்படி தேவனுடைய வரங்களைப் பெற்றுக் கொள்வது என்பதை கற்றுக் கொடுக்கக் கூடாது-? என்றார். நான், 'அவர்கள் மொழியின் முதலில் உள்ள எழுத்தை ABC யைக் கூட கற்றுக் கொள்ளத் தெரியவில்லை என்றால், எப்படி நான் அவர்களுக்கு குறிக் கணக்கியலை (Algebra) சொல்லிக் கொடுப்பேன்." அவர்கள் மழலையர் பள்ளிக் கூடத்திலிருந்து வெளியே வரமாட்டார்கள். தேவனுடைய வார்த்தையுடன் இணங்குவதற்கான பொதுவான கண்ணியம் வேண்டும். அது மிகச் சரியாக இருக்கிறது. நீங்கள் அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள்-? உங்களால் அதைச் செய்ய முடியாது என்றேன். 107. ஏன்-? வெறுமனே யாரை தேவன் அழைத்தாரோ அவர்கள் மாத்திரம் தான் அதைக் கேட்பார்கள். "என்னுடைய ஆடுகள் என்னுடைய சத்தத்ததைக் கேட்கும்" அது சரி. அவர்கள் தேவனுடைய சத்தத்தை அறிவார்கள். அது வார்த்தையிலிருந்து பேசுகிறது. அந்த வார்த்தை தான் அதைச் செய்கிறது. இப்பொழுது அந்த சந்ததியார் ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள் (அது தான் இது) என்று அவர் சொன்னார். என்ன விதமான ஒரு அடையாளம்-? "யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்", என்பதே. அது சரியா-? என்ன விதமான ஒரு அடையாளத்தை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்-? ஒரு உயிர்தெழுதலின் அடையாளத்தையே. இயேசு மரிக்கவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராயிருக்கிறார். அதுசரியா-? ஒரு பொல்லாத விபச்சார சந்ததியார். உயிர்தெழுதலின் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆமென். அதை அவர்கள் பெலவீனப்படுத்த முயற்சித்தார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள். அவருக்காக அதை அவர்கள் செய்தார்கள். மத்தேயு... நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால் மத்தேயு 13:24. அவர்கள் மெய்யாக அதன் மேலாக கலங்கினார்கள். 108. "இந்த மனிதன்"... நம்முடைய ஸ்தாபனங்களுக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். நமது பரிசேயர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். (சதுசேயர்கள், ஏரோதியர்கள், ஆயாக்காரர்களுக்கு மேலும் அதைப் போன்ற) நாம் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும். அது என்னவாக இருக்கிறது-? ஏன்-? அவர் ஒரு குறி சொல்பவன், அதன் காரணமாகத்தான் அவர்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான், என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நினைவுகளை அவர் நிதானித்து அறிந்தார். "அவர் ஒரு குறி சொல்பவர்", என்றனர். இந்த கடைசி நாட்களில் அதே காரியம் நடக்கும் போது அங்கே ஒரு போதும் மன்னிப்பு இருக்காது என்றார். அவரை பெயல்செபூல் என்று அழைத்தார்கள். பிசாசுகளின் தலைவன் என்றார்கள். அது சரியே. அவர்கள் அவருடன் அதைரியப்பட்டார்கள். அது சரியாக இருக்கிறதா-? ஆனால் அவர் சபைக்கு கூறினார் உண்மையான இங்கே இருக்கிற சபைக்கு. "பரலோக அடையாளமா கிய அவைகளுடன் அதைரியப்பட வேண்டாம். பொல்லாப்பான காரியத்திற்காக அஞ்ஞானிகள், அவிசுவாசிகள் அவைகளுடன் அதைரியப்படுகிறார்கள்" பாருங்கள், மேலும் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். 109. இப்பொழுது முடிப்பதற்கு முன்பாக இதைச் சொல்கிறேன். வெறுமனே ஒரு நிமிடம், "மேலும் அதை அது அந்த விதமாக இல்லை... அதை அது அந்த வழியிலே தேவன் அதை அமைக்கவில்லை என்று”, அவர்கள் சொல்கிறார்கள். தேவன் ஒரு மிகச் சிறந்த பெரிதானவைகளை விரும்புகிறார். மேலும் ஒரு மிகச்சிறந்த அதை விரும்புகிறார். மேலும் நாங்கள் அறுபது லட்சம் டாலர்கள் செலவு செய்து நாங்கள் கட்டப் போகிறோம்... மேலும் நாங்கள் இதை வைக்கப் போகிறோம், மேலும் இதை, மேலும் இதை, மேலும் அதை என்கிறார்கள். மேலும் தேவனுடைய குமாரனுடைய வருகை சரியாக இப்போதே உள்ளது என்றும் பிரசங்கிக்கிறார்கள். அது என்னவாக இருக்கிறது-? அது எல்லாம் ஸ்தாபனத்தின் தீவனமாக (வைக்கோல்) மாறி இருக்கிறது. சபைகளின் கூட்டமைப்பின் ஒரு பெரிய கொத்தாக கட்டப்பட்டு, கடைசி எரிப்பதற்காக இருக்கிறது. அதைத் தான் இயேசுவானவர் சொல்லி இருந்தார். வைக்கோல், தெரிஞ்சல்கள் மற்றும் எல்லா விதமான காரியங்களால் அவைகள் கட்டப்பட்டு (அது சரி) சண்டைகள், பிடிவாதங்கள், உடையவர்களாய் எழுப்புதலை நாட்டிலிருந்து தள்ளி விடுகிறார்கள். வார்த்தையுடன் சவால் விட்ட அந்த மனிதனிடம் நான் சவாலிடுகிறேன். யாராக இருந்தாலும் அதை வாதாடி மேலும் என்ன நடக்கும் என்று பாருங்கள் என்ன நடக்கும் என்று கண்டு பிடியுங்கள். உங்களால் அதற்கு நிற்க முடியவில்லை என்றால் அதன் பிறகு உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள். அது சரியே. ஒன்று வந்து அதை சரி செய்து கொள்ளுங்கள், அல்லது சொல்லுங்கள்... ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். ஆம், ஐயா. 110. மத்தேயு 24-ல் நோவா அந்த நாட்கள் நிறைவேறி விட்டது என்று நாம் மேலும் பரி.லூக்காவில் 17:28 முதல் 30. இயேசு சொன்னதைக் கூட நினைவில் கொள்ளுங்கள். "சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் உடைய வருகையிலும் நடக்கும்", என்றார். அது சரியா-? இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், எரிவதற்கு முன்பாக இருந்த சோதோம். மேலும் அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டார்கள்-? அவர்கள் ஒரு அடையாளத்தைப் பெற்றிருந்தார்களா-? நிச்சயமாக. இப்பொழுது அங்கே மூன்று வகையான மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அது அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள், விசுவாசிகளாய் இருக்கிறார்கள். மூன்று அடையாளங்கள். அங்கே மூன்று வகுப்பினர். எப்பொழுதும் இருப்பார்கள். சரியாக அங்கே அவர்கள் இருந்தார்கள். இப்பொழுது கவனியுங்கள் இயேசு சொன்னார். "சோதோமின் நாட்களில் நடந்தது போல..." அதே விதமாக, அதே காரியம், பாருங்கள். அவர் முன்பாகச் சென்று நோவாவின் நாட்களில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைச் சொன்னார். எரிப்பதற்கு முன்பாக சோதோமின் நாட்களில் இருந்தது போல புசித்தார்கள், குடித்தார்கள், பெண் கொண்டும், பெண் கொடுத்தும், என்று சொன்னார். இப்பொழுது கவனியுங்கள் நியாயத்தீர்ப்பிற்கு முன்பாக என்ன நடந்தது. இப்பொழுது வெறுமனே எரிந்து போகிற நாட்களுக்கு முன்பாக ஒரு அடையாளத்தை அந்த சந்ததிக்கு அவர் அனுப்பப் போகிறார். அங்கே தண்ணீர் இருக்காது, ஆனால் என்ன-? இந்த நாளிலே-? நெருப்பு; தேவனுடைய நியாயத் தீர்ப்புகள் நெருப்பாக இருக்கப் போகிறது. மேலும் சோதோம் அதைத் தானே பெற்றுக் கொண்டது-? 111. இப்பொழுது வெறுமனே எரிப்பதற்கு முன்பாக; ஆபிரகாம் தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு பிரதிநிதித்துவமாக இருந்தான். ஏனென்றால் அவன் தெரிந்து கொள்ளப்பட்டவனாக இருந்தான். மேலும் ஆபிரகாமினுடைய வித்தும் அவனுடன் தெரிந்துக் கொள்ளப்பட்டிருந்தது. இப்பொழுது வாக்குத்தத்தமானது ஆபிரகாமுக்கும் அவனுடைய வித்திற்கும் செய்யப்பட்டது. அவனுடைய ஆவிக் குரிய வித்திற்கு. அவனுக்குள்ளாக இருந்த வித்து, தேவனுடைய வார்த்தையை பெற்றுக் கொண்டது. என்ன காரியங்கள் அதற்கு முரண்பாடாகச் சென்றாலும் அதைக் குறித்து அக்கரை கொள்ளாமல், அது இன்னுமாய் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அவன் சரியாக அதனுடன் தரித்திருந்தான். அது தான் ஆபிரகாமுடைய வித்தாக இருக்கிறது. அந்த ஒருவர் தேவனுடைய வார்த்தையுடன் தரித்திருப்பவர். லோத்தைப் போல அவர்கள் ஓடிவிட மாட்டார்கள் பாருங்கள். அங்கே சோதோமியர்கள் இருந்தார்கள். அவர்கள் அவிசுவாசிகள் அங்கே லோத்துவின் கூட்டத்தார். இருந்தார்கள், அவர்கள் எல்லோரும் பாவனை விசுவாசிகள். மேலும் அங்கே ஆபிரகாமும் இருந்தான். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட, விசுவாசியாக இருந்தான். 112. ஒரு நாள் மூன்று தூதர்கள் ஆபிரகாமுடைய கூடாரத்திற்கு வந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் ஒரு நல்ல செய்தியை அங்கு சென்று சோதோமியர்களுக்கு பிரசங்கித்தார்கள். மேலும் ஒரு கூட்ட ஜனத்தை வெளியே அழைத்தனர். ஆனால் அவர்கள் ஆபிரகாமை வெளியே வரும்படி அழைக்கவில்லை ஏனென்றால் அவன் ஏற்கனவே வெளியே இருந்தான். அவன் முதலிலேயே அந்த இடத்திற்கு போகவில்லை. அவன் 25 ஆண்டுகளுக்கு முன்பே அதை விட்டு விட்டான். ஆம் ஐயா. அவன் வெளியே அழைக்கப் பட்டவன், தெரிந்து கொள்ளப்பட்டு, வெளியே அழைக்கப்பட்டு வனாந்திரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்தான். அதன் பிறகு அவர்களில் இருவர் அங்கே சென்று, அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து மேலும் கடைசியாக இருவர் அல்லது மூவரை வெளியேற்றினர். ஒரு செய்தி சோதோமிற்கு சென்றது. அங்கே அந்த ஸ்தாபனங்களில் சில சபைகள் இருந்தது. அவர்களில் அனேகர் இரட்சிக்கப்பட்டார்கள். ஆனால் அங்கே ஒரு செய்தியானது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும் கூட கொடுக்கப்பட்டது, வார்த்தை, அடையாளம், பாருங்கள். இந்த ஒருவர் சொன்னார்... ஆபிரகாமிடம் பேசிக் கொண்டிருந்தவர் சொன்னார், இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாக அவன் ஆபிராமாக இருந்தான். மேலும் சாராள் சா-ரா-வாக இருந்தாள். சாராள் இல்லை. அவன் ஆ-பி-ரா-ம் ஆக இருந்தான். ஆ-பி-ர-கா-ம் என்று இல்லை, பாருங்கள். வெறுமனே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாக, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மேலும் இந்த மனிதன் நடந்து சென்று அவர் சொன்னார், "ஆபிரகாமே எங்கே உன் மனைவி சாராள் (சா-ரா-ள், சா-ரா என்பதற்கு மாறாக) எங்கே உன் மனைவி சாராள்"-?, என்றார். "ஓ" ஆபிரகாம், "ஐயா உங்களுக்குப் பின்னாக அவள் கூடாரத்தில் இருக்கிறாள்", என்றான். இப்பொழுது வேதாகமம் சொல்கிறது அவருக்கு பின்பக்கம். 113. அவர் சொன்னார், 'ஆபிரகாமே, இதை நான் இனி உன்னிடத்திலிருந்து மறைத்து வைத்திருக்கப் போவதில்லை. நான் ஒரு வாக்குத்தத்தத்தை உனக்கு செய்தேன் (பாருங்கள் அவர் யாராக இருந்தார்-? அவர் தான் எல்லா நேரத்திலும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர், அவனோடு கூடவே இருந்த அந்த ஒருவர் தான் பாருங்கள்) நான் உனக்குச் செய்த ஒரு வாக்குத்தத்தத்தை நிறைவேற்றப் போகிறேன். ஒரு உற்பவ கால கட்டத்தில் நான் உன்னிடத்திற்கு வருவேன் சாராள் ஒரு இளமையான பெண்மணி போல மாறி இருக்கப் போகிறாள். மேலும் அதைப் போன்று, மேலும் நீ இந்த குமாரனை உடையவனாக இருக்கப் போகிறாய்", என்றார். பாருங்கள். இப்பொழுது அது ஒரு அடையாளமாக இருந்தது. அது வெறுமனே வாக்கு அளிக்கப்பட்ட குமாரன் வந்து கொண்டிருந்தான்... பாருங்கள். ஆபிரகாம் ஒரு வாக்கு அளிக்கப்பட்ட குமாரனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அது சரியா-? சபையும் ஒரு வாக்கு அளிக்கப்பட்ட குமாரனுக்காக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறதா-? சரியா-? எந்த கடைசியான அடையாளத்தை ஆபிரகாம் பெற்றுக் கொண்டான்-? "நான் உன்னை சந்திக்கப் போகிறேன்", என்று அவர் சொன்னார். மேலும் சாராள், கூடாரத்திலே தனக்குத் தானே சிரித்தாள், ஒரு வயதான பெண்மணியாகிய நான் என்னுடைய ஆண்டவனாகிய ஆபிரகாமுடன் இன்பமாக இருக்க முடியுமா, அவருக்கும் கூட வயது ஆகிறதே-? இப்பொழுது அவர்கள் இருவரும் நல்ல வயது சென்று முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள். அவளுக்குத் 90 வயது மேலும் அவனுக்கு 100 வயது. அவர்கள் அநேக வருடங்களாக கணவன் மனைவியாக இருந்ததில்லை. பாருங்கள், "நான் கிழவியும், என் ஆண்டவன், முதிர்வயதுள்ளவருமான பின்பு எனக்கு இன்பம் உண்டாகி இருக்குமோ-?" என்றாள். 114. ஆபிரகாமுடைய சரீரம் மரித்ததைப் போல இருந்தது என்று வேதாகமம் சொன்னது. அது சரி. மேலும் சாராளுடைய கர்ப்பம் செத்துப் போயிருந்தது. தேவனுடைய வாக்குத்தத்ததைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப் படாமல் முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தினான். அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தாரோ அவர் அதைச் செய்வார் என்பதை அறிந்திருந்தான். அந்த வழியாகத் தான் நாமும்... அவருடைய வித்து அதே காரியத்தை செய்கிறது. அவருடைய வாக்களிக்கப்பட்ட சந்ததி, ராஜரீக வித்து, அதே காரியத்தை விசுவாசிக்கிறது. இப்பொழுது பாருங்கள். அதன் பிறகு அவர் சொன்னார்... மேலும் அவள் நகைத்தாள். "ஏன் சாராள் நகைத்தாள்"-? என்று அவர் கேட்டார். அங்கே தான் அவருடைய அடையாளம் இருந்தது. அங்கே தான் சபையின் அடையாளம் இருந்தது. வெளியே அழைக்கப்பட்ட சபைக்கு, ஒரு மனிதன். ஒரு மனிதன், மனித சரீரத்துடன் கன்றின் இறைச்சித் துண்டை சாப்பிட்டுக் கொண்டு, சோளரொட்டி மற்றும் பாலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் அதைச் செய்தாரா-? அவர் தேவனாக இருந்தாரா-? பாருங்கள், அவர் அப்படி இல்லை என்றால், உங்கள் வேதாகமத்தில் பாருங்கள், அதில் "ஏலோஹிம்" என்று காட்டவில்லை என்றால் ஏலோஹிம் (Elohim) தன்னில் தானே இயங்குபவர். ஏலோஹிம், மாமிச சரீரத்தில், அது என்ன ஒரு அடையாளமாக இருக்கிறது, இந்த கடைசி நாட்களில் ஏலோஹிம் மறுபடியும் மணவாட்டிக்குள், மாமிச சரீரத்தில் அதே காரியத்தைச் செய்கிறார். 115. சகரியா 14:7-ல் "ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்" அது ஒரு இருண்ட, மழைக்காலமாக நாம் பெற்றிருப்பதைப் போல இருண்ட மழைக்காலம். "ஆனால் சாயங் காலத்திலே வெளிச்சம் உண்டாகும்" இப்பொழுது நான் அடிக்கடி சொல்வது போல நாகரீகம் கிழக்கிலிருந்து வந்து மேற்குக்கு செல்கிறது. அதே சூரியன் கிழக்கிலிருந்து உதித்து மேற்கிலே மறைகிறது. அது ஒரு ஸ்தாபனத்தின் நாளாக இருந்தது. நாம் சபைகளைக் கட்டுவதற்கும் பள்ளிகளை, மருத்துவ மனைகளை, வேத சாஸ்திர கல்லூரிகளை, மேலும் அதைப் போன்றவற்றை கட்டுவதற்கும் போதுமான வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறோம். ஒரு சிறிய வெளிச்சத்தைப் பெற்றுக் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, மேலும் நம்முடைய பெயரை பதிவு செய்து கொண்டு மேலும் அதைப் போன்று அந்த விதமாக இருக்கிறோம். ஆனால், "சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்", என்று அவர் சொன்னார். அது என்ன-? சுவிசேஷ வெளிச்சம். அது என்ன செய்யும் பரிசுத்த ஆவி, அது என்ன செய்யும். வித்துகளை முதிர்ச்சி அடையச் செய்யும். கடைசி நாட்களில், பரிசுத்தாவி சரியான நேரத்தில் ஊற்றப்படும், கடைசி நாட்களில் பின் மாரியைக் கொண்டு வரும். உண்மையான ஆனால் முதலில் நாம் இன்னுமாக எல்லா நேரத்திலும் அதிகமான அவிசுவாசத்தையே கொண்டு வருகிற ஸ்தாபன விதைகளையே விதைத்து கொண்டிருப்போம் என்றால் எப்பொழுது நீங்கள் ஒரு மழையை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்-? நீங்கள் ஏன் உயிர்த்தெழுதலின் தேவனுடைய வல்லமையை கொண்டு வரும் கவிசேஷ விதையை விதைக்கக் கூடாது. அங்கே தான் கடைசி கால அடையாளங்கள் இருக்கிறது. இது தான் அவருடைய வாக்குத்தத்தம் நண்பர்களே. 116. இங்கே பாருங்கள். இப்பொழுது மூன்று அடையாளங்களை சரியாக இப்பொழுதே ஒன்றாக எடுத்துக் கொள்வோம். மூன்றை ஒரு உறுதிப்படுத்தலாக செய்வோம். என்னால் ஒரு 12 காரியத்தை அவைகளிலிருந்து உங்களுக்கு கொடுக்க முடியும். நீங்கள் சொல்லுகிற அந்த காரியங்கள் வான ராசி மண்டலங்கள் (ZODIAC) கூர்நுனி கோபுர உபதேசம் மற்ற அதைப் போன்ற காரியங்களை நான் விசுவாசிப்பதில்லை. நான் அதைக் குறித்து பேசப் போகிறதில்லை. ஏனெனில் அங்கே ஏதோ ஒரு காரியம் அதில் இருக்கிறது. முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியும், நீங்களாகவே பிரிட்டிஷ் இஸ்ரேலிடம் காயப்பட்டீர்கள்; மேலும் எல்லா அந்த காரியங்களும் அவை ஒன்றுமில்லாத காரியமாக இருந்தது. ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அங்கே இருந்தது... முதல் வேதாகமம் அது வானங்களில் எழுதப்பட்டது. வானராசி மண்டலங்களைப் பாருங்கள். அது எதிலிருந்து முதல் தொடங்குகிறது. கன்னி, இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை. அப்படியே கீழாகச் சென்று குறுக்காக உள்ள மீன்களுக்குச் செல்கிறது. அது என்ன-? புற்றுநோய் காலம். நாம் அதனூடாக கடந்து செல்கிறோம். அதன் பிறகு அடுத்து என்ன-? லியோ, சிங்கம் யூதா கோத்திரத்து சிங்கமாக இரண்டாம் வருகை. 117. கூர்நுனிக் கோபுரத்தைப் பாருங்கள். அது எப்படித் துவங்கினது. மிகப் பெரிய அடித்தளம் இங்கே, அது தான் சபையின் துவக்கமாய் இருந்தது. அது என்னவாக இருந்தது-? முதலில் லூத்தராக இருந்தது. சீர்திருத்தலில் சபையானது கட்டப்பட்டது. இரண்டாவது வரிசையில் அவர்கள் அதிக சிறுபான்மையினராய் மாறினார்கள், வெஸ்லி பரிசுத்தமாக்குதலோடு வந்து பிரசங்கித்தார். அதன் பிறகு அதோடு சென்று ஒரு மரத்தைப் போல அதனுடைய நிலத்தை செய்தது. முதலில் ஒரு சோளம் தானியம் போல இருந்தது. நிலத்திற்குள் சென்று, அடுத்து (தோகை) இலைகள் மேலே வந்தது. அடுத்த காரியம் என்னவாக மேலே வந்தது-? பட்டுக் குஞ்சமாக அதன் பிறகு அடுத்து என்ன காரியம் மேலே வருகிறது. அதே சோளம். அதே ஜீவன். "நான் திரும்ப அளிப்பேன்", என்று கர்த்தர் உரைத்தார். அடுத்த காரியம் ஒரு சோளத்தின் காது மேலே வந்தது. ஒரு மரத்துக்கு அதே காரியம் தான். அவ்விதமாகவே தேவன் வளர்க்கிறார். 118. பெந்தெகொஸ்தே மக்களாகிய ஒரு சிலர் இன்றைக்கு மார்டின் லூத்தர் மற்றும் அவர்களை எண்ணிப் பார்ப்பது கூட கிடையாது. ஏனென்றால் அவர் பரிசுத்த ஆவியை உடையவராக இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர் பெற்றிருந்தார். அவர் நாம் இப்பொழுது பெற்றிருக்கிற ஆழத்திற்கு பெற்று இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அந்த நாளுக்கு அவ்விதம் இல்லாமல் இருந்தது. கூச்சலிடாதீர்கள். சில நிமிடங்களில் சரியான சிக்கலான பொருளைப் பற்றி அறியலாம். அதனால் நீங்கள் பாருங்கள், வெஸ்லி மற்றும் அந்த சகோதரர்... நிச்சயமாக அவர்கள் பெற்று இருந்தார்கள். அது என்னவாக இருந்தது. ஒரு சரீரமாக இருந்தது. பாதத்திலிருந்து வளர்ந்து கொண்டு மேலே வருகிறது. சரீரத்தின் மிகவும் முக்கிய பாகங்களுக்கு மேலே வருகிறது. பாதத்திலிருந்து நுரையீரல்களுக்கு, மேலும் இருதயத்திற்கு, மேலாக தலைக்கு வருகிறது. யார் தலையாக இருப்பது-? கிறிஸ்து, அது தான் புத்திக் கூர்மை, எப்படி சரீரம் நகர்கிறது-? தலையினால், ஆமென். கர்த்தத்துவம் எதன் மேலாக இருக்கும்-? (சபையார் சொல்கிறார்கள் "தோளின் மேல்") எது அவருடைய தோள்கள்-? அவருடைய சரீரமே. ஆமென். அங்கே தான் அசலான உண்மையான சபை அவளுடைய வல்லமையில் பேசுகிறது. அங்கே தான் அப்போஸ்தலர்களின் வல்லமை சபைக்கு திரும்ப வருகிறது. கர்த்தத்துவம் அவர் தோள்களுக்கு மேலாக இருக்கும் போது, நியாயத் தீர்ப்பு, அங்கே தான் ஒரு உண்மையான சபை வருகிறது. நான் விசுவாசிக்கிறேன்... என்னுடைய பாகத்தை சமர்ப்பிப்பதற்கு நான் முயற்சி செய்கிறேன், கிறிஸ்துவின் வருகையில் என்னுடைய காலத்தில் எனக்குத் தெரிந்த சிறந்த முறையில் என்னுடைய பாகத்தை சமர்ப்பிப்பதற்காக அதை தயாராக வைத்திருக்கிறேன். 119. நீங்கள் ஒரு டாலர் நோட்டை உங்கள் ஜேபியில் வைத்திருப்பீர்கள் என்றால் அதை வெளியே எடுங்கள், பாருங்கள், ஒரு பக்கத்தில் வலது பக்கத்தில் அதில் அமெரிக்காவின் முத்திரை இருக்கும். ஒரு கழுகு அதனுடைய உள்ளங் கால்களில் அம்புகளுடன் காணப்படும். அது தான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முத்திரை. அதன் பிறகு அடுத்த பக்கத்தில் அதில் கூர்நுனிக் கோபுரம் (பிரமிடு) இருக்கும். மேலும் தலைபாகம் (CAP) கூர்நுனிக் கோபுரம் (பிரமிடின்) மேலே ஒரு போதும் வைக்கப்படாமல் இருக்கும். ஒரு பெரிய கண் ஒளிர்ந்து கொண்டு இருப்பதைப் போல அங்கே தலை பாகத்தில் இருக்கும். மேலும் "மகத்தான முத்திரை" என்று அது சொல்கிறது. ஏன் நம்முடைய சொந்த முத்திரை என்பதற்கு பதிலாக மகத்தான ஐக்கிய நாடுகளின் முத்திரையாக இருக்கிறது-? நீங்கள் அதைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா-? அதின் மேலாக பாருங்கள், பாருங்கள் அது இப்படி சொல்ல வில்லை என்றால், "மகத்தான முத்திரை” ஏன் கூர்நுனிக் கோபுரம் (பிரமிடு) ஒரு போதும் ஒரு தலைப் பாகத்தை பெற்றிருக்கவில்லை-? சாலமோனுடைய ஆலயத்திலும் அதே காரியம் தான் உள்ளது. தலைக்கல்லானது தள்ளப்பட்டது. நிச்சயமாக ஆனால் அது கீழே இறங்கி வருகிறது. மேலும் நான் எகிப்தில் கூர்நுனிக் கோபுரம் (பிரமிடுகளின்) அண்டையில் இருந்தேன். அவைகளின் கற்கள் அவ்வளவு பரிபூரணமாக வைக்கப்பட்டது. உங்களால் கடினமாகக்கூட ஒரு சவரக கத்தியை (BLADE) அவைகளுக்கு இடையில் நுழைக்க முடியாது. அவைகளை கச்சிதமாகப் பொருத்தி இருக்கிறார்கள். எப்படி அதை அவர்கள் கட்டினார்கள். அவர்களுக்குத் தெரியாது மேலும் ஸ்பிங்க்ஸ் (மனித முகமும் சிங்க உடலும்) அதைப் போன்றவற்றை, அவர்களால் அதைச் சொல்ல முடியாது. ஆனால் பாருங்கள், சரியாக அங்கே அந்த தலைக் கல்லானது பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அது சாணைக் கல்லினால் மெருகேற்றப்பட்டது. அவர்கள் எப்பொழுதாவது தலைக்கல்லை கண்டு பிடிக்க கூடுமானால், அது அவ்வளவாக பரிபூரணமாக நெருங்கிப் பொருந்தும். அது முழு காரியத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டும். அது தான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி, தலைக்கல்லானது வருகிறபோது, அங்கே பூமியின் மேலாக ஒரு சபை அதை பெறுவதற்காக இருக்கும். அது இப்பொழுது மிகச்சரியாக இதைப் போன்ற ஒரு ஊழியத்தைப் பெற்றிருக்கும். அது வெறுமனே சரியாக அங்கே சென்று கொண்டிருக்கும். பாதத்துக்கு மேலே கொண்டு வந்து; லூத்தர் மீதம் உள்ள எல்லோரையும் உயிர்தெழுதலுக்காக கொண்டு வரும். 120. சில பேர் முதலாம் ஜாமத்தில் தூங்கினார்கள், ஒரு சிலர் அடுத்த ஜாமத்தில், மேலும் சில பேர் கீழாக ஏழாவது ஜாமத்தில் அது தான் ஏழு சபை காலங்களாக இருக்கிறது, ஆனால் மணவாளன் வரும் போது அவர்கள் விழித்துக் கொண்டார்கள். (ஆமென்) மரித்தவர்கள் மத்தியிலிருந்து எழுந்து வெளியே வந்தார்கள். மேலும் உயிர்தெழுதலில் எழுந்தார்கள். நாம் அந்தக் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்-? என்று நீங்கள் கேட்கலாம். லூத்தர், வெஸ்லி நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்- ஆமாம், மேலும் அதன் பிறகு தலைக்கல். அது சரியா-? தலைக்கல்லானது கூர்நுனிக் கோபுரம் (பிரமிடில்) இருந்தது. இப்பொழுது நாம் பேழையை எடுத்துக் கொள்வோம். முதல் அடுக்கு, இரண்டாவது அடுக்கு, மூன்றாவது அடுக்கு அது சரியா-? எங்கிருந்து வெளிச்சம் வந்தது-? ஜன்னல் எங்கே இருந்தது-? மேலே மூன்றாவது அடுக்கில்-? அங்கே தான் தேவனுடைய வல்லமையானது சபைக்குள்ளாக வரும். ஒரு சூரியன் (S-U-N) அங்கே ஊடாக பிரகாசித்தது. ஆனால் குமாரன் (S-O-N) இந்த வழியாக சபைக்குள்ளாக வந்து; அது தேவனால் மெருகு ஏற்றி ஆயத்தப்படுத்தி, ஒரு ஊழியத்தை சபைக்குள்ளாகக் கொண்டு வந்து; இப்பொழுது சரியாக பச்சைப் புழு, வெட்டுக் கிளி, மற்றும் முசுக்கட்டைப் பூச்சி தின்றதை திரும்ப அங்கே கொண்டு வருகிறது. 121. இந்த தண்டு வெஸ்லியிலிருந்து வளர்ந்தது... லூத்தரிலிருந்து, வெஸ்லிக்கு, பெந்தெகொஸ்தேவிற்கு மேலும், இப்பொழுது பரிசுத்தாவியைப் பெற்ற பெந்தெகொஸ்தேயினரை மெருகேற்றி (Honed) அவள் வருவாள். இந்த கடைசி நாட்களில் ஒன்றில் தலைக் கல்லாகிய இயேசு கிறிஸ்துவாக; மேலும் நாம் அவரைப் போலவே மிகச் சரியாக ஒரு ஊழியத்தைப் பெற்றிருப்போம். அது அவருடைய முழுமையான ஆவி நெருங்கி, நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்து எதிர் மறையானதை நேர் மறையாக மாறச் செய்கிறது. அது அதன் பிறகு சிறிது நேரத்திற்குள் எதிர்மறையும், நேர்மறையும் ஒன்றாக சேர்ந்துவிடுகிறது. சபையும், கிறிஸ்துவும் ஒன்றாக ஆகிறது - நாம் அவருடைய மாமிசத்துக்கு மாமிசமும் மேலும் எலும்பிற்கு எலும்புமாக இருக்கிறோம். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். ஆமென். நாம் இன்றைக்கு இங்கே இருக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா-? நீண்ட நேரமாக உங்களை காக்க வைத்ததற்காக மன்னியுங்கள். இப்பொழுது நாம் ஜெபிப்போம். 122.எங்கள் பரலோக பிதாவே, நாங்கள் இப்பொழுது போதனையின் முடிவிலே இருக்கிறோம். இந்த குறிப்புகளின் கடைசியிலே, இரவு செய்தியின் கடைசியிலே. மேலும் நான் என்னுடைய உடைந்து போன வழியிலே சொல்ல முயற்சிக்கிறேன். கர்த்தாவே... மேலும் நான் வார்த்தையில் சொல்லத் தெரியாததை நீர் அதை அவர்களுக்கு உண்மையாக்குவீராக. நீர் இங்கே வார்த்தையில் என்ன சொன்னீரோ அதைச் சொல்லலாம். ஆனால் என்னால் அதை ஒரு போதும் ஜீவிக்கச் செய்ய முடியாது. கர்த்தாவே அதை நீர் செய்யும்படியாய் அதை எடுத்துக் கொள்ளும் கர்த்தாவே, அது தான் விதையாய் இருக்கிறது, இப்பொழுது கர்த்தாவே அதற்கு தண்ணீர் பாய்ச்சும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் அதை உம்மிடம் சமர்பிக்கிறேன். பிதாவே, அருளும்; கர்த்தரோடு வார்த்தை இருந்தது போலவும், சோதோமின் நாட்களில் இருந்தது போலவும் வார்த்தை நிச்சயப்படுவதைக் காண்போம். மேசியா வருவார் என்று அது இருக்கும் என்றால், மற்றும் நாங்கள் மறுபடியும் பிறந்த மேசியாக்களாக, அவரது மாம்சத்துக்கு மாமிசமாகவும் மேலும் எலும்பிற்கு எலும்புமாகவும் தேவனால் புத்திர சுவிகாரமாக்கப்பட்ட குமாரர்களைப் போல இருப்போம். அவர் தனது சபைக்கு வரவேண்டியதாக இருக்கிறது. நான் ஜெபிக்கிறேன். தேவனே, அது நீர் பிரத்தியட்சமாகி நீராகவே இன்றிரவு இந்த காரியங்கள் எல்லாம் உண்மையாய் இருக்கும்படி காண்பியும், இந்த அருமையான மேய்ப்பர், இந்த நேசமுள்ள சபை, இந்த அருமையான மக்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. மேலும் கடைசி கால அடையாளங்கள் இங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வார்களாக. அந்த மெய்யான காரியங்கள்... ஏன், வாக்கு அளிக்கப்பட்ட குமாரனை கொடுப்பதற்கு அங்கே நேரம் இல்லாமல் இருந்தது. உடனடியாக சிறிய ஈசாக்கு காட்சியிலே வந்த பிறகு அந்த அடையாளம் வெளியே அழைக்கப்பட்ட சபைக்கு அந்த ராஜரீக வித்துக்கு, வாக்குறுதியுடன் இருந்த வித்துக்கு நிகழ்த்தப்பட்டது. லோத்து வெறுமனே அந்த வித்துக்கு ஒரு உறவினனாக மட்டும் இருந்தான். 123. கர்த்தாவே நாங்கள் சம்பிரதாயமான அக்கரையற்ற சபைகளை இன்றைக்கு அவர்களாகவே ஸ்தாபித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன்கள், மெத்தொடிஸ்டு, எல்லோரும் ஒன்று சேர்ந்து, அவர்களில் பல பேர் கண்ணிகைகளாக இருக்கிறார்கள். மேலும் அவர்களில் பலர் வெளியே வர முயற்சி செய்கிறார்கள். இப்பொழுது எபிஸ்கோபேலியன்கள் மேலும் அதை போன்றவர்கள் தேட முயற்சிக்கிறார்கள்... மேலும் நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரர்கள், நம்முடைய பெந்தெகொஸ்தே சகோதரர்கள் பலர் அவர்களோடு சென்று கொண்டு இருக்கிறார்கள். மேலும் அங்கே அதில் களிகூறுகிறார்கள்... நிச்சயமாக நாங்களும் செய்வோம் கர்த்தாவே. ஆனால் அந்த மனிதர்கள் உண்மையிலே புரிந்துக் கொண்டு மெய்யாகவே அந்த நேரத்தில் அவர்கள்.... அது மணவாளன் வரும்போதா, தூங்குகிற கண்ணிகை வந்து எண்ணெய்யை வாங்க வருகிறாள். ஓ. கர்த்தாவே, இப்பொழுதே சரியாக துரிதமாக சபையை எழுப்பும். கர்த்தாவே, மேலும் நீர் அதை செய்வீர் என்று நான் நிச்சயத்திருக்கிறேன். ஆனால் நீர் ஒரு முறை சொன்னீர், நீர் அறுவடையை காணும்போது மேலும் "வேலை ஆட்களோ கொஞ்சம்" என்று சொன்னீர். ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங் கள் என்று சொன்னீர். இப்பொழுது பிதாவே, நாங்கள் கேட்க வேண்டும் என்று விரும்புகிறீர் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் உம்முடைய கூட்டாளிக ளாக இருக்கிறோம். அது நாங்கள் உம்மோடு ஒன்றாக இருந்தாக வேண்டும். ஒரு தேவ தூதனால் கூட அதைச் செய்ய முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம். அது மனிதர்களால் மாத்திரமே முடியும். 124. பிலிப்பு, அன்னகனுக்கு அனுப்பப்பட்டான், நிச்சயமாக, கர்த்தாவே அவன் ஒரு தூதனால் அங்கே அனுப்பப்பட்டான் ஆனால் அது பிலிப்புவுடைய கைகளை எடுத்துக் கொண்டது. நிச்சயமாக. ஒரு தரிசனம் பவுலுக்கு வந்தது. அவன், தமஸ்குவின் சாலையில் சென்று கொண்டிருந்த போது என்று நாம் உணர்கிறோம். ஆனால் அது அனனியாவின் கைகளை எடுத்துக் கொண்டது சபை, வெளியே அழைக்கப்பட்டு, தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர். ஒரு தரிசனத்தின் மூலம், கொர்னேலியின் வீட்டிற்கு பேதுரு அனுப்பப்பட்டான். ஆனால் அதற்கு அப்போஸ்தலன் தேவைப்பட்டது. தரிசனம் கிடையாது, தூதன் கிடையாது. தேவனே, இன்றிரவு மக்களை எழுப்ப வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். மேலும் அவர்கள் இப்பொழுது வாக்குத்தத்ம் செய்யப்பட்டது இங்கே இருப்பதை அவர்கள் பார்க்கட்டும். அது சபைக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவங்களை நீங்கள் மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்" கர்த்தாவே அங்கே அவர்களில் பல பேர் அதை உரிமை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அவர்கள் அங்கீகரிக்கப்படாத அப்போஸ்தலர்கள்; ஏனென்றால் அவர்கள் வேதத்திற்கு புறம்பானவர்களாக இருக்கிறார்கள். 125. நாங்கள் ஜெபிக்கிறோம், தேவனே தானாகவே உம்மை நீர் வெளிப்படுத்தும். மேலும் தானாகவே உம்மை இன்றிரவு காண்பியும். அவர்கள் அதை செய்து கொண்டு இருக்கிறவர்கள்... அது மனிதர்களை சபையில் சேர்ந்து கொள்ளச் செய்கிறது. அப்போஸ்தலர் நடபடிகள் 2-ல் பேதுரு சொன்ன வார்த்தைக்கு அவர்கள் ஒரு போதும் வெளியே அழைக்கப்படாதவர்களாய் அவர்களை மனம் திரும்பும்படி அழைக்க பயப்படுகிறார்கள். தேவன் வாக்கு அளித்திருக்கின்ற பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மேலும் பரிசுத்த ஆவியை, அவர்கள் அதைப் பெறும்படி அழைப்பதற்கும் பயப்படுகிறார்கள். அதைச் செய்வதனால் அவர்கள் அவர்களுடைய ஸ்தாபனத்திலிருந்து தூக்கி எறியப்படுவார்கள். தேவனே, நாங்கள் ஜெபிக்கிறோம். அது நீர் மனிதர்களை சரியாக இப்பொழுதே எழுப்பும், அவர்கள் இப்பொழுது இந்த மணி வேளையை பார்க்கட்டும். ஏனெனில் அது துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நாங்கள் எல்லாவற் றையும் உம்மிடத்தில் சமர்பிக்கிறோம். மகிமையை எடுத்துக் கொள்வீராக. பேசும், எங்கள் பிதாவே, ஏனெனில் எங்களை உம்முடைய வார்த்தையுடன் சமர்பிக்கிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஆமென். தேவனே-! மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிற மணி வேளையைக் காணத்தக்க மனிதர்களை சீக்கிரமாக எழுப்புவீராக. இப்பொழுது எல்லாவற்றையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். மகிமைப்படுவீராக. பேசும். பிதாவே, எங்களுடைய யாவற்றோடும் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வார்த்தைக்கு ஒப்புவிக்கிறோம். ஆமென். 126. ஓ, என்னே, வார்த்தை அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அது சத்தியமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சில நேரங்களில் நான் கோபப் படுவதைப் போல சப்தமிடுகிறேன். ஆனால் தான் அப்படி இல்லை, நீங்கள் சில பேரை காண்பீர்கள் என்றால்... நான் சாலையில் செல்வது உங்களுக்குத் தெரிந்திருந்து, இங்கே சாலையில் ஒரு பெரிய தாவல் இருக்க, மேலும் நான் சாலையில் மணிக்கு 90 மைல் வேகத்தில் செல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றால் நான் அதை இடித்து... நான் அங்கேயே முடிவடையப் போகிறேன், என்று என்னை எச்சரிக்கும் அளவுக்கு நீங்கள் என்னை நேசிப்பீர்கள் அல்லவா-? நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவ்விதமாகத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். காரியத்தைப் பாருங்கள்... சபையானது அத்தகைய சரிவைப் பெறுகிறது. மேய்ப்பரே, அதை நீங்கள் பார்க்க வேண்டும், பாடற்குழு. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். ஆவிக்குரிய அத்தகைய ஒவ்வொருவரும் ஆவிக்குரிய மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்க்க வேண்டும். சாதாரண நபர்களாகிய நாம் எல்லோரும் என்ன செய்ய முடியும்-? நாம் என்னச் செய்ய முடியும்-? நாம் அதைச் சரியாக இங்கே பார்க்கிறோம். இது தான் கடைசி... அங்கே வேறொரு அடையாளம் ஒரு போதும் ஆபிரகாமுக்கு வரவில்லை, அல்லது அவர்களில் ஒருவருக்குக்கூட. கடைசி அடையாளம் கொடுக்கப்பட்டு விட்டது. குமாரன் வந்தாயிற்று. "அந்த நாட்களில் நடந்தது போல அப்படியே மனுஷக் குமாரன் வருகையிலும் மீண்டும் நடக்கவிருக்கும்" என்று இயேசு சொன்னார். அவர் பொய் சொன்னாரா-? அவரால் அப்படி இருக்க முடியாது. அவர் தேவனாக இருக்கிறார்; அவரால் பொய் சொல்ல முடியாது. 127. இப்பொழுது நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்போகிறோம். எத்தனை பேர் வியாதியுற்றிருக்கிறீர்கள்-? பார்ப்போம். இங்கே இருக்கிற வியாதியுள்ள மக்களாகிய நீங்கள் எல்லோரும் உங்கள் கரத்தை உயர்த்துங்கள், உங்களுக்கு ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டதா-? எல்லாம் சரி நாம் அவர்களை அழைப்போம். என்ன-? 1 முதல் 100-? எல்லாம் சரி யு-1 லிருந்து 100 வரைக்கும் ஜெப அட்டைகளைக் கொடுத்துள்ளான் என்று சொன்னான். எல்லாம் சரி. இந்த மக்களாகிய சிலரை வரிசைப்படுத்துவோம். யு-1 யார் வைத்திருப்பது, ஜெப அட்டை யு-1-? உங்களால் எழுந்திருக்க முடியவில்லை என்றால் இப்பொழுது உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நாங்கள் யாரையாவது கொண்டு உங்களை தூக்கிவிடுவோம். அந்த சீமாட்டி இங்கே உங்களால் சரியாக நிற்கமுடியுமா-? 2, 2-ஐ யார் வைத்திருப்பது-? வெறுமனே நான் கூப்பிடும் போது பின்னால் அங்கே உள்ள சீமாட்டி நீங்கள் வருகிறீர்களா-? எண் 2-? எல்லாம் சரி. ஜெப அட்டை எண் 3 யு எண் 3-? அந்த ஜெப அட்டையை யார் வைத்திருப்பது-? எண் 3 அந்த சகோதரன் அங்கே வந்து கொண்டிருப்பது அவர் தானா-? எல்லாம் சரி எண் 4 யார் ஜெப அட்டை 4-ஐ வைத்திருப்பது-? சரியாக அங்கே சீமாட்டி 5-? ஜெப அட்டை 6, ஜெப அட்டை எண் 6, எண் 7 எல்லாம் சரி 8,9,10,10. நான் 10 எழுந்து நிற்பதை பார்க்கவில்லை. எண் 10 அங்கே சில மக்கள் விடுபட்டு இருக்கிறார்கள். அது அவர்களாக இருந்திருக்கலாம். 10,11,12, எண் 12, 13, 14 உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அல்லது ஏதாவது ஒன்றை, அப்பொழுது நான் உங்களை சரியாக துரிதமாக காண முடியும். 14, 15, 15 ஜெப அட்டை எண் 15, தயவு செய்து-? 16, 17 அது சரி. 17, 18, 19, 20. எல்லாம் சரி. நான் எதை அழைத்தேன்-? எண் 20 (சகோ.பிரன்ஹாம் மக்களை எண்ணுகிறார்) 16 மக்கள் மட்டுமே நான் சொல்லக் கூடிய அளவுக்கு அங்கே இருக்கிறார்கள் எல்லாம் சரி 16-லிருந்து 20. (சகோ.பிரான்ஹாம் மறுபடியும் மக்களை எண்ணுகிறார்) 128. நல்லது அங்கே இருந்து நாம் துவங்கலாம். எத்தனை பேர் நீங்கள் வியாதியாய் தேவையுடன் இருக்கிறவர்கள் ஒரு ஜெப அட்டையை வைத்து இராமல் இருக்கிறீர்கள்-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். கட்டிடம் முழுக்க எல்லாம் சரி. எத்தனை பேர் இப்பொழுது ஒரு சில நிமிடங்களுக்கு ஜெபத்தில் இருப்போம் என்று வாக்கு கொடுப்பீர்கள். இப்பொழுது நிஜமாக உட்கார்ந்து ஜெபத்தில் இருங்கள். நான் எதைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்-? கடைசியான அடையாளம் கடைசி காலத்திற்கு முன்பாக சபையை தாக்கப் போகிறது. சில நாளில் அது வித்தியாசமாக இருக்கப் போகிறது. நாம் கடைசியாக அதைக் கேட்கப் போகிறோம். எல்லாம் சரி. நீங்கள் உத்தமமாய் இருக்கிறீர்களா-? எத்தனை பேர் அது உண்மையாக இருக்கப்போகிறது என்று விசுவாசிக்கிறீர்கள்-? எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள் அது... நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? எல்லாம் சரி. பயபக்தியாய் இருங்கள். இப்பொழுது மிகவும் பயபக்தியாய் இருங்கள். வெறுமனே விசுவாசத்தை கொண்டிருங்கள், சந்தேகப்படாதீர்கள். 129. இப்பொழுது நீங்கள் வெறுமனே ஜெபத்தில் இருங்கள். உண்மையிலே பயபக்தியாய் இருங்கள். இங்கே இருக்கிற சீமாட்டி ஜெப அட்டையை வைத்து இருக்கிறார்களா என்று நான் பார்க்க விரும்புகிறேன். அப்படி இல்லையென்றால் நீங்கள் 1-லிருந்து 20-க்கு இடையில் எங்கேயாவது நீங்கள் பெற்றிருக்கிறீர்களா சீமாட்டியே-? (பில்லி அது என்னவாக இருக்கிறது) எல்லாம் சரி. சில நேரங்களில் யாராவது ஒருவர் காது கேளாதவராய் இருக்கக்கூடும். நான் மறந்து விடுகிறேன். சுற்றிலும் பாருங்கள்-? அங்கே வேறு சில ஜெப அட்டைகள் இருக்கிறதா என்று பாருங்கள். அது யாராவது ஒருவர் காது கேளாதவராய் இருக்கக்கூடும். மேலும் கேட்கக் கூட முடியாதவர்களாய் நான் ஒரு சிறிது காலதாமதமாகி விட்டேன். மேலும் நான்... நல்லது, நாளைய தினத்தில் நீங்கள் எங்கும் போகவில்லை என்றால் எப்படியாகிலும் வெறுமனே சபைக்கு திரும்பி வாருங்கள். அப்படி நீங்கள் செய்வீர்களா, அது தான் எல்லாம். பவுல் அதே காரியத்தை இரவு முழுவதும் பிரசங்கித் தான். நிச்சயமாக, மேலும் இப்பொழுது சுற்றிலும் எங்கும் நகராதீர்கள். அப்படியே நிலையாய் உட்காருங்கள். மேலும் உண்மையிலே பயபக்தியாய் இருங்கள். இப்பொழுது நாம் ஒரு சில விநாடிகள் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 130. கர்த்தராகிய இயேசுவே இப்பொழுது நான் எதை எதிர் நோக்கினேனோ அதை உணர்ந்து கொண்டேன். நான் உண்மையைச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அல்லது எதையாகிலும் தவறானதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்பதை நான் உணர வேண்டும். நான் என்னையே நம்பி இருக்கவில்லை, கர்த்தாவே. நான் அதை செய்வதற்கு பயப்படுகிறேன். எனக்குத் தெரியும்... அது உம்முடைய வார்த்தையாக இருக்கிறது என்று நான் அறிந்து, மேலும் அது தான் சத்தியம் என்று அறிந்திருக்கிறேன், என்றாலும் கர்த்தாவே, அதை நீர் செய்ய வேண்டியதாக இருக்கிறது. நீர் தான் எனக்கு உதவி செய்ய முடியும். இதைச் செய்வதற்கு நீர் தான் எனக்கு அனுமதியைக் கொடுக்க வேண்டும், கர்த்தாவே, அல்லது நான் அதைச் செய்ய முடியாது. நான் அதை செய்வதற்கு அது முற்றிலுமாக முடியாத காரியமாக இருக்கும். நீர் தான் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். என்னை ஆசீர்வதியும், என்னுடைய ஜீவியத்தில் பிழைகளை எனக்கு மன்னியும். கர்த்தாவே இப்பொழுது இங்கே நடுத்தர வயதினனாக நான் இருக்கிறேன். நான் 21 வயதில் சிறிய பையனாக இருந்த காலத்திலிருந்தே தொடங்கி எல்லா வழிகளிலிருந்தும் நான் உமக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த இழந்த நேரத்திற்கு நான் மறுசீரமைப்பு செய்ய விரும்புகிறேன். கர்த்தாவே, நான் வெளியே வர வேண்டும். இன்றிரவு என்னை ஒரு வாலிப மனிதனாக திருப்புவீர் என்றால், நான் என் நிலையிலிருந்து வெளியேற நான் இப்பொழுது ஒரு வாலிப மனிதனாக இருக்க முடியாது. என்ன எனக்கு தெரிந்தவைகள் என்பவைகளும் எனக்குத் தெரியாதவைகளே. நான் பிரசங்கித்த இந்த மக்களுடன் நான் உயிர்தெழுதலில் எழுந்திருக்க மாட்டேன். நான் இந்த சந்ததியாருடன் எழுந்து உம்முடைய வார்த்தைக்கு சாட்சியாக நிற்க வேண்டும். அதனால் கர்த்தாவே, நான் மக்களுக்கு உண்மையும் நேர்மையும் உடையவனாக இருப்பேனாக. நான் இங்கிருக்கும் வேளையிலே உமக்கு நேர்மையாய் இருக்க வேண்டும். என்னுடைய ஊழியம் முடிந்ததும், உம்முடைய ஊழியக்காரனாகிய என்னை சமாதானத்துடன் ஏற்றுக் கொள்ளுவீராக. 131. என்னை இப்பொழுது நீர் வழி நடத்தி இயக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்த மக்களை ஆசிர்வதியும். இந்த சபையை, இந்த அன்பான மேய்ப்பரையும், அவருடைய மனைவியையும், இங்கு உள்ள எல்லா மக்களையும் ஆசீர்வதியும் கர்த்தாவே, அப்பேற்பட்ட அன்பான, இனிமையான மக்களாக இருக்கின்றனர். அவர்களுடன் இருப்பீராக என்று நான் ஜெபிக்கிறேன். மேலும் நான் இப்பொழுது சொன்னதை அவர்கள் காணட்டும். அந்த கடைசி கால அடையாளங்களை, நோவாவின் காலத்திலிருந்து அவைகளை, கர்த்தாவே, அந்த அடையாளங்களை சரியாக நீர் கொடுத்தீர். வெறுமனே ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்துடன் அதை விளக்க முயற்சித்தேன், அதனுடன் எல்லாவற்றோடும் விவரமாக போவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் இப்பொழுது நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே நீர் அதை உறுதி செய்வீராக, அது தான் முக்கியமான காரியமாக இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும். அவர்கள் அறிந்து கொள்வார்களாக அது அதே தேவன், அங்கே ஆபிரகாம் சாராள் முன்னிலையில் அந்த அடையானத்தை நிகழ்த்திக் காட்டினார் என்றும், மேலும் அந்த தெரிந்து கொள்ளப்பட்ட சபையானது அங்கே வனாந்திரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது என்றும், ஒரு சிறிய பலதரப்பட்ட ஸ்தாபனக் குழுவும் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தது... அங்கே எந்த பட்டணமும் இல்லை, அவர்கள் ஒரு சிறிய குழுவாக கூடாரத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பெரிய கட்டிடங்கள் இல்லை. மற்றும் மகிமைக்காக பெரிய காரியங்கள் ஒன்றும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஒரு கூட்ட யாத்திரிகர்களாக இருந்தார்கள். ஆனால் நீர் அவர்களுக்குத் தோன்றினீர். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு குமாரன் வருவார் என்று வாக்குத்தத்தம் இருந்தது. எங்களுக்கும் கூட பிதாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். நான் ஜெபிக்கிறேன், அது எல்லாவற்றுடன் ஊடாக இங்கே இந்த இரவில் இந்த தேசத்தில் பார்க்கும் போது சோதோமாக இருக்கிறது. இப்பொழுது எத்தனை பெரிய விபச்சார காரியங்கள் செய்யப்பட்டிருந்தது-? எத்தனை குடும்பங்கள் உடைக்கப்பட்டுப் போனது-? எவ்வளவு பாவங்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக சரியாக இப்பொழுது வந்து கொண்டு இருக்கிறது-? கர்த்தாவே மெய்யாகவே இந்த இதே பட்டணத்தில்-? தேவனே, நீர் அதை எப்படி தாங்கிக் கொண்டிருக்கிறீர், அவர்களை மன்னியும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நீர் எங்கள் அருகில் இருப்பீராக. இயேசுவின் நாமத்தில், ஆமென். 132. எல்லாம் சரி. ஒரு கணப்பொழுது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். இங்கே முதலில் இந்த வரிசையை நான் நோக்கிப் பார்க்கட்டும். நான் அறிந்த மட்டும் இங்கு வரிசையில் இருக்கும் மக்கள் எனக்கு அந்நியர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களை எனக்குத் தெரியாது. அவர்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. உண்மையிலே இங்குள்ள பார்வையாளர்களின் ஊடாகப் பார்க்க... நான் என்னுடைய அருமையான நண்பர்களை அங்கே பார்க்கிறேன், சகோதரன் மற்றும் சகோதரி பால்மர்(Palmer)யை மேகானி-லிருந்து (Magon) அல்லது ஜார்ஜியாவில் இருந்து வந்தவர்கள் இங்கே சரியாக உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் எனக்கு சரியாக அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த சகோதரனையும் சகோதரியையும் தெரியும். என்னால் அவர்கள் பெயரை அழைக்க முடியவில்லை. மேலும் இங்கே... சரியாக ஓஹேயாவிலிருந்து (ohio) வந்த சகோதரன் ஃபிரிட்சிங்கர் (Fritzsinger) உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது சரி. இப்பொழுது சகோதரன் ஃபிரெட் சாத்மன் (fred sothman) மேலும் திருமதி சாத்மன் இங்கு எங்கோ இருக்கிறார்கள். ஏதோ ஓரிடத்தில்; எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு அவர் "ஆமென்" என்று சொன்னதை நான் கேட்டேன். அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. இங்கே எங்கேயோ அவர் இருக்கக்கூடும். மேலும் சகோதரன், மற்றும் சகோதரி இவான்ஸ் (Evans) இங்கே இருக்கிறார்கள் சகோதரன் இவான்ஸ் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சகோதரி இவான்ஸ் இன்றிரவு பாளையத்தில் அங்கே இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர்கள் உள்ளே வருவதற்கு இடம் இல்லை என்று அவர்கள் கண்டார்கள். அதனால் என்னுடைய மனைவி மற்றும் மற்றும் அவர்களும் இருக்கும் இடத்திற்கு அவர்கள் திரும்பி பின்னால் சென்று விட்டார்கள். அதனால் நாங்கள் இந்த கூட்டத்தை விரும்பினோம்- மேலும் சகோ.டாம்-சிம்சன் இங்கே இருக்கிறார். சகோ.டேவிட்-வுட் இங்கே இருக்கிறார். மேலும் அவர்கள் எல்லோரையும், நான் அவர்களை, அவர்களில் ஒருவரையும் பார்க்கவில்லை. 133. ஆனால் எத்தனை பேர் இங்கே உங்களைப் பற்றி ஒன்றும் எனக்குத் தெரியாது என்று அறிந்திருக்கிறீர்கள், உங்களுக்குள் என்ன தவறு இருக்கிறது அல்லது வேறு ஏதாவது-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஒவ்வொரு நபரும், ஓ, அது வெறுமனே எல்லா இடத்திலும் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் வெறுமனே விசுவாசியுங்கள். உங்கள்... விசுவாசியுங்கள். ஓ, என்னே, முழு இருதயத்துடன் நீங்கள் இப்பொழுது இங்கே ஒரு மனிதனைக் குறித்தே தவிர ஏதாவது பேசுவதற்கு வேண்டிய இடமாக இருக்கிறது. இப்பொழுது அது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது இங்கே பாருங்கள். இந்த ஜெப வரிசையைப் பாருங்கள். ஒவ்வொரு நபரும் அவர்களுடைய கரங்களை உயர்த்தினார்கள். அவர்கள் அந்நியராய் இருக்கிறார்கள். மேலும் இங்கே என்னுடைய கரமும் இருக்கிறது, இங்கே வேதாகமமும் இருக்கிறது, அவர்கள் எனக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள் எனக்கு அவர்களைத் தெரியாது. மேலும் இந்த மேடையிலிருந்து எனக்கு யாரை அடையாளம் தெரியும் என்று நான் உங்களுக்கு மிகச் சரியாக சொல்லி இருந்தேன். எனக்குப் பின்னால் சகோ.லிட்டில்-பீல்டைத் (little field) தவிர யாரையும் எனக்குத் தெரியாது. என்னால் பார்க்க முடிந்தவரை எனக்கு ஒரு நபரையும் தெரியாது. அவர்கள் சகோதரி லிட்டில் பீல்டா-? அது இல்லையா என்பதை எனக்குத் தெரியாது. எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. வேறொரு இரவு உங்களை எழுப்பினதற்காக என்னை மன்னியுங்கள். எனவே இங்கே யாரையும் எனக்குத் தெரியாது. 134. ஆனால் இப்பொழுது பாருங்கள், இப்பொழுது பரிசுத்த ஆவி வார்த்தையில் இருப்பார் என்றால், வாக்கு அளிக்கப்பட்ட வார்த்தையில் அதன் பிறகு மனுஷ குமாரன் வருவதற்கு முன்பாக ஒரு வேதாகமம் அடையாளத்தை அவர் வாக்குத்தத்தம் செய்தார். சோதோமின் நாட்களில் நடந்தது போல என்று. அது சரியாக இருக்கிறதா-? இப்பொழுது நம்மிடையே உள்ள சகோதரரே நீங்கள் விசுவாசிக்கவில்லையா அது இந்த சிறிய குழுவாக இருக்கிற மக்கள் என்றும் அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட கூட்டமாக இருக்கிறார்கள் என்றும்; விசுவாசிக்கவில்லையா-? அதுவே, பெந்தெகொஸ்தே சபை என்றும் நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? அதனுடைய எல்லா ஏற்ற தாழ்விலும், அங்கே தான் அந்த தெரிந்தெடுக்கப்பட்ட வெளியே அழைக்கப்பட்ட குழுவாகிய மக்கள் இருக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். நிச்சயமாக, நிச்சயமாக. பெந்தெகொஸ்தே உலகில் அவர்கள் அனைவரும் இல்லை. ஆனால் அந்த குழுவில் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன். அவர்கள் அங்கு இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள். ஏனென்றால் அங்கே வேறொரு சபைக் காலம் ஒரு போதும் இருக்காது. இது தான் கடைசியான ஒன்று. ஆனால் பெந்தெகொஸ்தே குழுவிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அந்த வரவிருக்கும் கல்லில் வடிவமைக்க தேவன் எடுப்பார், வெறுமனே அதே போல...அந்த கூரையை கீழே கொண்டு வர அது பொருந்தும். நீங்கள் கவனியுங்கள் அது பொருத்தமற்றதாக இருக்காது. அதை வேறு வழியில் உட்கார வைக்க முடியாது, அது கச்சிதமாக பொருத்தமாக இருக்கும். இந்த சபை அதே விதமான ஊழியத்தைக் கொண்டிருக்கும். மேலும் இயேசுவும் அதே காரியத்தை சாட்சியிட்டார். 135. இப்பொழுது நாம் எங்கிருந்து துவங்கலாம்-? இவர் தான் முதல் நபரா-? அவரா-? இங்கே இவரா-? அது சரி. சீமாட்டி நீங்கள் விரும்பினால், எங்கே இருக்கிறீர்களோ அங்கே வெறுமனே எழுந்து நில்லுங்கள். நீங்கள் நகர்ந்து வர வேண்டியதில்லை. இப்பொழுது இங்கே நாம் ஒரு மனிதனாகவும், ஒரு ஸ்திரீயாகவும் இருக்கிறோம். வெறுமனே இயேசு கிணற்றண்டையில் சந்தித்த ஸ்திரீயைப் போல உள்ளது. நான் அவளை ஒரு போதும் பார்த்தது இல்லை. அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் வெறுமனே ஒரு ஸ்திரீயாக அங்கே நின்று கொண்டிருக்கிறாள். அவ்வளவு தான் எனக்கு தெரியும். மேலும் மக்கள் நீங்கள் இருக்கிறீர்கள். இப்பொழுது நான் ஒரு... இப்பொழுது பார்க்கிறேன் அவள் பார்ப்பதற்கு ஒரு வகையாக மெலிதான, ஆனால் உண்மையிலே ஒரு நல்ல உடல் நலத்துடன் பலம் பொருந்திய ஒரு பெண்மணியாய் இருக்கக் கூடும். அவள் இருக்கலாம். அவள் வேறு யாருக்காகவோ அங்கே நின்று கொண்டு இருக்கலாம். எனக்குத் தெரியாது. நான் அவளை ஒருபோதும் பார்த்ததில்லை நல்லது இப்பொழுது, பரிசுத்த ஆவி இப்பொழுது... என்னால் அவளை சுகப்படுத்தக் கூடுமானால் நான் அங்கே நடந்து சென்று... அவள் சுகவீனமாய் இருப்பாள் என்றால், உதாரணமாக சொல்கிறேன் நல்லது. ஒரு மெல்லிய தேகம் கொண்ட பெண்மணியான நீங்கள் உங்களுக்கு காச நோய் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். அவளுக்கு, காச நோய் இருக்கிறது என்று சொல்வாள் என்றால், நான் அங்கே அவளிடத்தில் நடந்து சென்று, "நான் உங்கள் மேலாக என்னுடைய கரங்களை வைப்பேன், சகோதரியே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் சுகத்தைக் கொடுக்கிறேன்" என்று சொல்வேன். கர்த்தர், நீ போய் அதைச் செய் என்று என்னோடு பேசுவார் என்றால், நான் சென்று அதைச் செய்வேன். பாருங்கள். ஆனால் நான் அங்கு சென்று அவர் அதைச் சொல்லச் சொல்லும் வரைக்கும் அதைச் சொல்லப் போவதில்லை, ஏனென்றால் அது எனக்குத் தெரியாது. 136. சமீபத்தில் ஒரு மனிதன் வீட்டின் முன் ஓட்டிக் கொண்டு வந்து, ஒரு முழு பெரிய குழுவாகிய மக்கள் அங்கே வெளியே - மேலும் அவர் சொன்னார், என்னுடைய மனைவி இடத்தில் (நான் உள்ளே இருந்தேன்) அவன், "சகோதரர் பிரான்ஹாம் வாசலுக்கு வந்து என் மகள் சரியாகி விடுவாள் என்று என் இடத்தில் சொல்லட்டும். அவ்வளவு தான் அவர் செய்ய வேண்டும் வெறுமனே நடந்து வந்து சொல்லட்டும்", என்றான். "நல்லது, வெளியே சென்று மேலும்... என்று மேடா சொன்னாள். நல்லது நான் என்ன செய்ய முடியும்-? நான் சென்று அதை அவனுக்குச் சொல்வேன் என்றால் தெரிந்திராமலேயே நான் பொய் சொல்லுகிறவனாக இருப்பேன்", என்று நான் சொன்னேன். கர்த்தர் என்னிடத்தில் அவரிடத்தில் சென்று அதைச் சொல் என்று சொல்வார் என்றால், அதை நான் அவரிடத்தில் சென்று சொல்வேன் என்றேன். ஆனால் அவர் என்னிடத்தில் அதைச் சொல்லும் வரைக்கும் அவர் என்னிடம் சொல்லச் சொல்வதை விட அதிகமாக என்னால் சொல்ல முடியாது", என்றேன். அது தான் அது. நீங்கள் முன்னறிவித்துக் கொண்டு நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்று யூகித்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது தவறாக இருக்கிறது. அதை யூகிக்க முடியாது. நீங்கள்... மேலும் இங்கே நீங்கள் அதை யூகிக்க முடியாது. "இந்தப் பெண் தனது நோய்வாய்ப்பட்ட அத்தைக்காக ஜெபிக்கிறார் என்று கருதுகிறேன்", என்று என்னால் சொல்ல முடியாது. அது வேலை செய்யாது. அவளுக்கு நன்றாகத் தெரியும். நல்லது... அதன் மேலாக அவள் இருக்கலாம். ஆனால் நான் அதை அனுமானிக்கிறேன். பாருங்கள் அதை நீங்கள் செய்ய முடியாது. அது உண்மையாய் இருக்க வேண்டும். உண்மையாய் இருக்க வேண்டும். மேலும் இங்கே தான் அது உண்மையாய் இருக்கிறதா அல்லது இல்லையா என்று நிரூபிக்கப்பட வேண்டும். 137. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் நினைவில் கொள்ள வேண்டும். நான் உங்கள் சகோதரன் பாருங்கள். வெறுமனே ஒரு மனிதன். ஆனால் தேவனுடைய வரம் இந்த செய்தியை விசுவாசிக்கிறேன். மேலும் அவர் இந்த செய்தியை பிரசங்கிக்கும்படியாய் என்னை அனுப்பினார் என்று விசுவாசிக்கிறேன். அதன் பிறகு பரிசுத்த ஆவியானவருக்கு என்னை வீட்டுக் கொடுக்கிறேன். மேலும் அந்த வார்த்தையானது அங்கே என்னுடைய இருதயத்தில் இருக்கிறது. மேலும், "நீங்கள் என்னிலும் என்னுடைய வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ..." இல்லை... நிலைத்திருப்பது என்பது வெறுமனே இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டும் மற்றும் குதித்துக் கொண்டிருப்பதும் கிடையாது, ஆனால், "நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ; அது சரியாக இருக்கிறதா-? இப்பொழுது, தான் வெறுமனே உங்களிடத்தில் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். சீமாட்டியே (பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன்) வெறுமனே ஒரு சில நிமிடங்களுக்கு, நீங்கள் அங்கேயே சரியாக நிற்கும் போது வேறொருவர் இடமிருந்து நான் உங்களை தனிமைப்படுத்த முடியும். மேலும் நம்முடைய கர்த்தர் அந்த ஸ்திரீயிடம் கிணற்றண்டையில் பேசினது போல, உங்களுக்குத் தெரியும். அவர், அவளுடைய ஆவியைப் பகுத்தறிந்தார். ஏனெனில் அவளுடைய தொல்லை என்னவென்று கண்டு பிடிப்பதற்காக; அதன் பிறகு அவளுடைய தொல்லையை அவர் கண்டு பிடித்த போது, அவர் அவளுடைய தொல்லை என்ன என்று அவளுக்குச் சொன்னார். மேலும், அது ஒரு மேசியாவின் அடையாளம் என்று அவள் சொன்னாள். நல்லது இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்றால்; நீங்கள் என்னை ஒரு மனிதனாக அறிவீர்கள். நான் அதை செய்ய முடியாது. அது மீண்டும் நிகழ்த்தப்பட்டால்; அது மீண்டும் மேசியாவின் அடையாளமாக இருக்கும் அல்லவா-? நீங்கள் சபையே, அதை விசுவாசிப்பீர்களா-? 138. இப்பொழுது ஒரு நிமிடம் அவளிடம் வெறுமனே பேசலாம். பாருங்கள், நான் மேசியா அல்ல, ஆனால் மேசியா என் மூலமாக பேசுகிறார். பாருங்கள் அது சரியே. ஏனெனில் எனக்கு அவளைத் தெரியாது. அவளை ஒரு போதும் தான் பார்த்தது இல்லை. தான் ஒரு கணம் வரை... அவர் அதைச் செய்வாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைச் செய்யாமலும் கூட இருக்கலாம். இந்த சீமாட்டி இப்பொழுது சரியாக உதவியைப் பெற்றுக் கொண்டே ஆகவேண்டும். அல்லது அவள் மரிக்கப் போகிறாள். அவளுக்கு புற்று நோய் இருக்கிறது. அது சரி. உன்னுடைய கரத்தை இந்த விதமாக உயர்த்தும் போது அதனால் அதை மக்கள் அறிந்து கொள்வார்கள். அது எங்கே இருக்கிறது என்று நான் உள்னிடத்தில் சொல்ல விரும்புகிறாயா-? அது உன்னுடைய தொண்டையில் இருக்கிறது. சரி. உன்னுடைய முழு இருதயத்துடன் அதை ஏற்றுக் கொள்கிறாயா-? நீ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்-? (அந்த சீமாட்டி சகோ.பிரான்ஹாமுடன் பேசுகிறாள்) எல்லாம் சரியே. வேதாகமத்தின்படி அவர் அதை செய்தார் என்றும், அவர் உங்களை சுகப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறேன் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசித்தால்; அதன் பிறகு நீங்கள் சுகமானீர்கள். அப்படி இல்லையா-? இப்பொழுது அந்த வார்த்தை சரியாக இங்கு இருக்கிறதல்லவா-? அது சரியாக இருக்கிறது. ஆமென், "கீழே சென்று உமக்கு நன்றி கர்த்தாவே," என்று சொல்லுங்கள். அதை எல்லாவற்றையும் குறித்து மறந்து விடுங்கள். நலம் பெறுங்கள். ஆமென். 139. நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாக இருக்கிறோம். உங்களை எனக்குத் தெரியாது. நான் உங்களை ஒரு போதும் பார்த்தது இல்லை என்று நான் யூகிக்கிறேன். நாம் அந்நியர்களாக இருக்கிறோம். வெறுமனே இங்கே சந்தித்தோம். ஆனால் நம் இருவரையும் தேவன் அறிவார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களால் முடியாதா-? வேதாகமம் சொல்கிறது. "விசுவாசிக்கிறவனுக்கு..." உண்மையான பயபக்தியாய் இருங்கள். கர்த்தராகிய தேவன், என்னிடத்தில் சொல்வார் என்றால்... நான் அங்கே நடந்து சென்று மேலும், "சீமாட்டியே நீங்கள் சுகவீனமாக இருக்கிறீர்கள்," என்று சொல்வேன் என்றால், இப்பொழுது. நீங்கள் சுகவீனமாக அங்கே ஜெபவரிசையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மையாக இருக்கலாம். மேலும் நீங்கள் அங்கே வேறு யாராவது ஒருவருக்காக நின்று கொண்டிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சுகவீனமாக இருந்தால், மேலும் நான் அங்கே சென்று என்னுடைய கரங்களை உங்கள் மேலாக வைத்து, "இயேசு சொன்னார். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சொஸ்தமாவார்கள்," என்று சொல்வேன். அது சத்தியமாக இருக்கிறது. 140.ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். அந்த நபரை அவர் அனுப்பினாரா அல்லது இல்லையா என்பதை நிரூபிக்கட்டும். முதலில் அதைக் கண்டு பிடிப்போம். நீங்கள் பாருங்கள். அது அவ்வாறு செய்யப்படுமா அல்லது இல்லையா பாருங்கள், அதை நினைவில் கொள்ளுங்கள்... அந்த இரண்டு வார்த்தைகள் மறைமுகமாக இரண்டு வித்தியாசமான... எப்பொழுதும் இருந்து வருகிறது ஒரு.... கர்த்தருடைய வார்த்தையை ஏதேன் தோட்டத்தில் வெள்ளை பூச்சு பூசுவதன் மூலம் அதைச் செய்ய சாத்தான் முயன்றான். மோவாப் அதே காரியத்தை செய்ய முயன்றது. சாத்தானும் அதே காரியத்தை இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் செய்தான் - அவனுடைய சமய கோட்பாடு கல்வியினாலும், மற்றும் அறிவினாலும் அவரிடம் பறந்து சென்று, 'அப்படி எழுதியிருக்கிறதே", "அப்படி எழுதியிருக்கிறதே" என்று சொன்னான். இயேசு சரியாக அவன் பின்னாகச் சென்று, "இப்படியும் எழுதியிருக்கிறதே..." என்று சொன்னார். அது இயேசுவுக்கு வேலை செய்தது. வார்த்தை அந்த வார்த்தைக்குள் இருந்தது. அதுவே அங்கே வேலை செய்ய வைத்தது. மின்சாரம் அந்த மின் கம்பியிலிருந்தது அது தான் வித்தியாசம். 141. இப்பொழுது இங்கே மின் கம்பி மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாருங்கள். நான் வெறுமனே மின் கம்பியாக இருக்கிறேன், ஆனால் அவர் தான் மின்சாரம், அதனால் மின்சாரம் இல்லாமல் மின்கம்பி மரித்ததாக இருக்கிறது. அதனால் தேவனின் மின்சாரமாகிய பரிசுத்த ஆவியானவர், ஒரு மின்கம்பியின் மூலமாக (உங்கள் சகோதரன்) வருவார் என்றால்-? மேலும் உங்களுக்கு விவரிக்கக் கூடுமானால் (அல்லது பரிசுத்தாவியினால், அவர் கிணற்றன்டையில் அந்த ஸ்திரீயினிடத்தில் செய்தது போல) நீங்கள் செய்த ஏதோ ஒரு காரியத்தை விவரித்து சொல்வேன் என்றால், அல்லது நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை அல்லது ஏதோ ஒரு காரியம் அது கடந்த காலமாக இருந்ததை அது உண்மையா அல்லது இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும், அல்லது நீங்கள் வியாதியாய் இருப்பீர்கள் என்றால் - ஏதோவொன்று உங்களிடத்தில் தவறாய் இருக்கும் என்றால் - உங்களிடத்தில் என்ன தவறு உள்ளது என்று சொல்லும் போது அது உண்மையா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா-? அது உங்களுக்குத் தெரியும். சபையே அது சரி தானே-? என்னவாக இருந்தது என்பதை அவர் உங்களுக்குச் சொல்ல முடிந்தால் அது உண்மையா இல்லையா என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் என்னவாக இருக்கும் என்று அவர் உங்களிடத்தில் சொல்வதும் அது சரியாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள். மேலும் என்னவாக இருக்கும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும், அவர், சரியாக இப்பொழுது அது என்னிடத்தில் வராமல் அவருடைய வார்த்தையில் இருந்து சொல்வார் என்றால், அது ஏற்கனவே வந்துவிட்டது. ஒரே காரியம் அது இப்பொழுது ஒரு நிரூபனமாக இருக்கிறது. அது இந்த வார்த்தை, உங்களுடைய விசுவாசம், உங்கள் தன்மை, மேலும் தேவனுடைய வார்த்தை ஒன்றாக சரியாக இங்கே சந்திக்கிறது பாருங்கள். நான் வெறுமனே ஒரு வாயாக (mouth-piece) மாற்றுவதற் கான கருவியாக இருக்கிறேன். 142. இங்கே தான் தேவனுடைய வாக்குத்தத்தம் இருக்கிறது. இது தான் கடைசி நாளுக்கான ஒரு அடையாளமாக இருக்கும் என்று தேவன் சொன்னார். இங்கே தான் கடைசி நாட்கள் இருக்கிறது. நாம் அதில் தான் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாம் சரி. அது உண்மை தானே-? பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே பிரசன்னமாகி நின்று கொண்டிருக்கிறார். எத்தனை பேர் எப்பொழுதாவது அந்த தூதனை படத்தில் பார்த்திருக்கிறீர்கள். அந்த வெளிச்சத்தைப் பார்த்தீர்களா-? அது சரியாக இப்பொழுது இங்கே உள்ளது. அது சரியாக இங்கே இருக்கிறது. சரியாக நான் நின்று கொண்டு இருக்கும் இடத்திலே. அங்கே அதைத் தான் மிகச் சரியாக பேசிக் கொண்டு இருக்கிறேன். அது தான் மிகச் சரியாக இந்த ஸ்திரீக்கு இதைச் செய்து கொண்டு இருக்கிறது. பாருங்கள். இந்த பெண்மணிக்கு அவருடைய காதுகளில் ஏதோ தொல்லை இருக்கிறது. அவளுடைய காதுகளில் தொல்லை உடையவளாய் இருக்கிறாள். அது சரி. அதனோடுகூட கேட்பதற்கு கொஞ்சம் கடினமாகக்கூட இருக்கிறது. அது உண்மை என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. 143. நான் எப்பொழுதும் அதை பிடித்து விடுவேன். அதை நான் யூகிக்கிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தப்பான எண்ணம் கொள்கிறீர்கள். அதை நான் யூகிக்கவில்லை. வெறுமனே ஒரு நிமிடம் கவனியுங்கள். வெறுமனே உன்னிடத்தில் பேச விரும்புகிறேன். இப்பொழுது பார்ப்போம். அவர் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. அது என்னவாக இருந்தாலும் சரியாக இருந்தது. ஆமென். அது உன்னுடைய காதுகள், பார், ஏதோ ஒரு காரியம் உன்னுடைய காதுகளில் தவறாகப் போய்க் கொண்டு இருக்கிறது. மேலும் உன்னுடைய தலையிலும் ஏதோ ஒரு பிரச்சனையைப் பெற்று இருக்கிறாய். அது ஒரு தலைவலி போல இருக்கிறது. ஒற்றைத் தலைவலி போல் அல்லது ஏதோ ஒன்று, அது சரியாக இல்லையா-? அது மாத்திரம் அல்ல. ஆனால் நீ யாருக்காகவோ ஜெபித்துக் கொண்டு இருக்கிறாய். இன்றிரவு உன்னுடன் யாரோ ஒருவர் வந்து இருக்கிறார். அது சரி. அவள் ஒரு பெண்மணி. வயோதிப பெண்மணி. மிகச் சரியாக இருக்கிறது. அவளுடைய காதுகளில் கூட சிக்கல் உள்ளது. நான் அவளை சரியாக இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னையே அவன் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். ஆம் ஐயா, இன்னொரு காரியம் அவளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. அவளுக்கு முடக்குவாதமும் இருக்கிறது அதுசரி. அது மிகச்சரியாக இருக்கிறது. ரூபி அவள் சுகமடையப் போகிறாள் என்பதை நீ விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாயா அவள் சுகமடையப் போகிறாள் என்று-? நீ விசுவாசிக்கிறாயா நீ சுகமடையப் போகிறாய் என்று-? திருமதி குரோமலி (Cromely)-? ரூபி-குரோம்லி (Ruby-Cromely)-? திரும்பிச் சென்று அவர்களிடத்தில் சொல்லு, நீங்கள் விசுவாசிக் கிறீர்களா-? "நீ விசுவாசித்தால்" இப்பொழுது வெறுமனே விசுவாசி. இப்பொழுது அவளுடைய பெயரை அழைப்பது என்பது ஒன்றுமில்லை. இயேசு பேதுருவிடம் சொல்லவில்லையா-? உன்னுடைய பெயர் சீமோன்-? உன்னுடைய தகப்பனார் யோனா என்று-? பார்க்கிறீர்களா-? பாருங்கள், அது இன்னும் அவராகவே இருக்கிறது. 144. உங்களை எனக்குத் தெரியாது, ஐயா. நாம் ஒருவருக்கொருவர் அந்தியர்களாக இருக்கிறோம். ஆனால் தேவன் உங்களுடைய என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிப்பீரா-? நான் அதைச் செய்வேன் என்றால் நான் அவருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா-? பார்வையாளர்கள் அங்கே உள்ள ஒவ்வொரு மனிதரும் அதே காரியத்தை விசுவாசிப்பீர்களா-? ஏதோ ஒரு காரியம் நடந்தது. பார்வையாளர்கள் இடத்திலிருந்து இல்லை. நான் அதைச் சரியாகப் பெறவில்லை. வெறுமனே ஒரு கணப்பொழுது மீண்டும் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். வேறு ஒருவருக்காக இங்கு இருக்கிறாய், அந்த நபர் இங்கு இல்லை, அவர்கள் இந்த நகரத்தில் இருக்கவில்லை. இந்த மாகாணத்தில் கூட கிடையாது. அவர்கள் கரோலினாவில் இருக்கிறார்கள். அது சரி. அது ஒரு ஊழியக்காரனின் மனைவியாக உள்ளது. அவளுக்குப் புற்றுநோய் இருக்கிறது. அந்தப் புற்று நோய் அவளுடைய மார்பகத்தில் உள்ளது. நீ அவளுக்காக நின்று கொண்டிருக்கிறாய். அவள் சுகமடையப் போகிறாள் என்பதை நீ விசுவாசிக்கப் போகிறாயா-? இயேசு கிறிஸ்து அதை அருளுவாராக. 145. எப்படி இருக்கிறீர்கள்-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். ஆனால் தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்து இன்றிரவு ஜீவிக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா-? அது வெறுமனே இப்பொழுது பார்வையாளர்கள் இடத்திலிருந்து துவங்கினது. அதை இங்கே மேடையில் நிறுத்தி வைத்திருப்பது ஒருவித கடினமாக உள்ளது. அது அப்படியே போய்க் கொண்டு இருக்கிறது. இது பார்வையாளர்கள் ஊடாகப் பரவுகிறது. பாருங்கள். நண்பர்களே நீங்கள் நம்ப முடிந்தால் சரியாக இப்பொழுது தேவனுடைய ஆவி நகர்வதை நீங்கள் காணலாம். நான் இந்த வரிசையில் நிற்கும் இந்த நபர்களுக்காக என்னால் முடிந்தவரை என் கவனத்தை வைக்க முயற்சிப்பேன். நீர் கூட ஒரு அந்நியராக இருக்கிறீர். அது சரியே. மருத்துவமனையில் இருந்தீர்கள்; முதுகெலும்பு நிலைக்காக கொஞ்சம் அறுவை சிகிச்சை நடந்தது. அதுசரி. ஜார்ஜியாவுக்கு திரும்பிச்சென்று மற்றும் சுகமடைய விரும்புகிறீர்களா-? நீங்கள் செய்வீர்களா-? திருமதி ஹோல்கிரன் (Holgren) திரும்பிச் சென்று மேலும் உங்கள் முழு இருதயத்துடன் அதை விசுவாசியுங்கள். 146. அங்கே நின்று கொண்டிருக்கிற உங்கள் முதுகு வலி குணமடைத்துவிட்டது என்று நான் உங்களுக்குச் சொன்னால்-? நீங்க என்னை விசுவாசிப்பீர்களா-? எல்லாம் சரி, திரும்பிச் சென்று மற்றும் வெறுமனே அதை உரிமை கோருங்கள், "உமக்கு நன்றி கர்த்தாவே," என்று சொல்லுங்கள். சென்று விசுவாசியுங்கள். உங்களுக்கும் அதே காரியம் தான் இருக்கிறது. வெறுமனே சென்று விசுவாசியுங்கள். அதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும். உங்களுடைய வயிற்றுப் பிரச்சனையா-? போய் சாப்பிடுங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்கள் என்றால், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட்டார். ஒரு நரம்பு தளர்ச்சி நிலை இருக்கிறதா, ஒரு வயிற்று பிரச்சனையும் கூட தொல்லை கொடுக்கிறதா-? அப்பொழுது நீங்கள் சரியாக முன்னுக்குச் சென்று மேலும் உங்கள் இரவு உணவை உண்ணுங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா-? விசுவாசம் வையுங்கள். இருதய பிரச்சனையை சுகமாக்குவதற்கு தேவனுக்கு ஒன்றுமில்லை. அவர் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிப்பீர்களா-? உங்கள் இருக்கைக்கு திரும்பிச் செல்லுங்கள். மேலும் "என்னை சுகமாக்கினதற்காக உமக்கு நன்றி கர்த்தாவே," என்று சொல்லுங்கள். 147. அங்கே மேலே ஏற முடியாது; ஏனெனில், முடக்குவாதம் காயப்படுத்தும். ஆனால் தேவன் அதை சுகமாக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரியாக திரும்பிச் செல்லுங்கள். மேலும் "உமக்கு நன்றி கர்த்தாவே," என்று சொல்லுங்கள். மேலும் சுகம் பெறுங்கள். நரம்புத் தளர்ச்சியுற்றிருப்பது ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் உங்களுடைய நரம்புத் தளர்ச்சியை கர்த்தரால் சுகப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா-? திரும்பிச் சென்று, 'கர்த்தாவே உமக்கு நன்றி," என்று சொல்லி சுகமாகுங்கள். ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா, எல்லோரும்-? "நீ விசுவாசித்தால்..." நான் உங்களுக்கு ஒரு காரியத்தையும் சொல்லவில்லை என்றாலும் என்ன-? வெறுமனே உங்களுக்கு, நீங்கள் உங்கள் இருதய பிரச்சனையில் சரியாகி விட்டீர்கள் என்று சொன்னால்-? நல்லது முன் செல்லுங்கள். எப்படியாகிலும் நீங்கள் சுகமாகிவிட்டீர்கள் நான் அதை முன்பே சொல்லி விட்டேன். நீங்கள் சுகமாகி விட்டீர்கள் நான் அதை முன்பே சொல்லி விட்டேன். அவர்... இப்பொழுது அதிக நாட்களாகவே இது உங்களை தொல்லைப் படுத்திக் கொண்டு இருக்கிறது. பாருங்கள். மேலும் உங்களுடைய வயிற்றில் புளிப்புத்தன்மை, மேலும் அதைப் போன்ற ஒவ்வொரு காரியமும் இருந்தது. அவர் உங்களை சுகமாக்கப் போகிறார் என்று இப்பொழுது நீங்கள் விசுவாசிக் கிறீர்களா-? சென்று சாப்பிடுங்கள்; சுகமாக இருங்கள். ஒவ்வொருவரும் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா-? 148. இந்த சிறிய சீமாட்டி இங்கே அவளுடைய தலையைத் தாழ்த்தி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இங்கே சரியாக உட்கார்ந்து கொண்டு அவள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறாள். அங்கே ஒரு பெண்மணி அவளுக்கு பக்கத்தில் அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். என்னால் அவளுடைய பெயரை அழைக்க முடியவில்லை. அவள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நபர் தன்னுடைய ஒரு நேசமான ஒருவர் இரட்சிக்கபடும்படி ஜெபித்துக் கொண்டு இருக்கிறார். அது மிகச் சரியாக இருக்கிறது. .....சென்று கர்த்தர் அவர்களை இரட்சிப்பார் என்று உன்னுடைய முழு இருதயத்துடன் நீ விசுவாசிப்பாய் என்றால். மேலும் உன்னுடைய ஜெபத்தின் பதிலை கர்த்தர் உனக்கு மிகச் சரியாக அதைக் கொடுப்பார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டியின் பெயர் என்ன-? என்னால் பார்க்க முடியவில்லை. சரியாக அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்-? ஆமாம். அதை விசுவாசிக்கும் படியாய் அவளுக்கு சொல்லுங்கள். கர்த்தர் அவளுடைய ஜெபத்திற்கு பதில் அளித்தார். ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஆமென், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சந்தேகப்படாதீர்கள், கர்த்தரிடத்தில் விசுவாசம் வையுங்கள். நான் அங்கே பார்த்துக் கொண்டிருக்கிற ரான்-சாத்மன் (Ron sothman) நீங்கள் தான் அங்கே பின்னாடி உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களா-? உங்கள் கரங்களை அங்கே உங்கள் பக்கத்தில் உள்ள அந்த பெண்மணியின் மேலாக வையுங்கள். உங்கள் உடைய சிநேகிதி அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவளுக்கு ஒரு சிறுநீரக தொல்லை இருக்கிறது. சீமாட்டியே நீங்கள் சுகமாகிவிடுவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா-? உங்களுடைய கணவர் அங்கே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் இருவரும் பரிபூரணமான அந்நியர்கள். என்னுடைய ஜீவியத்தில் அவர்களை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அவருடைய கண்களில் கோளாறு இருக்கிறது. அவர் சுகமாகிவிடுவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? உன்னுடைய கரங்களை அவர் மேலாக வை. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா-? இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? கர்த்தரால் வயிற்றுப் பிரச்சனையை சுகப்படுத்த முடியும். நரம்புத் தளர்ச்சியுற்ற வயிறுகளை; அதை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். ஆமென். 149. இங்கு உள்ள எத்தனைப் பேர் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக் கிறீர்கள்-? (மேலும் கீழுமாக, மேலும் கீழுமாக) மனித சரீரத்தில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தின அதே கர்த்தராகிய தேவன், அந்த நாளில் ஆபிரகாமோடு அங்கே நின்று கொண்டிருந்தவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்குள்ளாக அதே கர்த்தர் தான் இருக்கிறார் என்று உங்களால் காண முடிகிறதா-? அதே கர்த்தர் எனக்குள் இருக்கிறார் அவர் கடைசி நாளுக்கு முன்பாக தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு அந்த அடையாளத்தைக் கொடுத்தாரா-? அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? அது தான் அவருடைய வருகையின் ஒரு அடையாளமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? அது தான் ஒரு அடையாளம். இந்த உலகம் சீக்கிரத்தில் அழிக்கப்படப் போகிறது என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? மேலும் ஆயிர வருட அரசாட்சி அமையப் போகிறது என்றும் மகத்தான தேவனோடு அரசாளும்படி நாம் செல்லப் போகிறோம் என்றும் நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? அது தான் கடைசிக் கால அடையாளம். இந்த இரவுப்பொழுதிலே அவர்களுக்குள் அந்த நம்பிக்கையுடன் கர்த்தரோடு இளைப்பாரும்படி, எத்தனை பேர் ஆபிரகாமின் வித்துக்களாக இருக்கிறீர்கள்-? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, "விசுவாசிக்கிறவர்களை அந்த அடையாளங்கள் தொடரும் (ஆபிரகாமின் வித்துக்களுக்கு) என்று சொன்னார். நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது உங்களிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. அது ஒரு காரியமே கிடையாது பாருங்கள். வெறுமனே உங்களுக்குச் சொல்கிறேன்; மேலும் வெளிப்படுத்துகிறேன், பாருங்கள். அது உங்களுடைய விசுவாசத்தை எடுத்து சுகமளித்தலைச் செய்யும், பாருங்கள். உங்கள் விசுவாசம் அதைச் செய்கிறது. பாருங்கள். தேவன் கொடுத்த வரத்தின் மேல் எனக்கு உள்ள விசுவாசமே. அதை வெளிப்படுத்தினது. ஏனெனில் அது தேவன் செய்த வாக்குத்தத்தம். அதன் பிறகு தேவன் அவருடைய வார்த்தையின் மூலமாக அந்த வாக்குத் தத்தத்தை எனக்கு வெளிப்படுத்தினார், மேலும் நான் அந்த வாக்குத் தத்தத்தில் நிலைத்திருக்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்து கொண்டீர்களா-? நான் அந்த வாக்குத் தத்தத்தில் தரித்து இருக்கிறேன். 150. அந்த சிறிய சீமாட்டி அங்கே சிறுநீரக பை தொல்லையுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் உங்களை சுகமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரியே-! உங்களுடைய வாஞ்சையை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்; தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் ஜெப அட்டையைக் குறித்து கவலைப்படுகிறீர்களா-? எல்லாவற்றிற்கும் இனி மேல் நீங்கள் எதையும் கொண்டு இருக்கத் தேவையில்லை, பாருங்கள். தேவன் உங்களைச் சுகமாக்கினார். இப்பொழுது நான் என்ன சொல்கிறேன் என்று நீங்கள் பார்க்கவில்லையா-? அது வெறுமனே எல்லா இடத்திலும் இருக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் கரங்களை ஒருவர் மேலாக ஒருவர் வையுங்கள். வெறுமனே ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். நான் உங்கள் ஜெபத்தை கேட்கப் போகிறேன். ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். உங்கள் கரங்களை ஒருவர் மேலாக ஒருவர் வையுங்கள். நீங்கள் எப்படி ஜெபிக்கிறீர்கள் என்றும் நான் பார்க்க விரும்புகிறேன். உங்கள் கரங்களை வையுங்கள்... இங்கே இந்த சிறிய குழு ஜெப வரிசையில் நின்று கொண்டு இருக்கிறவர்களே திரும்புங்கள், ஒருவருக்கு ஓருவர் திரும்பி, உங்கள் கரங்களைக் கொடுங்கள்... இப்பொழுது ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். வெறுமனே... நான் நீங்கள் ஜெபிப்பதைக் கேட்க விரும்புகிறேன். உங்களுக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டாம், இப்பொழுது உங்கள் கரத்தை வைத்திருக்கிறவருக்காக ஜெபியுங்கள், அது தான் அது. மண்டபத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறவர்களும்; எல்லா இடத்திலும் உள்ளவர்களும் உங்கள் கரத்தை ஒவ்வொருவர் மேலாக வையுங்கள். 151. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த கூட்டத்தை இந்த உச்சக்கட்ட நிலையின் தருணத்திற்கு கொண்டு வருகிறோம். பிசாசு தடை செய்வதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் அவன் செய்வான். ஆனால் கர்த்தாவே, நீராகவே இருப்பதை வேதாகம அடையாளங்களினால்; பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உம்முடைய வார்த்தையினால் காட்டீனீர். மெய்யாகவே வேதாகமத்தின் மூலமாக, வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, மேலும் இந்தக் காரியங்கள் எல்லாம் கடைசி நாட்களில் நிறைவேறும் என்று சொன்னீர். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, இருதயங்களையும், பெயர்களை யும், வியாதிகள், அவை என்னவாக இருந்தது. என்ன அது, அது என்னவாக இருக்கும் என்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர். நீரே அதை எல்லாவ ற்றையும் அறிந்திருக்கிறீர். மேலும் இங்கே உட்கார்ந்து இருக்கிற இந்த மக்கள் அவர்கள் உம்முடைய மக்கள்: அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உம்மையே விசுவாசிக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மேலாக ஒருவர் கரத்தை வைத்திருக்கிறார்கள். நீர், "விசுவாசிக்கிற வர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும், வியாதியஸ்தர்கள் மேல் கரத்தை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்," என்று சொன்னீர். இப்பொழுது என்னுடைய ஜெபத்தை அவர்களுடையதுடன் நான் வைக்கிறேன். நானும் அவர்களுடன் சேர்ந்து விசுவாசிக்கிறேன். அவர்கள் என்ன கேட்டு கொள்கிறார்களோ நீர் அதை அவர்களுக்குக் கொடுக்கப் போகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் உம்முடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். "உமக்கு முன்னால் சரியாக நடப்பவர்கள் இடமிருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் நீர் தடுக்கமாட்டீர்". 152. இப்பொழுது சாத்தானே, நாங்கள் உன்னிடத்தில் சவால் விட இந்த தருணத்தில் வருகிறோம். நீ தோற்றுப் போனாய். கல்வாரியில் இருந்து நீ தோற்கடிக்கப்பட்டாய். ஒரு பொய்யைத் தவிர உன்னிடத்தில் சலுகை உள்ளது என்று ஒரு விஷயமும் இல்லை. மேலும் நாங்கள் இனிமேல் எந்தப் பொய்யை யும் சொல்ல உன்னை விடமாட்டோம். நாங்கள் கர்த்தாராகிய தேவனுடைய வார்த்தையை வைக்கிறோம். கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது. "விசுவாசிக் கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன," இந்த மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக அறிக்கை செய்கிறார்கள், கர்த்தருடைய இயற்கைக்கு மேம்பட்ட வல்லமை அவர்கள் ஜீவியங்களை மாற்றுவதில் அவர்கள் மூலம் துரிதப்படும் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருவருக்கு ஓருவருடன் அனுதாபம் உண்டு. அவர்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓ. சாத்தானே, தீமையான ஒருவனே, நீயே இந்த மக்களை வியாதியுள்ளவர் களாகச் செய்தாய். இந்த மக்களை விடுவிக்கும்படியாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உனக்கு நாங்கள் கட்டளை இடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களை விட்டு வெளியே வா. அவர்கள் போவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களை விட்டு வெளியே வா. ஆமென். இப்பொழுது உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். தேவனுக்கு துதியை செலுத்துங்கள். உங்கள் கரங்களை அவருக்கு உயர்த்துங்கள். நீங்கள் முடமாக இருந்தாலும் அதைப் பற்றி எனக்கு அக்கரை இல்லை எப்படியாகிலும் எழுந்து நில்லுங்கள். உங்கள் கரங்களை உயர்த்தி தேவனுக்கு துதியைச் செலுத்துங்கள்.